Posted by: Thooriga
« on: Today at 08:29:26 AM »என் குட்டி தேவதையின் முத்தம் 
காலைல அலாரம் அடிக்க அச்சோ நேரம் ஆச்சேன்னு அடிச்சு புடிச்சு எழுந்திரிச்சா
அம்மா....
எங்க போறீங்கனு....
மழலை மொழியில...என்ன தனியா விட்டு போகாதீங்கன்னு அர தூக்கத்தில் கொஞ்சும் குரல் கேட்கும்...
அச்சோ மாடிக்கிட்டோம்....
என்ன செய்ய நேரம் வேற ஆகுதுன்னு யோசிச்சு சரி கொஞ்ச நேரம் கட்டி புடிச்சு தூங்க வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்...
அதுக்குக்கு அப்பறம் எல்லா வேலையும் முடிச்சு ... போய் எழுப்பினா...
அம்மா.... கொஞ்ச நேரம் தூங்குறேன்னு கொஞ்சலோட ஒரு கெஞ்சல் வரும் பாருங்க..
எப்படியோ அதையும் சமாளிச்சு எழுப்பி குளிக்க வெச்சு, சாப்பிட வெச்சு, ஸ்கூல் போக அனுப்பியாச்சு .....
அடுத்த நானும் ஓடனும்....
கொஞ்சம் கூட நேரம் இல்ல ....இணைக்குனு இவளோ வேலையானு தோன்ற அளவு வேலை குமிஞ்சு கிடக்க..
அதையும் முடிச்சு கிளம்பும் போது கை , கால் , தல ன்னு எல்லாமே வலிக்கும்..
இதுல வீட்டுக்கு போக அற மணிநேரம் பயணம் வேற...
என்ன வாழ்க்கடான்னு தோணும்...
வீட்டு கதவுல கை வைக்கும்போது...
என் குட்டி தேவதையின் பிஞ்சு காலில் அணிந்து இருக்கும் கொழுசொலியும்.... அவள் மழலை சிரிப்பொலியும்... கேட்ட அடுத்த நொடி...
இருக்கும் களைப்பு பாதி பறந்தாச்சு....
அம்முன்னு நா ஒரு குரல் குடுக்க...
அம்ம்ம்மா ன்னு
பிஞ்சு பாதங்கள் என்னை நோக்கி ஓடி வந்து ...மேல தாவி குதிச்சு...
என் தேவதை குடுக்கும் ஒற்றை முத்தம்...
இன்னும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ....நீ பார்க்க உனக்குன்னு நா இருக்கேன் அம்மா ...
சொல்லாம சொல்லும் அந்த முத்தம்...
என்னை படைத்த இறைவனும் பொறாமை கொள்ள எனக்கு மட்டுமே அந்த பிஞ்சு இதழ் முத்தம்...
அத விட வேற என்னங்க வேணும் இந்த வாழ்க்கைல ....
சொல்ல வார்த்தைகள் இல்ல...என் வாழ்வின் பெருமிதம் என் கையில்..
பொதுவான கருத்து....
பெண் பிள்ளை என தூற்றி அவர்களை மதிக்காத பல ஜென்மகளுக்கு தெரிவதில்லை... தேடி சென்று கேட்டாலும் கிடைக்காத ஒரு பொக்கிஷம் பெண் பிள்ளைகள் என்று ....