Posted by: TiNu
« on: Today at 12:41:30 PM »வேற்றுமையில் ஒற்றுமையா ?
==========================================
பூந்தோட்டத்தில் அடுக்கடுக்காய் பாத்திக்கட்டி
பல வித மலர்களை பத்தியம் போட்டு
மண்ணின் பதம் பார்த்து.. நீர் பாய்ச்சி..
பக்குவமாய் பயிர் வளர்த்தேன்...
நாட்கள் செல்ல செல்ல பூச்செடி..
பயிர்கள் யாவும் வளமுடன் செழித்து..
பல வண்ண வண்ண பூக்கள் மலர்த்திருக்க..
நானும் மனதினில் கர்வம் கொண்டேன்..
சரி,
இன்று நாம்..நம்ம தோட்டதை காணலாமென
எண்ணம் எழ, மனமகிவுடனே.. கிளம்பினேன்..
ஆனந்த பெருமிதம்.. என் மனதில் ஊஞ்சல் ஆட.
ஒவ்வொரு பாத்தியாக மலர்ந்திருந்த மலர்களை பார்த்தேன்.
என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை..
அவ்வளவு கொள்ளைஅழகு வயல்முழுவதும்.
நடந்து வந்து கொண்டிருந்த பொழுது... என் பின்னே
யாரோ கிசுகிசுப்பது போல் ஓர் உணர்வு..
அங்கே திரும்பி பார்த்தேன்... அதிர்த்தேன்..
செந்நிற வண்ண மலர்களுக்கு இடையில்..
தன்னந்தனியான ஒற்றை வெண்ணிற மலர்..
கிசுகிசுப்பது மலர்களா? அருகினில் சென்றேன்..
செந்நிற மலர்களில் ஒன்று சொன்னது- நீ வேறு
நிறமானாலும்.. எங்களுடைய நீர்நிலத்தை ..
உனக்கு பங்கிட்டு கொடுத்து உதவி இருக்கின்றோம்..
பார்த்தாயா? என்றது சொன்னது செருக்குடனே..
வெண்ணிற மலரோ பதிலளித்தது-இது
உன்னால் அல்ல.. விவசாயியின் தவறால்..
அவரின் கவனசிதறலே.. நான் இங்கே..
உன் கருனை பேச்சு எனக்கு தேவையற்றது..
நம் கூடத்தில் ஒருவராக அரவணைத்து
கொண்டாலும்.. இதற்க்கு நன்றியில்லையே..
இம்மலர், நம் நல்ல மனதை புரிந்து கொள்ளாது..
இப்படி நம் மனம் புண்பட பேசுகிறதே.. எரிச்சலுற்றது..
நாற்றுகளின் தன்மையறியாது.. தவறாக..
பாத்தியில் நடவுசெய்தது என் தவறே.
மலர்களின் உரையாடலில்.. ஒன்றுமட்டும்
என் மனதை இரணமாய் கிழித்தது..
ஏதோ ஒரு காரணமாய், தன் இனம்விட்டு
தன் நிலம்விட்டு, இடம்பெயரும் மனிதர்ளை..
நாம் எங்கனம் நடத்துகின்றோம்.. யோசித்தேன்..
நம்முள் ஒருவராக.. நினைத்தோம்? அரவணைத்தோமா?
அந்நியர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம் என்றே
இறுமாப்பில் இருக்கின்றோமே - செந்நிறமலர்போல..
வெண்ணிற மலரின் கூற்றுப்படி.. நம் எண்ணம் தவறல்லவா?
என் அழுகடைத்தே சிந்தனையை எண்ணி.. நாணி நின்றேன்
நம் எண்ணத்தை வளமுள்ளதாக மாற்றுவோம்...
வேற்றுமையில் பாகுபாடு, பிரிவுகளை இல்லா.. ஒற்றுமை காண்போம்...
நம் எண்ணத்தை தூய்மையாக்கி.. சமமாக வாழ்வோம்..
சமத்துவமே உயிர்நாடியாக வாழ்த்து காட்டுவோம்

