Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: SweeTie
« on: Today at 02:32:53 AM »

மந்திரங்கள்  ஓத நாதஸ்வரம் முழங்க
கெட்டிமேளம்   கெட்டிமேளம் என
குரலொன்று  கூச்சலிட 
கட்டினான்  மணவாளன் 
மாங்கல்யம்  எனும்  மங்கலநாண்

முடிந்துவிட்ட சேலையும்  வேஷ்டியும்
அவிழ்ந்து  விடாது  முடிச்சுகள்  போட்டு
பெற்றாரும் உற்றாரும்  ஆசீர் விதிக்க
முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக 
அரங்கேறும்  ஆனந்த நாள்     

மங்கையவள் வாழ்வில்  திருநாள்
சுதந்திரமாய் திரிந்தவளை
சுமைதாங்கி ஆக்கிய   நன்னாள்
வாழ்க்கையின்  பொறுப்புகளை 
தலைமேல்  சுமத்திய  பெருநாள்

தந்தையின்  பொறுப்புகளை
தாரை வாற்று  கைமாற்றும் தருணம்
தந்தை மகள்  உறவின்   நெருக்கத்தில்   
 விரிசல்களை  உணர்த்தும்  தந்தையின்
ஆனந்த கண்ணீர்  துளிகள்

காதலென்ற  காட்சியின் கனவுகள்
நனவாகுமா இல்லை  கானல்நீராகுமா.
போர்வைக்குள் ஒளிந்திருக்கும் பூச்சாண்டிகளின்
நிறங்கள்  வெளிறும் தருணம்
கண்ணே பொன்னே காணாமல் போய்விடுமா

இடம்விட்டு பிடுங்கி நடப்படும் செடிகள்
துளிர்ப்பதும்   பூப்பதும்   காய்ப்பதுமாய் 
உள்ளக்குமுறல்களை  உள்ளடக்கி 
நாடக மேடையில் ந டிக்கவேண்டிய  கட்டம்
நாளடைவில்  பழகிவிடும் ஆட்டம


காலப் புத்தகத்தின் அத்தியாயங்கள்
கரை புரண்டோட  காத்திருக்கும்  பக்கங்கள்
கிழிந்து  சின்னா பின்னமாகிவிடுமா  இல்லை
அழியாத  ஓவியங்களுடன்  கவிதைகள் ஆகுமா
காத்திருங்கள்  காலம் பதில் சொல்லும்


 
Posted by: VenMaThI
« on: Today at 02:00:06 AM »



மணவறை நாளுக்காய்
மனதில் தீட்டிய ஓவியங்கள்
அருகருகே அமர்ந்தும் - என் அண்ணலை
கண்கொண்டு காண முடியா தருணம்....

வெட்கத்தில் சிவந்த கன்னத்தை பார்க்கயில்
கையிலிட்ட மருதாணியும் மங்களாய்த்தான் தெரிந்தது..
ஆயிரம் ஓசை நிறைந்த அரங்கில்
அவன் முனுமுனுத்த மந்திரம் மட்டும் காதல் கவிதையாய் என் காதில் ஒலித்தது...

மங்கள இசை முழங்க
என் மணவாளன் சூட்டிய மாலையும்
அவன் அணிவித்த மாங்கல்யமும்
மீதமுள்ள வாழ்நாளை என் மனக்கண்முன் நிறுத்தியது..
.
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகையே மறந்து இன்பமாய் வாழ்வோம் எனக்கூறி
உச்சி முகர்ந்த நொடியில் இவ்வுலகை மட்டுமல்ல
என்னையே நான் மறந்தேன்...

கைபேசி ஒலிக்க கண்விழித்துப் பார்தேன்
கண்டதனைத்தும் கனவென உணர்ந்தேன்
கனவிலும் கூட நமக்கு நிலைக்காத காதல்
வாழ்வில் நிலைக்குமென நினைத்தது என் குற்றமே...

