Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: RajKumar
« on: Today at 01:22:46 PM »

அன்பு காதலியாய் ஆசை மொழி பேசும்
எல்லையற்ற பாசம் காட்டும் என் அன்பானவளே

அருகில் இருந்தால் அரவணைப்பும்
தூரத்தில் இருந்தால் உன் நினைவும்
நீங்காத நினைவுகள் எப்போதும் இருக்கும் அன்பானவளே

என் இன்பத்திலும் துன்பத்திலும் சரிபாதி பகிர்ந்து
ஆறுதல் பேசும் உன் அன்பு வார்த்தைக்கு
இணை இவ்வுலகில் எதுவும் இல்லை அன்பானவளே

பல நேரங்களில் உன் மனதில் இருந்து வரும் அன்பு
ஆறுதலாய் என் மனக் காயங்களுக்கும்
இருக்கிறது அருமருந்தாக என் அன்பனாவளே

கண் மூடினால் கனவில் உன் நினைவும்
கண் திறந்து இருந்தால் என் உயிரில் நீ அன்பானவளே

அந்த நிலவு கூட மாதத்தில் பாதி நாள் தேயும்
கோடைகாலத்தில் நதி கூட நீர் இன்றி வற்றும்
ஆனால் உன் பாசக் கடலுக்கு
என்றென்றும் இல்லை அழிவு அன்பானவளே

ஆறுதல் தேடி எங்கெங்கோ அலைந்தேன்
கடைசியில் என் மனம் ஆறுதல்
பெற்றது உன் மடியில் அன்பானவளே

நீ என் அன்பானவள் என்றும் என் நினைவிலும்
உன் இதயத்திலும் நிலைத்து இருப்பேன்
உன் அன்பு காதலனாக காலம் முழுவதும்

Posted by: Yazhini
« on: Today at 09:32:34 AM »

ஊடல் ❤️ 💜 ❤️

பொய்யான கோபத்தில் விழிகள் பனிக்க
என்னவனின் கைகள் அனிச்சையாய்
என்னை நெருங்கி விடுகிறதே...
ஊடலும் அளவிட முடியா அன்பே...

மௌனமாக கழியும் பொழுதுகளில்
என்னவனையும் அதிகமாக பேச செய்துவிடுகிறதே...
என்னவனின் பொழுதை களவாட செய்யும்
ஊடலும் என் உற்ற தோழியே...

என்னவனிடம் எப்போதும் கேட்கும் கேள்வி...
என்மீது அன்பு இருக்கிறதா....
இவ்வினாவிற்கு விடையாக அமையும்
ஊடலும்  அன்பின் அளவுக்கோளே...

என்னவனின் உள்ள ரகசியங்களையும்
என் மீதான காதலையும்
அவனறியாமல் கொட்டிவிட செய்யும்
ஊடலும் என் ரகசிய உளவாளியே...

காதலால் ஊடல் அழகா...
ஊடலால் காதல் அழகா...
என்னவனின் நெருக்கத்தை மேலும் அதிகமாக்கும்
காதலும் ஊடலும் இணைப்பிரியா உணர்வுகளே...

பெருங்காதலுக்கு வித்திடும் ஊடல்...
நிலையற்ற தன்மையை உடைக்கும் ஊடல்...
இடைவெளியைக் குறைக்கும் ஊடல்...
காதலின் ரகசிய வெளிப்பாடே
ஊடல்...... ❤️ ❤️ ❤️
Posted by: Rahmathulla
« on: Today at 12:36:56 AM »



என்றும் உன் நினைவில்

என்னவள் என்றுமே தனித்துவமானவள்..

அவள் சிரிப்பினை விரும்பும் நான்..

அவள் பேச்சை ரசிக்கும் நான்..

அவள் குணா அதிசயங்களை
விரும்பி அவளிடம் நாள் தோறும் பேசி நாளும் என் மனம் ஒரு போதும் அழுத்ததிலை..

 என்னவள் மீது அளவு கடந்த பாசம்..

அவள் கண்ணீர் விட கூடாது என்று நினைக்கும் நான்..

ஒரு நாள் என் கோப குணத்தில் அவள் அழுகைக்கு நான் காரணம் ஆனேன்..

என்று என்னும் போது என் மனதில் நீங்கா  பாரம்..

இன்று அவள் என் பக்கத்தில் இல்லை..

மனம் உருகி வருந்துகிறேன்..

