Posted by: TiNu
« on: Today at 02:02:45 AM »ஒற்றை தாய்..
==========
அம்மா! என் அன்பு அன்னையே !
முன்பெல்லாம் நீதான் என் முதல் எதிரி !
நான் எது வேண்டுமென கேட்டாலும்
ஒருமுறைக்கு பலமுறைகள் யோசித்து
அவசியமானத்தையே அனுமதித்தாய்!
என்னை செய்யாதே என தடுத்த செயலுக்காக
பலமுறைகள் உன்னை சாடியிருப்பேன்.
உண்ணும் உணவில் சில தடைகள்...
உடுத்தும் உடையில் விதிமுறைகள்..
உரையாடல் பொழுதில் சில திருத்தங்கள்..
உலகை ரசிக்க, நினைக்கையில் தடைகள்...
என் மனதில் கோபம் கொப்பளிக்க..
இவள் என்ன பைத்தியமா? நம்மை
ஏன் இப்படி கடுமையாக வாட்டுகிறாள்..
இவள் மனித இனம் தானே? நம்மை
ஏன் இப்படி கொடுமை செய்கிறாள்..
உன்னை பல நாட்கள் திட்டி தீர்த்தேன்..
இவள் என்ன மனுஷியா இல்லை கல்லா?
தந்தையில்லா எனை நீ ஆளாக்க..
உனது உன்னத அன்பை அடக்கி,
உனது தாய்மையை கல்லாக்கி..
உன் மனதினை, ஓர் ஆடவனாக்கி..
என்னை ஆளாக்கி இருக்கின்றாய்..
உன்னை தலை வணங்குகின்றேன் ... தாயே..
ஆனால் என் மனதில் 1000 வினாக்கள்..
இது தான் ஓர் ஒற்றை தாயின் உருவமா?.
இன்று என்னை இவ்வுலகம் மெச்சும்..
உன்னத மகளாக ஊருக்கு கொடுத்தாய்..-இதற்கு .
அம்மா! உன்னை மனதார மதிக்கிறேன்.
ஆனால் தாயே .. ஒன்றை நீ மறந்துவிட்டாய்
அம்மா! உன் தாய்மையை கல்லாக்கி.
இந்த உலகுக்கு ஒரு நல்ல மகளை கொடுத்தாய்..
இதனால் நீ உன் தாய்மையை இழந்தாய்..
நானோ என் அன்னையை இழந்தேன்...
இது விதியா? இல்லை இது தான் வாழ்க்கையா?

