Posted by: Ninja
« on: January 21, 2026, 10:21:53 PM »படியளப்பவளின் வாசலில்
பால் குடம் தூக்கி வந்து,
பரிகாரம் முடித்து,
பன்னீர் அபிஷேகம் செய்து,
நேர்த்திக்கடன் சுமந்து,
நம்பிக்கையின் எடையில் சாய்ந்து,
ஐந்து பத்துகளிடையே ஐநூறு ரூபாய் தாளை தயவாக வைத்து,
குடும்ப சமேதராக ட்யூப் லைட்களின் வெளிச்சத்தில் ஏறுகின்றன
பக்திமான் பெயர்கள்,
ஒலிபெருக்கியில் ஒலிக்கின்றன
அவர்களின் பெயர்களோடு
வேண்டுதல்களின் பட்டியல்.
சித்த சக்தி ஞான மந்திரங்களை
உருவேற்றி,
காரிய சித்தியை உச்சரித்து,
உன் அனுக்கிரகத்தில்
காலத்தை வென்ற ஞானிகளாகிறர் சிலர்
பூக்கூடை நிறைய வருகின்ற கோரிக்கைகள்,
மல்லிகை மணத்தில் மறைந்திருக்கின்றன மனக்குமுறல்கள்,
கர்பகிரக சுற்றுகளில்
நச நசக்கிறது
வேண்டுதல்களின் ஈர விதைகள்.
அஞ்சு ரூபாய் டிக்கெட்டுக்கும்
அம்பது ரூபாய் டிக்கெட்டுக்கும்
உனக்கும் தான் எவ்வளவு தூரம்?
நம்பிக்கைக்கும் நோட்டுக்கும் உள்ள
தூரம் என சொல்லி சிரிக்கிறாய்.
வாசலில் கிடக்கும் செருப்புகளுக்கு உன் பாதுகாப்பையும்
வாடிக்கையாய் வந்து போகும் உன் ஸ்நேகிதர்களுக்கும்
படியளந்து முடித்துவிட்டால்
உன் வாசலில் கையேந்தி
நிற்கும்
அந்த எளியவள் தெரிகிறாளா
சற்று பார்.
வறண்டிருக்கும் கைகளில்
எந்த ரேகையில்
ஒளிந்திருக்கிறது
மிச்சமுள்ள உன் அருள் ?
செவ்வரளி சூடி,
குங்குமம் தவிழும்
உன் கருணைக் கண்களை கண்டு
நம்பிக்கை கொள்ள துணிகிறாள்.
துக்க நிவாரணி தாயே,
சிறிய கேவலுடன்
உன் எதிரே நிற்கிறாள் எளியவள்
ஒன்றுமே கேட்காமல்,
எல்லாம் கேட்டது போல,
கேட்டிருக்கும் தானே உனக்கு?
கேட்ட குரல் தானே என,
அலட்சியமாய் கடந்துவிடாதே..
பால் குடம் தூக்கி வந்து,
பரிகாரம் முடித்து,
பன்னீர் அபிஷேகம் செய்து,
நேர்த்திக்கடன் சுமந்து,
நம்பிக்கையின் எடையில் சாய்ந்து,
ஐந்து பத்துகளிடையே ஐநூறு ரூபாய் தாளை தயவாக வைத்து,
குடும்ப சமேதராக ட்யூப் லைட்களின் வெளிச்சத்தில் ஏறுகின்றன
பக்திமான் பெயர்கள்,
ஒலிபெருக்கியில் ஒலிக்கின்றன
அவர்களின் பெயர்களோடு
வேண்டுதல்களின் பட்டியல்.
சித்த சக்தி ஞான மந்திரங்களை
உருவேற்றி,
காரிய சித்தியை உச்சரித்து,
உன் அனுக்கிரகத்தில்
காலத்தை வென்ற ஞானிகளாகிறர் சிலர்
பூக்கூடை நிறைய வருகின்ற கோரிக்கைகள்,
மல்லிகை மணத்தில் மறைந்திருக்கின்றன மனக்குமுறல்கள்,
கர்பகிரக சுற்றுகளில்
நச நசக்கிறது
வேண்டுதல்களின் ஈர விதைகள்.
அஞ்சு ரூபாய் டிக்கெட்டுக்கும்
அம்பது ரூபாய் டிக்கெட்டுக்கும்
உனக்கும் தான் எவ்வளவு தூரம்?
நம்பிக்கைக்கும் நோட்டுக்கும் உள்ள
தூரம் என சொல்லி சிரிக்கிறாய்.
வாசலில் கிடக்கும் செருப்புகளுக்கு உன் பாதுகாப்பையும்
வாடிக்கையாய் வந்து போகும் உன் ஸ்நேகிதர்களுக்கும்
படியளந்து முடித்துவிட்டால்
உன் வாசலில் கையேந்தி
நிற்கும்
அந்த எளியவள் தெரிகிறாளா
சற்று பார்.
வறண்டிருக்கும் கைகளில்
எந்த ரேகையில்
ஒளிந்திருக்கிறது
மிச்சமுள்ள உன் அருள் ?
செவ்வரளி சூடி,
குங்குமம் தவிழும்
உன் கருணைக் கண்களை கண்டு
நம்பிக்கை கொள்ள துணிகிறாள்.
துக்க நிவாரணி தாயே,
சிறிய கேவலுடன்
உன் எதிரே நிற்கிறாள் எளியவள்
ஒன்றுமே கேட்காமல்,
எல்லாம் கேட்டது போல,
கேட்டிருக்கும் தானே உனக்கு?
கேட்ட குரல் தானே என,
அலட்சியமாய் கடந்துவிடாதே..

