Posted by: Madhurangi
« on: June 30, 2025, 10:22:54 PM »உன் பார்வையில் நிழலாய் நான்
நிழலாய் உனை தொடர்வதினாலேயே..
என் இருப்பையும் பிரசன்னத்தையும் நீ மறந்து பல காலமாயிற்று..
என் முகம் பார்க்கிறாய் .. என் அகத்தின் வலி உனக்கு புரிந்ததே இல்லை ..
என் குரல் கேட்கிறாய் .. என் கருத்துக்களை
நீ கேட்பதே இல்லை..
நம் வாட்ஸப் உரையாடல்கள் மளிகை கடை பட்டியலாகவும் , வங்கி கணக்கு இலக்கங்கள் சேமிக்கும் இடமாகவும் மாறி பல காலமாயிற்று..
உன் இடைவிடாத விசாரிப்புகளை எண்ணி இன்னும் ஏங்குகிறது பேதை மனது..
ஓய்வு நேரத்தில் கூட உன் நித்திய சகவாசம் கைபேசியுடன் தான்..
என் இரசனைகளை இப்பொழுதெல்லாம் நீ உணர்வதே இல்லை.. என் கனவுகளை இப்பொழுதெல்லாம் நீ புரிவதே இல்லை..
என் பேச்சுக்கே மரியாதை இல்லாத போது மௌனத்தை என் தேசிய மொழியாக ஏற்றுகொண்டேன்..
வெறும் சமயலறை பாத்திரமாக, சலவை இயந்திரமாக உன் வீட்டில் மாறி போன என் நிலை கண்டு சலித்து போனேன் ..
என் உணர்வுகளையும் மௌனத்தையும் புரியாமல் இருக்கும் நீ ஒரு குற்றவாளி என்றால்..
என் உணர்வுகளையும் மௌனத்தையும் உனக்கு புரிய வைக்க தெரியாமல் தவிக்கும் நானும் ஒரு குற்றவாளி தான் ..
உரத்த குரலில் நானும் ஒரு நாள் புரட்சி செய்வேன் என் காதலையும் இருப்பையும் உன் பார்வையில் மீண்டும் மீட்டெடுப்பதற்காக ..
கணவனானதும் தன்னுள் இருக்கும் காதலனை தொலைக்கும் சில கணவன்மார்களுக்கு சமர்ப்பணம்
- வலி பேசும் மொழியாக மது -