Posted by: VenMaThI
« on: July 01, 2026, 09:51:52 PM »உலகமே உழைப்புல தான்
உசுரோட சுத்துது...
உழைப்பால உயராதோறும் இல்லை... உழச்சவன் உறுப்படாம போனதும் இல்லை....
ஏர் புடுச்சு உழுறவன் தான்..
ஊருக்கே சோறு போடுறான்..
ஊட்டுல..... ஆத்தா உழைப்புலதான்
குடும்பமே நிம்மதியா வாழுது....
தான் ஒசரவும் உழைப்பு வேணும்
தன்ன சார்ந்தவங்க ஒசரவும் உழைப்பு வேணும்
உழைப்பால் ஒசந்தவங்க கதையெல்லாம்
காலத்துக்கும் நம்ம காதுல ஒலிச்சுட்டேதான் இருக்கும்...
உப்பில்லா பண்டம் குப்பையிலன்னு சொல்வாங்க
உழைப்பில்லா உயர்வும் அதுக்கு சமமே.. உழைக்காம
உக்காந்து சாப்பிட்டா உடம்புல ஒட்டாதாம்...
உழைச்சு அலுத்த ஒடம்ப நோய்நொடி அண்டாதாம்...
நீ செய்யுற வேலை என்னவாவேணா இருக்கட்டும்
அடுத்தவனை ஏச்சு பொழைக்காம உழைச்சு பொழச்சா போதும்...
அரை வயிறு கஞ்சி குடிச்சாலும்
கவுரவமா இந்த உலகத்துல நடமாடலாம்...
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்...
அடுத்தவன் பசியை போக்காத காசும் நஞ்சுதான்....
உன் உழைப்பால உன் குடும்பம் தழைக்கட்டும்
அதில் எஞ்சியதைக்கொண்டு.. அடுத்தவர் குடும்பமும் பசியாரட்டும்...
தானத்தில் சிறந்தது அன்னதானம்
போதும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுப்பது...
வயிறு நெறைஞ்சுருச்சு போதும்னும் சொல்வாங்க
பசியை போக்கின உம்மையும் உம் குடும்பத்தையும் மனசார வாழ்த்தவும் செய்வாங்க
உழைப்பால் நாமும் உயருவோம்
உழைத்து ஈன்றதை கொடுத்து
அடுத்தவர் அன்பையும் பெறுவோம்
வாழ்வோம் வாழ்விப்போம்....

