Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 140899 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    


Offline RajKumar

Hi 
வணக்கம்  RJ  &. DJ.       
      இந்த வாரத்திற்கான‌ இசை தென்றல் பதிவு நான் விரும்பிய‌  திரைப்படம்
சிந்து பைரவி  1985ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகாசினி, சிவக்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்,  இந்த படத்தில் நடித்துக்காக சுஹாசினி சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளர் விருதை இளையராஜா மற்றும் சிறந்த பிண்ணனி பாடகியாக சித்ரா 1986 ம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளார்கள்,
இப்படத்தில் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் எனக்கு பிடித்த பாடல்
நான் ஒரு சிந்து   பாடகி சித்ரா பாடியது , எனக்கு பிடித்த சில வரிகள்

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
பாடு படிச்சா சங்கதி உண்டு
என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்
 
« Last Edit: December 05, 2024, 07:47:03 AM by RajKumar »

Offline Hazel

Hi Isai Thendral team.
Last week program romba nalla irunthuchu..well done to the entire team :)

This weeks it's gonna be....
Song: En Nenju Chinna Elai
Movie: Utthama Putthiran
Music: Vijay Antony
Singers: Vijay Prakash, Saindhavi

Enakku intha song tharra feel romba pidikkum❤️
My favorite lines:
உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்....
..............

images-1" border="0
https://youtu.be/tvBBV2-5kLg?si=KFsBW5F1hJomGYFo
« Last Edit: Today at 12:53:27 AM by Hazel »







Offline Zero

Movie : Kadhalikka Neramillai (2025)(Upcoming Movie)
Song : Yennai Izhukkuthadi
Music : A.R.Rahman
Lyrics : Vivek
Singers : A.R.Rahman & Dhee
Song Cast : Jayam Ravi & Nithya Menen





« Last Edit: December 05, 2024, 12:23:58 AM by Zero »

Offline Angeline