தனிமையை வெறுத்த நெஞ்சமொன்று
இன்று தனிமையை துணையாய்க்கொண்டு வாழுது
விட்டுச்சென்ற துணையை நினைத்து வருந்தவா.. அல்ல
துணையாய் அமைந்த தனிமையை ஏற்று வாழவா...
Posted by: Shreya
« on: Today at 12:55:30 AM »

ஏழு ஜென்மங்களும் நீயே..!

என் அழகான என்னவனே
இன்று நமக்கான திருநாள்..
மனதினில் ஆயிரம் கனவுகளுடன்
புத்தம் புதியதோர் வாழ்வினை நோக்கி
நாம் அடி எடுத்து வைத்தோம்..!

உனக்காக எனை அழகு படுத்திக்கொண்டு
புன்னகையும் பதற்றமும் தொற்றி கொள்ள
எனக்காக காத்திருக்கும் உன் கண்களை
பார்த்த அந்த நொடியே விழுந்து விட்டேனடா..!

யார் கூறியது பெண்ணின் கண்களே அழகு என!!
என் என்னவனின் கண்களில் நான் பார்த்த அந்த காதல்..
அந்த காந்தசக்தி..கடலின் ஆழத்தை விட
மேலானது போல் என்  இதயத்தை
கிழித்து கொண்டு சென்றது..!

அவன் வசீகரமும் அவன் சிரித்த போது
அந்த கண்ணகுழியும்
என்னை மொத்தமாக கொள்ள..
அவனை முழுதாய் ரசிக்க முடியாமல் முழித்தவளை
நீ கொல்லை அழகடி என அவன் கண்கள் காதல்
மொழியில்..!

மந்திரங்கள் ஓத அட்சதைகள் தூவ
மேள நாதஸ்வர இசையோடு
மாலைகளை மாற்றி கொண்டோம்..!
நீ என் கரம் பிடித்த அந்த நொடியை
நினைக்கையில் மெய் சிலிர்க்குதடா என் மேனி..!

ஊரார் முன்நிலையில் அந்த அக்னியின்
சாட்சியாக என் கழுத்தில் நீ கட்டிய தாலி
என் நெஞ்சுக்குழி வரை முற்றுகின்றது..!

நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டவளை
என் கண்ணத்தில் கை வைத்து என் நெற்றியில்
நீ இட்ட முதல் முத்தம்
புதியதோர் உலகம் பூத்தது போல
நீயே என் நிழலாய்
உன்னை தாங்கும் துணையாக
உயிரில் கலந்து இனி எல்லாமுமே நீயாக!!

முழுதும் உன்னை வென்றவளாய்
உன் இதயத்துடிப்புடன் கலந்தேன்
என் எண்ணவனின் மார்பில்
ஏழு ஜென்மங்களும் நீயே வேண்டும் என
என் கண்கள் ஓரமாய் மகிழ்ச்சியின் எல்லையாக
கண்ணீர் துளிகளுடன் உன்னுடையவள் நான்..!

This is my first try in my lifetime nu thaan sollanum..
Flaws irukkum..sorry for that guys..
Thank you team..
Posted by: Clown King
« on: November 18, 2025, 08:53:45 PM »

இணைந்த கைகள்

இணைந்த கைகள் மட்டுமல்ல  நெஞ்சமும் கூட
இரு நெஞ்சம் மட்டும் அல்ல இரு வீட்டார் உறவுகளும் கூட

எத்தனை கனவுகள் எத்தனை என்ன ஓட்டங்கள் எத்தனை விதமான பரபரப்பு எத்தனை விதமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஒன்று கூடும் இந்த இரு கைகள் இணையும் போது

கரம் பிடித்தவளும் கரம் கொடுத்தவனும் இல்வழக்கையை தொடங்கும் நாள் அனைவரது ஆசீர்வாதங்களும் வாழ்த்து மடல்களும் குவிந்து உலகிற்கு உரக்கச் சொல்லும் நாள் நாங்கள் எங்கள் வாழ்க்கையை தொடங்குகிறோம் என்று

