Author Topic: ஆன்லைன் ஆர்டர்..📞😉  (Read 1587 times)

Offline MysteRy

ஆன்லைன் ஆர்டர்..📞😉
« on: October 03, 2024, 04:44:01 PM »



நம்மாளு ஒருத்தருக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையா இருக்குன்னு ஒரு பிரபல ஸ்வீட் கடைக்கு  ஃபோனில் பேசிருக்கார்.

எனக்கு ஸ்வீட் வேணும். உங்களிடம் என்னென்ன ஸ்வீட் இருக்குன்னு கேட்டிருக்கிறார்.

பதில் வந்துச்சு...

லட்டுக்கு எண் 1 ஐ அழுத்தவும்

பூந்திக்கு எண் 2 ஐ அழுத்தவும்

அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்

கேசரிக்கு எண் 4 ஐ அழுத்தவும்

குலோப்ஜாமூன் வாங்க எண் 5 ஐ  அழுத்தவும்

ஜிலேபிக்கு எண் 6 ஐ அழுத்தவும்.

இவன் எண் 3-ஐ அழுத்தினான்

பதில் வந்தது...

கோதுமை அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்

பாதாம் அல்வாவுக்கு எண் 2 ஐ அழுத்தவும்

பால் அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்

ரவா அல்வாவுக்கு எண் 4 ஐ அழுத்தவும்

இவன் எண் 1-ஐ அழுத்தினான்.

பதில் வந்தது...

பசு நெய்யால் செய்த அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்

டால்டாவில் செய்த அல்வாவிற்கு எண் 2 ஐ அழுத்தவும்

பாமாயிலில் செய்த அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்

இவன் எண் 1-ஐ அழுத்தினான்

பதில் வந்தது ...

கால் கிலோ வேண்டுமென்றால் எண் 1ஐ  அழுத்தவும்

அரை கிலோ வேண்டுமென்றால் எண் 2ஐ அழுத்தவும்

முக்கால் கிலோ வேண்டுமென்றால் எண் 3ஐ  அழுத்தவும்

ஒரு கிலோ வேண்டுமென்றால் எண் 4ஐ அழுத்தவும்.

நூறு கிலோ வேண்டுமென்றால் எண் 9ஐ  அழுத்தவும்

இவன் தவறுதலாக எண் 9 ஐ அழுத்திட்டு ஃபோனை ஆஃப்  பண்ணிட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஃபோனை ஆன் செய்தப்போ அங்கிருந்து அழைப்பு வந்தது...

"நீங்க தானே அல்வா ஆர்டர் பண்ணீங்க?"

இல்லையே...

இந்த நம்பர்லேர்ந்து 100 கிலோ அல்வா வேணும்னு ஆர்டர் வந்துச்சே..

சார் ஃபோன் என்னோடது தான்... ஆனா ஆர்டர் செய்தது நான் அல்ல... என் வீட்டில் இருக்கும் உடன் பிறந்தவர்கள் யாராவது செய்திருப்பார்கள்.... எனவே நீங்கள்...

என் பெரிய அண்ணனைத் தொடர்பு கொள்ள எண் 1 ஐ அழுத்தவும்

என் சின்ன அண்ணனை தொடர்பு கொள்ள எண் 2 ஐ அழுத்தவும்

என் தம்பியை தொடர்பு கொள்ள எண் 3 ஐ அழுத்தவும்.

என் சின்ன தம்பியை தொடர்பு கொள்ள எண் 4 ஐ அழுத்தவும்.

என் அப்பாவை தொடர்பு கொள்ள எண் 5ஐ அழுத்தவும்.

அதுக்குள்ள லைன் கட்...

யாருகிட்ட... நாங்களும் அல்வா குடுப்போம்ல.
😉😉😉
« Last Edit: October 03, 2024, 04:45:34 PM by MysteRy »

Offline Ishaa

Re: ஆன்லைன் ஆர்டர்..📞😉
« Reply #1 on: October 04, 2024, 12:44:53 AM »
Sema Joke sis
Inimel naanum idhuve follow panikuren  ;)


Offline MysteRy

Re: ஆன்லைன் ஆர்டர்..📞😉
« Reply #2 on: October 04, 2024, 08:05:48 AM »
Sema Joke sis
Inimel naanum idhuve follow panikuren  ;)




Offline Ishaa

Re: ஆன்லைன் ஆர்டர்..📞😉
« Reply #3 on: October 04, 2024, 12:18:48 PM »

🤣🤣🤣🤣
Inthe post ai like panna enn 1 ai aluthavum

Inthe post ai share panna enn 2 ai aluthavum

Inthe post il comment panna enn 3 ai aluthavum

Neengalum Joke share panna poringa na enn 4 ai aluthavum

Inthe forum kku register aga enn 9 ai aluthavum 😋😎

Offline MysteRy

Re: ஆன்லைன் ஆர்டர்..📞😉
« Reply #4 on: October 04, 2024, 03:18:15 PM »