இருப்பினும் ஏனோ அவள் மனம் மாறி பேசவில்லை..

என்னவள் தேடி தேடி கிடைத்த நல்ல உள்ளமும் நீ தான்..

இனி தேடினாலும்  கிடைக்காத நல்ல உறவுவும் நீ தான்..

என்னவளுடன் பேச ஏன் எனக்கு இத்தனை ஆசை..
என்று தெரியவில்லை..

என் ஒட்டுமொத்த உலகமாய் ஒரே பார்வையில் இருப்பவளும் என்னவள் தான்..

நிஜத்தில் என்னவளே தொலைத்து விட்டேன்..

என்றும் உன் நினைவுகளுடன்

ப்ரியமுடன்
ரஹ்மத்துல்லா
Posted by: Ashik
« on: Today at 12:09:19 AM »

யார் நீ என்றேன் !!
என் காதலி என்றாள் !!
வேண்டாம் விலகி செல் என்றேன்
ஏனோ வருடும் தென்றாலாய்
என்னை சுற்றியே வந்தாள் !!
போதும் கடந்து செல் என்றேன்
ஏனோ மழையை பொழியும் மேகமாய் அன்பை எனக்கு பொழிந்தாள் !!

எதற்கு என்றேன் காதல் என்றால் !! இணைவோமா என்றேன்
இனையவில்லை என்றால்,
உயிர் துறப்பேன் என்றாள் !!
நம்பலாமா என்றேன்
என்னை தவிர வேறு
உலகமில்லை என்றாள் !!

கற்று கொடு என்றேன்
காதலை எனக்கு சொல்லி தரும்
ஆசானாய் மாறினாள் !!
மாற்றிவிட்டாய் என்றேன்
ஆம் என்னுள் அவளும்
கலந்துவிட்டாள் என்றாள் !!

அடுத்து என்ன என்றேன்
திருமணம் என்ற பந்தம் என்றாள் !!
நடக்குமா என்றேன்
அவளின் பெற்றோரிடம்
சம்மதம் வாங்க சொன்னாள் !! சம்மதிக்கவில்லை என்றேன் !! காத்திருப்போம் என்றாள் !!

வருடங்கள் ஓடியது என்றேன் !!
வாழ்க்கை எல்லாம் உனக்காக அர்ப்பணிப்பேன் என்றேன் !!
யாருக்கு திருமணம் என்றேன் !!
தன் பெற்றோர் காட்டிய மணமகனுடன் தனக்கு என்றாள் !!

நம் காதல் என்றேன் !!
காலம் கடந்து விட்டது என்றாள் !!
ஏன் உன் கண்களில்
கண்ணீர் என்றேன் !!
உன்னை விட்டு பிரிவதால் என்றாள் !! சத்தியம் ஒன்று வேண்டும் என்றேன் !!
என்ன சத்தியம் என்று கேட்டாள் !!
இனி ஒரு முறை என் முன்னே வர மாட்டேன்
என்ற உறுதி வேண்டும் என்றேன் !! கண்ணீருடன் தனக்கு காத்திருந்த
காரில் ஏறி சென்றாள் !! 💔
Posted by: Thenmozhi
« on: April 13, 2026, 10:17:50 PM »

    அவனருகில் நான் !

அவனருகில் நான் !
உலகமே அவன் என
எண்ணி என்னை மறந்து
என்னில் அவனை எண்ணி
நாட்களை கழித்தேன் !

நாட்கள் உருண்டு ஓடின
வாழ்வாதாரம் தேடி சென்ற என்னவன்
ஏனோ தன் ஆரோக்கியத்தை
தொலைத்து திரும்பி இருக்கிறான் !!
அவனருகில் நான் !
மெலிந்த அவன் தேகம் கண்டு !
ஆறென ஓடியது என் கண்ணீர் !

தன் கரங்களைக் கொண்டு
என் கண்ணீரை துடைத்தவன்
ஏனோ வார்த்தைகள் கொண்டு
என் சோகத்தை மாற்றவில்லை !
என்னவன்  கரங்களைப் பற்றிய
தருணம் உணர்ந்து கொண்டேன்
அவனின் கடின உழைப்பினையும்
அவன் அனுபவித்த இன்னல்களையும்!

அவன் கண்களில் ஒரு கலக்கம் !
அதனால் எனக்குள் ஒரு பதற்றம் !
என்ன ஆயிற்று உனக்கு என்றேன் !
ஒரு அன்பு அணைப்பைக் கொடுத்து
என்னை கடந்து சென்றான் மௌனமாய் !