இவளுக்கு இவன் என்றும் இவனுக்கு இவள் என்றும் கடவுள் தீர்மானித்து எழுதி வைத்த நாள் இந்த இரு கைகளும் இணையும் நாள்

இதோ இதுவும் என் வாழ்வில் நடந்தேறியது

என் வாழ்க்கை துணையாய் அல்ல என் வாழ்க்கையாகவே வந்தவள் என் கரம்பிடித்தவள் என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் என் பிறப்பிற்கு நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்போது வாழும் வாழ்க்கைக்கும் அச்சாரமாய் துணை நின்றவளாய் எனக்கு
வாழ்வை தந்தாய்


காற்றாற்று வெள்ளம் போல் சென்ற என் வாழ்க்கை நெறிப்படுத்தி
அழகிய நதியாய் மாற்றினாய்
திக்குத் தெரியாத சென்ற என்னை

உன் வாழ்வில் சேர்த்து அடையாளம் தந்தாய்  என் வாழ்விற்கு


கோவக்காரன் திமிரு பிடித்தவன்  என்று தூற்றிய வாய்கள்
நீ வந்த பிறகே எனக்கும் மனிதன் என்ற அங்கீகாரம் கொடுத்தனர்

தரிசு நிலம் போல் இருந்த என் வாழ்க்கை உன் வரவால்
என் வாழ்வில் பயிர் தழைக்கச் செய்தாய்
பாலைவனமாய் இருந்த என் வாழ்வு
சோலை வனமாய் மாறியது

உன் வரவால்  இன்பம் தழைக்கச் செய்தாய் ஒவ்வொரு நொடியும்
உன் உதிரம் கொண்டு அழகான  இரண்டு உயிருள்ள ஓவியங்களை தந்து எனையும் ஆண்மகன் ஆக்கினாய்


நிலையான வாழ்வை தந்தாய்
அமிர்தம் போன்ற சுவையை தந்தாய்
என் வாழ்விலும் தென்றலை தழுவச் செய்தாய்


நினைத்துப் பார்த்தோம் இருவரும்
இதே அன்பும் பாசமும் என்றும்
நிலைத்திருக்க வேண்டும் என்று
உன் அன்பிலும் பாசத்திலும் கண்டேன் இவ்வுலகை

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆன்றோர் வாக்கு நான் ஏதோ ஒரு பிறவியில் செய்த நற்செயல் நீ எனக்கு வாழ்க்கை துணையாய் கிடைத்தாய் அந்தக் கடவுளும் எனக்கு வரம் தந்தார் தந்த கடவுள் கண்ணையும் மூடிக்கொண்டார் இருப்பினும் இல் வாழ்க்கையை நல் வாழ்க்கையாய்  உன்னோடு தந்ததற்கு ஆயிரமாயிரம் கோடி நன்றிகள் கடவுளுக்கு ...
Posted by: Yazhini
« on: November 18, 2025, 04:52:24 AM »

அழகான காதல் ஓவியம்
நம் திருமண நிழற்படம்...
உன் கரம்பற்றிய நினைவுகளை
மீண்டும் ஒருமுறை புரட்டி பார்க்கிறேன்...

தங்கு தடையில்லாமல் அழகாக
தொடங்கியது நம் காதல் கதை.
உன்னை விட்டு விலகிவிலகி சென்ற போதும்
விரட்டி விரட்டி காதல் செய்தாய்
உன் அதீத அன்பினால் வசிகரித்தாய்..

கடல் தேடி பாயும் நதிபோல்
உன்னை தேடி வர செய்தாய்
சுற்றம் மறந்து முற்றும் மறந்து
உன்னில் தஞ்சம் கொண்டது பேதையுள்ளம்..
உன் நினைவுகளில் மூழ்கிய
என்னை மீட்க - உன்னில்
புதைய சித்தமானேன்....

