Posted by: Yazhini
« on: May 27, 2026, 03:18:00 PM »நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
அன்பை வெளிப்படுத்த தெரியாமல்
மௌனித்த நேரத்தில்
என் இதயத்தை நானாகவே
உடைத்து கொள்கிறேன்...
அன்பை அளவுகோளில்லாமல் எதிர்ப்பார்த்து
எதிர்பார்ப்பு என்னும் கல்லைக்கொண்டு
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
கடந்த கால நினைவுகளோடும்
நிகழ்கால நிஜங்களோடும் போராடும்போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
கனவுகளுக்கும் தவிப்பிற்கும் இடையே
தத்தளிக்கும் படகாகும் போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
உள்ளேழும் மனவெழுச்சி சிறையில் தப்பிக்க
நிழலுலக சிறையில் அடைபடும் போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
காதலுக்கும் ஆசைக்கும் உள்ள
இடைவெளியை ஆராய்ந்து பார்க்கும்போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
கண்ணீரில் கரைந்திடும் கனவுகளை
மனதின் ஓரத்தில் புதைக்கும் போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
நானாக தான் உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை....
மீண்டும் அதை ஒட்ட வைத்தாலும்
விரிசல்கள் மேலும் அதனை
உடைத்து சிதைக்கின்றது 💔💔💔.
என் கண்ணாடி இதயத்தை
அன்பை வெளிப்படுத்த தெரியாமல்
மௌனித்த நேரத்தில்
என் இதயத்தை நானாகவே
உடைத்து கொள்கிறேன்...
அன்பை அளவுகோளில்லாமல் எதிர்ப்பார்த்து
எதிர்பார்ப்பு என்னும் கல்லைக்கொண்டு
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
கடந்த கால நினைவுகளோடும்
நிகழ்கால நிஜங்களோடும் போராடும்போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
கனவுகளுக்கும் தவிப்பிற்கும் இடையே
தத்தளிக்கும் படகாகும் போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
உள்ளேழும் மனவெழுச்சி சிறையில் தப்பிக்க
நிழலுலக சிறையில் அடைபடும் போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
காதலுக்கும் ஆசைக்கும் உள்ள
இடைவெளியை ஆராய்ந்து பார்க்கும்போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
கண்ணீரில் கரைந்திடும் கனவுகளை
மனதின் ஓரத்தில் புதைக்கும் போது
நானாக உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை
நானாக தான் உடைத்து கொள்கிறேன்
என் கண்ணாடி இதயத்தை....
மீண்டும் அதை ஒட்ட வைத்தாலும்
விரிசல்கள் மேலும் அதனை
உடைத்து சிதைக்கின்றது 💔💔💔.