அவனருகில் நான் !
உயிர் இருந்தும் சிந்தனை அற்று !
அவனின் நிலை கண்டு நிலைகுலைந்து !
மீண்டும் மீண்டும் கேட்டேன்
என்னவனே உன்னை ஏன் இப்படி
வதைத்து கொண்டாய்? என்று !
அவனோ சலனமின்றி
வாங்கி வந்த வரம் என்றான் !

அயலகம் செல்லும் வரை
உன்னை அசராமல் இரசித்த
என் கண்களுக்கு தண்டனையா ?
இந்த நிலை என்றேன் !
நமக்காக உழைத்ததில்
என்னை மறந்தேன்
இன்று உடல் சீர்கெட்டு
என்னவள் மட்டும் எனக்குப் போதும்
என்று வந்தேன் என்றான் !

அவனருகில் நான் செய்வதறியாது
கடவுள் பிரார்த்தனையுடன் மருத்துவமனையில் !!
உழைக்க வந்த என்னவனுக்கு
பரிசாய் தீராத புற்று நோய்
கொடுத்து அனுப்பியது
எண்ணெய் வளம் நிறைந்த அயலகம் !

கணவனை சாவில் இருந்து மீட்ட சாவித்திரியாய் நான் மாறி
உன்னை நலத்தோடு மீட்டெடுப்பேனடா
என்னவனே என்றேன் !
உன்னை தவிர வேறு மருந்தில்லை
எனக்கு என்று என்னை
கட்டியணைத்தான் என்னவன் !
அந்த தருணத்தில் உறுதுணையாக
இருந்தது நம் காதல் மட்டுமே!

என்னவனே பணமோ பொருளோ
வேண்டாம் எனக்கு !
வாழ்நாள் எல்லாம் உன்னுடன்
இருக்கும் வரமே போதும்
இனி வேண்டாம் அயலகம் என்றேன் !

வாழ ஆயிரம் வழி்கள்
உண்டு தாயகத்தில் !
ஆரோக்கியம் இளமையை
தொலைக்க அயலகம் எதற்கு !

ஆம் அவனருகில் நான் !
இனி வாழ்நாளெல்லாம் !
நொடி கூட பிரியாமல்
அவனருகில் நான் !
உங்களின் வாழ்த்துக்களுடன் !



















Posted by: Shreya
« on: April 13, 2026, 10:17:18 PM »

                                    ஆராத அன்பு


தொடங்கும் போதே முற்றுப்புள்ளி வைக்கும்
நம் முதல் சந்திப்பு..
இதுதான் நமக்கான கடைசி நொடியா?
இதயம் சொல்லத் துடிக்குது புதிராக!

​ஆயிரம் வார்த்தைகள் தொண்டையில் முட்ட
அழுகை மட்டும் முந்திக் கொள்ளுதே!
விக்கித் திணறி நான் விம்மி நிற்க
துடைப்பது நீ என் கண்ணீரை அல்ல..
உன் தீண்டல் தரும் அந்த பாதுகாப்பு
இனி ஒருபோதும் எனக்கு கிடையாதோ?

​நீதான் எனக்கு எல்லாமே,
என் உயிர் மூச்சின் ஆதாரமே,
சொல்லாமலே என் துயர் அறிவாய்,
என் சிரிப்பை கண்டே மனம் நிறைவாய்!

என் மௌனம் கண்டு தவிப்பவன் நீ,
என் சுவாசத்தின் அதிர்வை உணர்பவன்,
கனவில் மட்டுமே என்னைத் தாங்கியவன்,
நேரில் இன்று ஏனோ மாயம் செய்கிறாய்!

​தவறுகள் செய்தால் கண்டிப்பாய் தாயாய்,
தவறிப் போகாமல் காத்திடுவாய்,
என் குறும்புத்தனம் தாளாமல் போனாலும்,
அதை ரசிப்பதில் உனக்கு ஈடு இல்லை!

​என் குறைகளையும் அழகாய் நேசிப்பாய்,
என் திமிரையும் கூட அழகாய் ரசிப்பாய்,
அன்பால் என் பிடிவாதம் உடைப்பாய்,
என் மீது உனக்கு அத்தனை பொறாமை,
அவன் மட்டுமே வேண்டும் என்ற பேராசை!

