Posted by: Yazhini
« on: Today at 03:24:52 AM »சாயம் பூசிக்கொள்ளும் இடத்திலும்
தன்னிலை மாறா தனித்துவம் அழகு
அழகு மட்டுமா...
அது கம்பீரத்தின் வெளிப்பாடு
பொய்யைப் புறந்தள்ளும் நேர்மை
பிறரால் திரிபு பாடா பேரழகு
சுற்றி உள்ள அனைத்தும்
ஒரே பாதையில் பயணித்தாலும்
தனக்கென தனிப் பாதையை
உருவாக்கிக் கொள்ளும் துணிச்சல்
பிடிக்காத பாதையில் பிறரின்
பிம்பமாய் தோன்றா திமிர்
இந்த தனி பாதை
பார்பதற்கு மலரைப் போன்று
அழகாக காட்சி தந்தாலும்
முட்களும் வலிகளும் திருப்பங்களும்
நிறைந்த தன்னையன்றி பிறரால்
கடக்க முடியா நெடும்பாதை
தனிமை பல நேரங்களில்
உற்ற நண்பனாக இருந்தாலும்
தென்றலாய் கார்மேகமாய் தேனீயாய்
பலபல பாதைசாரிகளும் நண்பர்களும்
இங்கு இல்லாமல் இல்லை
பாடத்தைக் கற்பிக்காமல் கடந்ததுமில்லை
தன்னந்தனியாக காட்சிக்கு தெரிந்தாலும்
கண்ணுக்கு தெரியா பல
நல்ல துணைகளைக் கொண்ட
கலப்படமற்ற தனித்துவமான பாதை
நேர்மறையின் மற்றொரு கரை....
தன்னிலை மாறா தனித்துவம் அழகு
அழகு மட்டுமா...
அது கம்பீரத்தின் வெளிப்பாடு
பொய்யைப் புறந்தள்ளும் நேர்மை
பிறரால் திரிபு பாடா பேரழகு
சுற்றி உள்ள அனைத்தும்
ஒரே பாதையில் பயணித்தாலும்
தனக்கென தனிப் பாதையை
உருவாக்கிக் கொள்ளும் துணிச்சல்
பிடிக்காத பாதையில் பிறரின்
பிம்பமாய் தோன்றா திமிர்
இந்த தனி பாதை
பார்பதற்கு மலரைப் போன்று
அழகாக காட்சி தந்தாலும்
முட்களும் வலிகளும் திருப்பங்களும்
நிறைந்த தன்னையன்றி பிறரால்
கடக்க முடியா நெடும்பாதை
தனிமை பல நேரங்களில்
உற்ற நண்பனாக இருந்தாலும்
தென்றலாய் கார்மேகமாய் தேனீயாய்
பலபல பாதைசாரிகளும் நண்பர்களும்
இங்கு இல்லாமல் இல்லை
பாடத்தைக் கற்பிக்காமல் கடந்ததுமில்லை
தன்னந்தனியாக காட்சிக்கு தெரிந்தாலும்
கண்ணுக்கு தெரியா பல
நல்ல துணைகளைக் கொண்ட
கலப்படமற்ற தனித்துவமான பாதை
நேர்மறையின் மற்றொரு கரை....

