Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 464182 times)

Offline MaiVizhi

  ஒரு நொடியில் உருவாகும் ஓவியம்...
காலங்கள் தாண்டி பார்த்தாலும் அழியாத நினைவுகள்... புகைபடத்தில் நம் சிலையாய் தெரிந்தது அதிசயமல்லை
நம் உயிர் போன பிறகு அந்த புகைபடதிர்க்கு  உயிர் வருவதுதான் அதிசயமே


அடுத்து : ஒய்வு
« Last Edit: May 14, 2025, 06:25:03 PM by MaiVizhi »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1098
  • Total likes: 3681
  • Total likes: 3681
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நிலா வந்து நெஞ்சை தழுவ,
நிசப்தமாய் இருள் இருக்க
மெல்லிய காற்று உடல் ஸ்பரிசிக்க
வேலை சுமையாயினும்,
சிந்தனை களைப்பாகினும்
மழை துளி போல
மெல்லமாய் நேரம் நகர
காலச்சக்கரம் சுழல
மனதுக்கும்  உடலுக்கும்
தேவை சிறு ஓய்வு

Next - நறுமணம்


****Joker****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Lakshya

சூரியன் எழும்பும் முன்னே,
நறுமணம் உதிர்கிறது ஒளியின் வழியே...
மழைத்துளி மண்ணில் விழும் போது,
நெஞ்சை நனைக்கும் நறுமணத்தை மறக்கமுடியுமா...
ஒவ்வொரு பூவுக்கும் ஒரு வாசனை,
ஒவ்வொரு இலைகளும் ஒரு ஓவியம் தானே...

Next:- நட்பு

Offline Jithika

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதால் கூட சுகம் உண்டு

🌹இயற்கை🌹

Offline Asthika

சிறகடிக்கும் பறவையின் குரல்,
காற்றின் இசையில் தேனிசை நெகிழல்.
மலைகளின் மௌனம், நதியின் ஓசை,
இவையெல்லாம் இயற்கையின் பாரம்பரிய சேவை.

  💫நிலா

Offline Jithika

உலகின் உச்சம் அவள், ஆகாயத்தின் வெள்ளை மச்சம் அவள், இரவின் காதலி அவள், ஈர காற்றின் பேரொளி அவள், உலா வரும் ரதி அவள், ஊரையே மயக்கும் மதி அவள், எட்டாத கனி அவள், ஏகாந்த முனி அவள், ஓசை எழுப்பாத மொழி அவள், இரவு என்னும் தனிமையின் வழி அவள்.

🌹மொழி🌹

Offline Asthika

மௌனத்தை மீறி வந்தவளே,
மனம் திறந்த வாசலாகியவளே!
சிறுகுழந்தையின் முதலெழுத்தாய்,
சிறகடித்த பறவையின் கீதமாய்...

நீ இல்லாமல் நான் இல்லை,
என் சிந்தனையின் நிழலே நீ.
அகரத்தில் தொடங்கி ஆனந்தமாய்,
அமுதமாய் சிந்தும் வார்த்தைகளே!

நட்பின் நாயகியும்,
கலையின் கருவியும் நீ.
மொழி என்றால் உயிர்,
அதைப் பேணுவோம் நாமும் பாசமாய்!💫💫

💫மெளனம் 💫

Offline MaiVizhi


வலி கொண்ட இதயம் ஒரு போதும் வார்த்தைகள் தராது...
 மௌனத்தை மட்டுமே மொழியாக கொண்டிருக்கும்..
நேசிப்பவருக்கு நம் வார்த்தை மட்டுமல்ல...
மெளனம் கூட புரியும்!

🩷உண்மை🩵

Offline SweeTie

பொய்யர்களும்  பித்தலாட்டக்காரரும்
பூமியெங்கும்  நிறைந்திருக்க 
எங்கே தேடுவேன்  உண்மை விளம்பியை
அவன் செத்து  பலவருஷமாயிற்றே
என்றாள்  அவன் மனைவி   கண்ணீர்மல்க !

அடுத்த சொல்:   மனைவி   

Offline Jithika

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது ஒரு பெண்

அந்த ஆணை முழுமை அடைய செய்வதும் ஒரு பெண்
                                       மனைவியாக!!

🌹ஆண்🌹

Offline Asthika

      உழைப்பை மட்டும் நம்பி,
உயிர் கூட கொடுக்கும் காதலன்,
உறவுகளுக்காக தன்னை மறந்துவைக்கும்
உணர்வின் அந்திம நிழல்!

அன்பு சொல்லாது காட்டும்,
அருவி போல பாசம் கொட்டும்,
அவனது அன்பு மெளனத்தில்,
ஆழமான தேர் ஒன்று!

அடுத்த தலைப்பு மெளனம்

Offline Jithika

பிடித்தவர்களின் சிறு மௌனம் ஏற்படுத்தும் வலியை விடவா அவர்கள் கோபத்தில் பேசும் வார்த்தைகள் வலித்துவிட போகிறது?

🌹இசை🌹

Offline Madhurangi

வலி மிகுந்த இதயத்திற்கு
செவி வழி மருந்து இசை🎶

மொழி அறியா பாடல்களில் கூட
ரசனைகளுக்கு வித்திடும் இசை 🎶.
 
தனிமையின் துணையவன்..
தன்னிகரில்லாத இணையவன்..
இசை 🎶

அடுத்த வார்த்தை - வலி

Offline Asthika

சிரிப்பின் பின்னாலே மறைந்திருக்கும்,
சிந்தையின் ஒவ்வொன்றும் துன்பமாய் இருக்கும்.
பேச முடியாத பகைதான் அது,
பேரிலக்கமின்றி பிணித்திருக்கும் மது.


அடுத்த தலைப்பு 💫 நினைவுகள்

Offline Jithika

எங்கேயோ இருக்கும் உன்னை என்றாவது பார்த்துவிடுவேன் என்று என்னை இன்னும் வாழச் சொல்கிறது, உந்தன் நினைவுகள்!

NEXT 🌹கண்ணீர்🌹