​செல்லக் கோபம் கொண்டு முகம் திருப்புவாய்,
மறுநொடி பாசத்தில் என்னை உருக்குவாய்,
​காலம் நம்மை சோதித்த போதும்,
என்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாய்!

​தீராத காதலை நெஞ்சில் சுமந்து,
என்னை முழுதாய் உணர்ந்தவன் நீ,
சிந்திக்க வைத்து எனை செதுக்கியவன்,
என்னை எனக்கே உணர்த்திக் காட்டியவன்!

​தூரங்கள் நம்மை பிரித்தாலும்,
கோபங்கள் மௌனமாய் நின்றாலும்,
எனக்காகவே பிறந்த என் அன்பன் நீ,
என் பிறவியின் அர்த்தமானவன்!

​கரம் கோர்த்த காலங்கள் முடிந்து போக
கண்ணீரைத் துடைத்து விடைபெறுகிறாய்..
உன் அணைப்பிலேயே நான் செத்து மடிய
விதி செய்த சதியில் உறைகிறேன் இன்று!

​உயிர் மட்டும் உடலில் எஞ்சியிருக்க
என் உயிரான நீயோ விலகி போகிறாய்..
கடைசி தீண்டல் முடிந்த அந்த நொடி
என் வாழ்வின் அஸ்தமனம் தொடங்கிடுதே!

​இறுதி சந்திப்பின் இந்த ஒரு துளி
மரணத்தை விடவும் கொடியது..
நீ போன பின் எஞ்சியிருப்பது நானல்ல,
நீ துடைத்து எறிந்த என் இதயத்தின் சிதறல்கள்!!!
Posted by: Oonjal
« on: April 13, 2026, 10:17:12 PM »

என்னை காண்பதற்காக வருவாய்
வெகு தொலைவில் இருந்து  நீ !
உன் காரின் சத்தம் கேட்டு
இதோ நீ வந்து விட்டாய்
என்று ஆர்ப்பரிக்கும் என் மனம் !
என் மனதை உணர்ந்தவனாய்
நீயும் வருவாய் என் அருகினில் !

நீ என்னிடம் பேசாமல் அமைதியாக
நின்றால் கூட உன்
கண்களின் பாஷையை
உணர முடியும் என்னால் !
உன் அருகினில் என் வாய்மொழி மௌனமாகி உணர்வுகள்
மட்டுமே பேசும் !!

நீ என்னருகில் வந்தாலே
என் கண்கள் தானே
மூடி கொள்ளும் !
வெட்கத்தால் சிவக்கும்
என் முகத்தை நீ இரசிக்கிறாய்
என்பதே என் கண்கள்
திறந்து கொள்ளாமைக்கு காரணம்!

இதோ நீ உன் கரங்களில்
இருக்கும் வெள்ளை கைக்குட்டை கொண்டு
என் கன்னம் தீண்டுகின்ற இந்த நொடி
அப்படியே உறைந்து போனால் ....
என்ன என்று என் மனம் துடிக்கும் துடிப்பு உனக்கு கேட்கிறதா??

உன் கைக்குட்டையின்
நிறத்தை போலவே
நீயும் வெண்மனதின்
சொந்தகாரன் என்பதால் தானே
உன் மீது நேசம் கொண்டேன்!

விழி மூடிய நிலையிலும்
நான் காண்பது  உன்
உருவத்தை தான் !
கனவிலும் நினைவிலும்
என் நாயகன் நீ தானே !

என்னை தீண்டும் உன் கரத்தினை
அணையிட்டுக் கொண்டேன்
என் கரங்களால்  !
நான்  கரத்தில் அணிந்திருக்கும்
கைக்கடிகாரத்தைப் பார்த்ததும்
உன் கண்களில் ஓர் மின்னல் ....
உனது முதல் பரிசல்லவா
இக்கடிகாரம் !

உன்னை காண வரவே நான் அலங்கரித்த என் நெற்றி பொட்டு
கண்களில் இட்ட மை
கைகளில் அணிந்த
வண்ண வளையல்கள்
உனக்கு பிடித்த வர்ணத்தில்
அழகிய சுடிதார்
ஒரே நொடியில் அனைத்தையும்
இரசிக்கும் உன் கண்கள் !

பக்கத்தில் இருக்கும்
மர நிழலில் அமர்ந்து
பல கதைகள் பேசி சிரித்தோம்
நேரம் போவது தெரியாமல் !

