Posted by: joker
« on: Today at 08:37:51 PM » பெண்
முதல் சுவாசத்தை நமக்குள்
கடத்தியவள்,
வாழ்வின் முதற்பக்கத்தில்
எழுதப்பட்ட உயிர்மொழி
அவள்
ஆனால்,
மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள்
என்ற பெயரில்
சங்கிலிகளால்
அவளுக்கு முன்
காலத்தால்
ஓர் சுவர் எழுப்பப்பட்டது
அவள் சிரிப்பு
குடும்பத்தின் எல்லைக்குள் மட்டுமே,
அவள் கனவு
சமையலறை புகையோடு கலந்து
விண்ணைத் தொட்டதேயில்லை.
அவள் குரல்
காற்றின் நடுக்கமாகவே ஒலித்தது,
ஆனால் கேட்க யாருமில்லை.
“பெண்” என்ற சொல்லுக்குள்
சுருட்டி வைக்கப்பட்டன
அவள் ஆசைகள்,
அவள் விருப்பங்கள்,
அவள் உரிமைகள்.
ஆனால் இன்று
அடக்குமுறை
ஒரு இருள் என்றால்,
அவள்
அந்த இருளைத் தின்று
விடியலை உமிழும் சூரியன்.
அவளை
“அடக்கி ஆளலாம்” என்ற
காலம் முடிந்தது.
இப்போது
தன் பாதையைத் தானே
செதுக்கி செல்கிறாள்
வீறுநடை போட்டு .
பெண்மை
மென்மை மட்டும் அல்ல,
மீளாத உறுதி.
அன்பு மட்டும் அல்ல,
அழியாத ஆற்றல்
என பறைசாற்றிக்கொண்டிருக்கிறாள்
உலகுக்கு
அடக்குமுறையின் கல்லறையில்
எழுதுங்கள்
இனி
பெண் மௌனம் அல்ல
வரலாறு என
***Joker***
முதல் சுவாசத்தை நமக்குள்
கடத்தியவள்,
வாழ்வின் முதற்பக்கத்தில்
எழுதப்பட்ட உயிர்மொழி
அவள்
ஆனால்,
மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள்
என்ற பெயரில்
சங்கிலிகளால்
அவளுக்கு முன்
காலத்தால்
ஓர் சுவர் எழுப்பப்பட்டது
அவள் சிரிப்பு
குடும்பத்தின் எல்லைக்குள் மட்டுமே,
அவள் கனவு
சமையலறை புகையோடு கலந்து
விண்ணைத் தொட்டதேயில்லை.
அவள் குரல்
காற்றின் நடுக்கமாகவே ஒலித்தது,
ஆனால் கேட்க யாருமில்லை.
“பெண்” என்ற சொல்லுக்குள்
சுருட்டி வைக்கப்பட்டன
அவள் ஆசைகள்,
அவள் விருப்பங்கள்,
அவள் உரிமைகள்.
ஆனால் இன்று
அடக்குமுறை
ஒரு இருள் என்றால்,
அவள்
அந்த இருளைத் தின்று
விடியலை உமிழும் சூரியன்.
அவளை
“அடக்கி ஆளலாம்” என்ற
காலம் முடிந்தது.
இப்போது
தன் பாதையைத் தானே
செதுக்கி செல்கிறாள்
வீறுநடை போட்டு .
பெண்மை
மென்மை மட்டும் அல்ல,
மீளாத உறுதி.
அன்பு மட்டும் அல்ல,
அழியாத ஆற்றல்
என பறைசாற்றிக்கொண்டிருக்கிறாள்
உலகுக்கு
அடக்குமுறையின் கல்லறையில்
எழுதுங்கள்
இனி
பெண் மௌனம் அல்ல
வரலாறு என
***Joker***

