தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நிழல் படம் எண் : 379
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
PoonaKuttY:
இரு கைகள் இணையட்டும்
தொலைவில் இருந்த நானோ, உன் அருகில்
உன் தொடுதலினால் தொலைந்து போனேன்,
கண்களின் வழியே என் காதல் சொன்னேன்,
ஆனால் நீயோ உன் கைகளால் என்னை கைது செய்தாய்.
அகப்பட்டவன் நானே, அகன்று செல்ல மனமில்லாமல்
அடைகலமாகி விட்டேன் உன்னுள்ளே...
விதியோ என் கையை விட்டது,
ஆனால் நான் உன்னை கை விட மாட்டேன்.
உன் கைப் பிடித்த அந்த மறுநொடி
என் வாழ்வின் ஆரம்பமாம் என எண்ணினேன்,
வாழ்க்கையோ என்னை எங்கு கொண்டு சென்றாலும்,
உன் கை விடாது, என்னுடன் கூடிச் செல்வேன் துணையாய்.
ஒரு கையில் ஓசையில்லை,
நீயும் நானும் சேர்ந்து கைப்பிடிப்பதே என் ஆசை,
காதலின் தொடக்கம் கண்களில் வழியே,
ஆனால் என் முடிவோ பெண்ணே – உன் கைப்பிடிலே... 🤝❤️
Thooriga:
நான் இருக்கிறேன் உனக்காக
நீ வாழுற இந்த வாழ்க்கை உனக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும்,
புயலே உன்னை தீண்டினாலும்..
நீ எதுக்குமே வருத்த படாதா..
ஏன்னா நான் இருக்கேன் உனக்காக
உன் கையை பிடிச்ச அந்த நொடி
எனக்குள்ள தோன்றின அந்த எண்ணங்கள்..
உன்னை விடாம தாங்கி நிக்கணும்..
உன் சிரிப்புக்கு நா மட்டுமே காரணமா இருக்கனும்..
உன் கண்ணீரை துடைக்கும் விரல்கள் என்னோடதா இருக்கனும்...
இந்த உலகத்துல யாரு உன்ன மறந்தாலும் சரி ..வெறுத்தாலும் சரி
என்னோட இதயம் உன்ன எப்பவும் மறக்க நினைக்காது..
நிழல் போல உன் கூடவே இருப்பேன்...
நீ விழுந்தால் கை கொடுப்பேன்,
நீ சோர்ந்தால் தோளாக இருப்பேன்,
நீ மௌனமானாலும் உன்னை விடாமல் கேட்பேன்,
ஏனெனில் நான் இருக்கிறேன் உனக்காக.
மௌனத்தில் கூட நீ பேசினாய்,
என் மௌனத்தை கூட நீ புரிந்துகொண்டாய்.
“நீயும் நானும் ஒன்றுதான்” என்று
கைக்கோர்த்தபடி உறுதியளித்தாய்.
காதல் என்பது சொல்லும் வார்த்தைகளில் அல்ல,
கைகோர்த்து உயிராய் நிற்பது தானே
யார் இருகாங்க இல்ல
நீ எங்கு இருந்தாலும்,
நான் உனக்காகவே இருக்கிறேன்…என்றென்றும் ❤
வெறும் வார்த்தையாய் மட்டும் அல்ல உணர்வுகளால் சொல்கிறேன்..
என்றும் நான் இருப்பேன் உனக்காக உனது தேவதையாய்..
உன் வருகையை எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கிறேன்..
Thenmozhi:
என் ஆருயிர் அண்ணா!
அம்மாவின் அன்பும் ,அப்பாவின் பாதுகாப்பும் ஒன்றாக கிடைத்தது உன்னிடமே என் அருமை அண்ணா!
அவனியில் நான் உதித்த போது, என் பிஞ்சுக் கரம் பிடித்து,நான் இருக்கிறேன் உனக்கு வா வீட்டுக்கு போகலாம் என்று என்னை அழைத்துச் சென்றாய்!
அந்த பற்றிய கரம் விடாமல் இன்றுவரை பத்திராமாக பாத்துகிறாய் உன் குட்டிமா என்று!
பிறக்கும் முன்பு உன்னை தெரிந்திருந்தால், பிறக்கும் போது கூட அண்ணா என்று அழுதிருப்பேன்!
நம்ம அண்ணா தங்கை உறவு விலை மதிப்பற்ற பாசம்!
நம்ம பாசத்துக்கு நடுவில் எந்த உறவும் வர முடியாது, வரவும் நாங்கள் விட்டதில்லை!
