Posted by: Minaaz
« on: Today at 01:03:21 AM »உலகமரிய உறுதுணையாய் உருவெடுத்த தாய் தந்தையர்கள் தன் கடமைக்கு சிறு இடைவெளியாய்..,
இருகக் கைப்பிடிக்க மூன்று முடிச்சுக்குள் முறையாய் முத்திரை பதிக்கும் அழகிய தருணம்..
இரு உயிர் ஓர் உயிரென,
உன்னுள் நீ என்னுள் நான் என்று அக்கினி சாட்சியாய்..
மேளங்கள் முழங்கிட,
நாதஸ்வரம் ஒளித்திட,
அவன் ஆடையோடு அவள் ஆடை இறுகப்பிணைந்திட,
கரங்கள் கோர்த்து ஆசிர்வதங்களாய் அர்ச்சனைகளும் ஆனந்தக்கண்ணீரோடு சேர்ந்திட,
மெட்டி அவள் விரலோடு பிணைந்திட,
இத்துனை அழகும் மயில் மீதுள்ள வண்ணங்களாய் தோகை விரித்தாடிடும்.., இரு பந்தங்களின் இணைப்பில்.
புது வாழ்வில் அடி பதிக்கும் அந்த நாளே
பல உண்மைகளை உரக்கச் சொல்லிடும்..
இத்துனை நாட்களும் தனித்திருப்பில் நகர்த்தினாய்,
உன் அன்னை மடியிலும் தந்தை அரவணைப்பிலும் தேங்கி நின்றாய்,
ஆனால் இன்றிலிருந்தே உன் அன்னை தந்தை என எதிர்கால நம்பிக்கையாய்
உன்னோடு
உனக்காய்
அத்துனைக்கும் ஈடாய்
இணைந்தது இந்த பந்தம்.. என
இயல்பே இன்பமளித்திடும்
அன்பின் சுவையில் பல சுமைகள் சுகமாக
இன்னல்களும் இன்புற்று ,
சோர்வுகளும் சோர்விழந்து ஓடிட ஊக்கமளித்திடும் அழகும்,
"உன்னோடு என்றும் உயிராய் பிணைந்திடுவேன்" என
அக்கினி முன் பகர்கின்ற சாட்சிகளும்
இப் பந்தம் இருகிட இன்னுமோர் சான்று..