Posted by: TiNu
« on: Today at 01:22:50 AM »நிழல்களை வெல்வோம்
================
நம் வாழ்வினை சூறையாடும்...
ஒரு சில கருப்பு நிழல்களை..
நம்முள் அடக்கி வைப்பது முறையல்ல..
அவ்விருளை வெளியேற்றுவோம்..
தனக்கு கிடைக்கா.. நல்ல நிகழ்வுகள்..
பிறருக்கு கிட்டும்போது - நம்முள்
எழும்.. நிழல் எண்ணங்கள்(பொறாமை)...
அதை வெல்லும் ஆயுதமோ - தனிநிறைவு
தன்.. எண்ணங்களுக்கு ஒத்துப்போகாத
பிறரின் செயல்களுக்கு - நம்முள்
எழும் நிழல் எண்ணங்கள் (சினம்)
அதை வெல்லும் ஆயுதமோ - பொறுமை
தான் செய்ய நினைக்கும் செயலை ..
தானே குழம்பி,தடுமாறும் நிலைக்கு - நம்முள்
எழும்.. நிழல் எண்ணங்கள் (பயம்,சந்தேகம்)
அதை வெல்லும் ஆயுதமோ - நம்பிக்கை
தான்.. பிறரை விட தாழ்ந்தவரோ.. என
தன்னை குறைத்து கொள்ளும் - நம்முள்
எழும்.. நிழல் எண்ணங்கள் (தாழ்வு மனப்பான்மை)
அதை வெல்லும் ஆயுதமோ - தன்னுணர்வு
தனக்கான உடமைகளை
போதாது என.. தீராத தாகம் - நம்முள்
எழும்.. நிழல் எண்ணங்கள் (பேராசை)
அதை வெல்லும் ஆயுதமோ - மனநிறைவு
தனக்கு துரோகம்,கொடுமை இழைத்தவரை..
அடியோடு அழிக்க துடிக்கும் - நம்முள்
எழும்.. நிழல் எண்ணங்கள் (பழிதீர்த்தல்)
அதை வெல்லும் ஆயுதமோ - மன்னிப்பு
தன் சிந்தனைகளை ஒருமுக படுத்தாது...
தோல்விகள் நோக்கி தள்ளும் - நம்முள்
எழும் நிழல் எண்ணங்கள் (எதிர்மறை சிந்தனை)
அதை வெல்லும் ஆயுதமோ. - விடாமுயற்சி/துணிவு
நாம் அறியாமலே... நம்முள் அடங்கி இருக்கும்..
உள்ளிருள் தீயை.. கட்டியிருக்கும் சங்கலிகளை..
நேர்மறை எண்ணங்கள் எனும் உளியால்
உடைத்து.. நல்வாழ்வு வாழ்வோம்..

