Posted by: Yazhini
« on: December 11, 2025, 12:01:50 AM »மீண்டும் பெறவே இயலாத பேரன்புகாரனே...
உன்னோடு பயணித்த ஒவ்வொரு மணிதுளிகளும்
மனக்கண்ணில் அசைந்தாடுகின்றன...
யாரும் அறியா என்னை
முழுமையாக அறிந்தவனே
நீயின்றி கழியும் பொழுது
அர்த்தமற்ற மொழியாய் ஆகிதான் போகின்றது.
அன்பின் அடித்தளமாக அமைந்தவனே
அட்சயபாத்திரம் போல் அதனை அளித்தவனே
கண்ணயரும் போதும் விரல்பிடித்து உடனிருந்தவனே
வாட்டம் கொள்கையில் அன்னையாக அரவணைத்தவனே
சிறு அணைப்பில் ஊடல் அனைத்தையும் தனித்தவனே
மையல் கொள்ளும் நேரத்திலும்
காதலின் மென்மையை உணர்த்தியவனே
மோகம் தணிகையிலும் - காதலை
அறுவடை செய்தவனே...
என்னையே முதல் குழந்தையாய் பாவித்தவனே
யாரிடமும் என்னை விட்டுக்கொடுக்காத
என் தந்தைக்கு நிகரானவனே...
கண்ணியத்துடன் கரம் பிடித்தவனே
என் பலமும் நீயே!
என் பலவீனமும் நீயே!
சிந்தனை முழுக்க ஆக்கிரமித்து
யாவும் நீயாய் மாறுகையில்
என்னை பிரிந்தது ஏனோ...
தனிமையில் தள்ளியது ஏனோ...
தத்தளித்து நிற்கும் சேய்யாய்
ஆகிதான் போனேன்...
நீ ரசித்த என்னை
சிறுக சிறுக சிதைக்கின்றேன்
யாவிலும் உன்னோடு பயணிக்கிறேன்
உன் இறுதி நிமிடங்களில்
இன்றும் பேதலித்து நிற்கின்றேன்...
உன்னோடு பயணித்த ஒவ்வொரு மணிதுளிகளும்
மனக்கண்ணில் அசைந்தாடுகின்றன...
யாரும் அறியா என்னை
முழுமையாக அறிந்தவனே
நீயின்றி கழியும் பொழுது
அர்த்தமற்ற மொழியாய் ஆகிதான் போகின்றது.
அன்பின் அடித்தளமாக அமைந்தவனே
அட்சயபாத்திரம் போல் அதனை அளித்தவனே
கண்ணயரும் போதும் விரல்பிடித்து உடனிருந்தவனே
வாட்டம் கொள்கையில் அன்னையாக அரவணைத்தவனே
சிறு அணைப்பில் ஊடல் அனைத்தையும் தனித்தவனே
மையல் கொள்ளும் நேரத்திலும்
காதலின் மென்மையை உணர்த்தியவனே
மோகம் தணிகையிலும் - காதலை
அறுவடை செய்தவனே...
என்னையே முதல் குழந்தையாய் பாவித்தவனே
யாரிடமும் என்னை விட்டுக்கொடுக்காத
என் தந்தைக்கு நிகரானவனே...
கண்ணியத்துடன் கரம் பிடித்தவனே
என் பலமும் நீயே!
என் பலவீனமும் நீயே!
சிந்தனை முழுக்க ஆக்கிரமித்து
யாவும் நீயாய் மாறுகையில்
என்னை பிரிந்தது ஏனோ...
தனிமையில் தள்ளியது ஏனோ...
தத்தளித்து நிற்கும் சேய்யாய்
ஆகிதான் போனேன்...
நீ ரசித்த என்னை
சிறுக சிறுக சிதைக்கின்றேன்
யாவிலும் உன்னோடு பயணிக்கிறேன்
உன் இறுதி நிமிடங்களில்
இன்றும் பேதலித்து நிற்கின்றேன்...