சித்திரை பூக்களின் மணமுடன்
திருமணத்தில் மனமும் மணக்க...
வற்றா ஜீவஊற்றாய் அன்பும் வழிந்தோட
இரு உயிர்களின் முக்காலத்தையும்
ஒன்றாக பிணைக்கும் மூன்று முடிச்சு
முடிவடையா உணர்வுகளின் நீர் ஊற்று.

உன் கைப்பிடிக்குள் அன்னையின்
கதகதப்பை உணர்ந்திட
மகிழ்ச்சியில் புன்னகையுடன் கண்ணீரும்
சிறிது கலந்து உறவாடியது...
நீயே என் பாதி
என மனமும் மண்டியிட்டது...

எண்ணிலடங்கா நினைவுகளின் பொக்கிஷம்
நாம் அன்பால் இணைந்த திருமண புகைப்படம்... 💜 💜 💜
Posted by: Thenmozhi
« on: November 18, 2025, 01:27:28 AM »

             நீயும் நானுமாய்!

இறைவனுடைய விதிப்படி இன்றைய மாங்கல்ய திருநாள் நமதே!
இரு மனங்களும் காதலித்து காத்திருந்து ஒருமனதாய் சேரும் நாளும் இதுவே!
இனிய காலைப்பொழுதினில் இன்னிசை மேள,தாளங்களுடன் ஆரம்பித்தது எங்கள் திருமணமே!

மணமகனாய் அலங்கரிக்கப்பட்டு மணமேடையில் எனக்காக காத்திருந்தாய்!
மலர்மாலையினை அன்னநடையில் என் கரங்களில் ஏந்தி,  உன் கழுத்தினில் அணிவித்தேன்!
மணகளாய் உன் அருகில் அமர்ந்த என்னை உன் ஓரப்பார்வையினால் இரசித்தாய்!
மலர்ந்த புன்னகையுடன் நாணத்தில் நான் தலை குனிந்தேன்!

மந்திரங்கள் ஓதி ஐயர் அக்கினி வளர்க்க !
மங்கள இசை "மாங்கல்யம் தந்துணானே " என ஒலிக்க !
மனதார வாழ்த்த உற்றார் ,உறவினர்கள் நம்மை சூழ்ந்திருக்க!
மகிழ்வுடன் மாங்கல்யத்தை உன் கையில் ஏந்தி ,என் கழுத்தில் முடிச்சிட்டாய்!
மலர்ந்த உன் இதழினால் என் பிறை நுதலில் அன்பாக முத்தம் இட்டாய்!

என் காதினில் செல்லமாக "I love you பொண்டாட்டி" என்றாய்!
எல்லாம் மறந்து உன் வசம் ஆகி விட்டேன் அத்தருணத்தில்!
என் பட்டுச்சேலை முந்தானையில் உன் பட்டு வேக்ஷ்டி தலைப்பு முடிக்கப்பட்டன இணைபிரியாமல்!
என் கையினை உன் கரத்தினால் இறுகப் பற்றிக்கொண்டாய் மூச்சு உள்ளவரை உன்னை விடமாட்டேன் என்று!

அக்கினியை மும்முறை வலம் வந்தோம் வாழ்க்கை உறுதிமொழி எடுத்தவாறே!
அம்மி மிதித்த என் பாத விரல்களை பிடித்து மெட்டி போட்டு ,தலை நிமிர்ந்து நோக்கினாய் என்னை!
அருந்ததி பார்த்து பெற்றோர், உற்றார் ஆசி பெற்றோம் எங்கள் இல்வாழ்க்கைக்கு!
அன்று நடந்த நீர் பானைக்குள் கணையாழி எடுக்கும் போட்டியில் விட்டுக்கொடுத்து மகிழ்ந்தோம்!

இத்திருமண நாள் கனவுகளுடன் தேன்மொழி இங்கே!
இத்தனைக்கும் சொந்தமான என்னவன் எங்கே!
இந்த ஆசை கனவு நனவாக நீயும் நானுமாய்!



Posted by: Forum
« on: November 16, 2025, 11:47:44 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 387

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்