நம்ம பற்றிய கரங்கள் யாராலும் அவிழ்த்து விட முடியாது!
எனக்குள் மிகப்பெரிய பெருமிதம் எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறாய் என்பதே!
எங்கள் உறவு இதயங்களால் இணைக்கப்பட்டது ,கைகளால் மட்டுமே அல்ல!
அழுதால் துடைக்கும் ,சிரித்தால் தட்டும்,செல்லமாய் குட்டும் பாசமான என் அண்ணா!
டேய் அண்ணா என்று அதட்டலுடன் ,அன்பாய் உன்னை அழைப்பேன்!
கடவுள் எனக்கு கொடுத்த வரம் நீ அண்ணா!
சண்டை போட்டாலும் அடுத்த கணமே சமாதானம் ஆகி ,ஒன்றாக சாப்பிட்டு அம்மாவையே என்னடா இது என்று மிரள வைத்திருக்கிறோம் அண்ணா!
கக்ஷ்டம் வந்து நான் துவளும் போதெல்லாம்,
நான் இருக்கேன் உனக்கு என்று சொல்லி ,என் கைகளைப் பிடித்து உன் தோள் சாய்த்தாய் அண்ணா!
அண்ணனுக்கு கண்ணீர் விடுபவள் தங்கை!
தங்கைக்காக உயிரை விடுபவன் அண்ணன்!
அண்ணா நீ மணம் முடித்து சென்றபோது ,என் கண்கள் கலங்கவில்லை,ஏன் தெரியுமா? நீ கரம் பற்றியது ஒரு கரம் என்னுடன்,மறு கரம் அண்ணியுடன்!
இந்த வரம் கிடைத்த நான் அதிக்ஷ்டசாலி!
நாங்கள் வேலைக்காக தொலைதூரத்தில் இப்போ இருக்கின்றோம்!
தொலைதூரத்தில் இருந்தாலும் ,நினைவெல்லாம் நீ அண்ணா!
உன் நினைவுகள் என்னை வாட்டும் போது ,நான் FTC போய் நண்பர்களுடன் உரையாடுகின்றேன்!
இந்த உலகில் அப்பாக்கு பின் நான் நம்பும் ஒரே ஆண் நீ தான் அண்ணா!
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம்ம பாசம் மாறாது அண்ணா!
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ,நீ தான் என் அண்ணாவாக வர வேண்டும் என வரம் கேட்பேன்!
நாங்கள் பற்றிய கரங்களை விட மாட்டோம் ,எதுக்காகவும் யாருக்காகவும்!
அண்ணா நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!
உன் அருமை குட்டிமா தேன்மொழி!
Lakshya:
அப்பாவின் தோள், மகளின் வலிமை!!!
கண்ணே கலங்காதே...
தோல்வி உன்னை சோதிக்க வந்ததே தவிர,
உன்னை தள்ளி விட வரவில்லை...
இன்று கண்ணீரால் நனைந்த உன் கண்கள், நாளை வெற்றியின் ஒளியால் ஜொலிக்கபோவதை, உன் அப்பா நான் பார்க்க வேண்டாமா?
தோல்வி வந்ததாலே வாழ்க்கை முடிந்துவிடாது...
அது சிறிய கற்கள் நிறைந்த பாதை மட்டுமே !!!
தாண்டிவிட்டால் வெற்றி நிச்சயம் ...
நீ விழுந்துவிட்டதை எண்ணாமல் முன் நோக்கி நடந்து செல்லடி கண்ணே !!!
அப்பா இருக்கிறேன் உன்னோடு...
மழை கொட்டிய பின்னே வரும் வானவில் மிக அழகாக இருக்கும், அதே போல உன் வாழ்க்கை பயணத்தில் வரும் சோதனை அனைத்தும் ஒரு நாள் சாதனையாக மாறும் என்பதை மனதில் வைத்து நகர்ந்து செல்...
உன் கனவுகள் உன்னை கைவிடாது.
நீ இன்னும் வலிமையோடு எழுந்து நிமிர்ந்தால்,
உலகமே உன்னை வியக்கும்.
என் கையை பிடி கண்ணே… நீ தடுமாறினாலும் உன் கனவுகளை நான் கைவிடமாட்டேன்...
உன் திறமை உன்னை விட்டு போகாது...உன் உழைப்புக்கு பலன் நிச்சயம் !!! நீ மீண்டும் எழுந்து நிற்பாய் , அப்பாவின் நிழல் உன் பின்னே எப்பொழுதும் இருக்கும் ...
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version