கிளம்பும் நேரம் நம் கண்களில்
சிறு கவலை இருந்தாலும்
அதையும் மீறிய ஒரு சந்தோஷம்
இனி நாம் இரகசியமாய்
சந்திக்க தேவையில்லை
அடுத்த சந்திப்பு நாம் இருவரும்
ஆவலோடு எதிர்பார்க்கும்
நம் திருமண மேடையில் தான் என்று!
Posted by: VenMaThI
« on: April 13, 2026, 10:17:00 PM »

காதலிச்சு தான் கண்ணாலம் முடிச்சோம்
எப்போமே ஒண்ணா வாழணும்னு மனசுல நெனச்சோம்
என்ன சோதனை வந்தாலும் எதிர்த்திட துணிஞ்சோம்
ஜாடிக்கு ஏத்த மூடியா நாங்க இருவரும் எனஞ்சோம்....

என்னடா இவ்வளவு lateah எழும்புறா ன்னு மாமியாரும்
காப்பி தண்ணில சக்கர பத்தலேன்னு மாமனாரும்
ஆபீசுக்கு போக நேரம் ஆச்சு இன்னும் சமையல் முடியலைன்னு கொழுந்தனும்
குளிக்க இன்னும் சுடுதண்ணி போடலன்னு கொழுந்தியாளும்....

மாத்தி மாத்தி என் மேல் குற்றம் அடுக்க
அடுக்கலையில் சமையலுடன் நானும் அவிஞ்சுட்டு தான் இருந்தேன்..
எனக்கென்ன 10 கைகளா இருக்கு
சராசரி மனுஷி தானேன்னு மனசுல தோணுனாலும்
கட்டிக்கிட்ட மனுஷன நெனச்சு மனச தேத்திக்க தான் முடிஞ்சுது...

அன்று ஞாயிற்றுக்கிழமை.. எனக்கான...இல்லை இல்லை எங்களுக்கான நாள்..

அவசர அவசரமா எழுந்து.. என்
சுட்டிக்குட்டிய தூக்கி இடுப்புல போட்டு
அவனுக்கான பொருட்கள் அடங்கிய பைய தூக்கி தோளுல போட்டுட்டு
வாயா போலாம்ன்னு என் புருஷனயும் கூட்டிட்டு
என் அம்மா வீட்டுக்கு போனேன்

சுட்டிய அங்க விட்டுட்டு நானும் அவரும் வெளிய போனோம்
எது மாறினாலும் வாரத்துல இந்த ஒரு நாள்...
நானும் அவரும் மட்டுமே
என்பது மட்டுமே
மாறாமல் போகிறது என் வாழ்க்கையில்..

நாள் முழுதும் அவருடன் இன்பமாய் கழித்து
மாழைப்பொழுதில் மங்கிய குரலில் சொன்னேன்.. என்னால முடியலைங்க..
எல்லாரும் என்னையா பாடா படுத்துறாங்க..
சிறு நொடியும் சிந்திக்காமல்...

என் முகத்தை பார்த்து சிரித்தபடி
தன் கைகளை கொண்டு என் கண்ணங்களை வருடி
கொஞ்ச காலம் பொறுத்துக்கோ
எல்லாம் நாம நெனச்ச மாதிரி மாறும்...

முடியாத காலத்தில் நீ கவனிக்கும்போது என் பெற்றோரும்
தனக்கென ஒரு மனைவி வரும்போது என் தம்பியும்
அடுத்த வீட்டிற்கு மருமகளாய் போகையில் என் தங்கையும்
நான் புரிந்து கொண்டதை விடை அதிகமாய் உன்னை புரிந்து கொள்வார்கள்
அதுவரை எனக்காக பொறுத்திரு...

உனக்காக நானும் எனக்காக நீயும்
எதையும் தாங்கி முன்னேறி நடப்போம்ன்னு சொன்னாரு ...
"காலம் ஒரு நாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்" ன்னு
என்றோ யாரோ பாடிய பாடல் தூரமாய் எங்கோ இசைக்க ...

என் கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்தது
அவருக்கு பேரானந்தமாய் போனது....
எனக்கோ...
என் கவலைகள் எல்லாம் கருகி காற்றில் கறைந்து போனது....❤️❤️❤️❤️❤️
Posted by: Forum
« on: April 11, 2026, 11:04:45 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 401

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்