தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 378

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.



நிழல் படம் எண் : 378

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Thenmozhi:
மழலையின் அழகில் மயங்கினேன்....

அதிகாலை மலரும் மலர்களை மிஞ்சிவிடுகிறது
மழலை உந்தன் அழகிய புன்னகை!
கோடி மருந்துகள் இருந்தும் பலன் இல்லை!
உன் சிரிப்பு ஒன்றே என்னை குணமாக்கி விடுகிறதே!
கள்ளம் கபடமற்ற உந்தன் மழலை சிரிப்பு
கவி பாட வைக்கிறதே என்னை!

உயிரும் மெய்யும் கலந்திருக்கிறது உந்தன் புன்னகையில்!
நீ பேசிடும் மழலையில் ஒலிக்கின்றன இசைக்கருவிகளின் அனைத்து மெட்டுக்களும்!

எத்தனை துன்பங்கள் இருந்தாலும் மறந்து போகின்றது உந்தன் மழலை பேச்சிலும்,சிரிப்பிலும்!
நீ தூங்குகின்ற அழகினை இரசிக்க ,கோடி கண்கள் கொடுத்தாலும் போதாது மழலையே!

இரசித்தபடியே இருந்திட இறைவன் படைத்திட
ஒரே மொழி உந்தன் மழலை மொழியே!
உன் அழுகை கூட அழகான கவிதை ஆனதே!
அம்மா என்று கூறும் உன் மழலை தமிழுக்கு அழகானதே!

இயற்கை அழகு கூட தோற்றுவிட்டதே !
மழலை உந்தன் அழகினில்!
இதயம் திருடி நீ சிரிக்கிறாய்
தெய்வத்தின் சாயல் தெரிகிறதே உன் சிரிப்பினில்!
நன்றாக தூங்கு மழலையே !
இந்த பருவம் போய்விட்டால்
வேறு பருவம் இல்லை நிம்மதியாக தூங்குவதற்கு!

மழலையே உந்தன் அழகினில்
மயங்கிய மாது நான்
மண்ணுலகில் இருக்கும் வரையில் இரசித்துகிட்டே இருப்பேன்!
மழலையே உன் கூட மழலை மொழி பேசிகிட்டே இருப்பேன்- நானும் ஒரு மழலையாக!
நீ மழலை மொழி ! நான்  உன் தேன்மொழி!

Lakshya:
ஏன் எனக்குன்னு எந்த பெயரும் வைக்கல??? எல்லாரும் "குழந்தை" - அப்படி தான் சொல்றாங்க, என யோசித்து கொண்டிருந்த பாப்பா திடீரென...

அடடா விடிஞ்சிருச்சு போல சேரி எழுப்புவோம் அம்மாவ...

கண்கள் மெல்ல விழிக்கிறாள் அம்மா குழந்தை அழும் சத்தம் கேட்டு...கதிரவன் கூட இன்னும் துங்கிட்டே தான் இருக்காரு உனக்கு என்ன அவசரம் என்று கொஞ்சி கொண்டே கேட்டாள்...

பசிக்குதே அம்மா என்று குழந்தை செய்கை காட்ட, முத்தமிட்டு தூக்கி கொண்டாள்...உன் கரம் என்னை தழுவட்டும் மீண்டும் உறங்குவேன், நீ விழித்திரு என் அருகில்...

விளையாடு அம்மா என்னோடு என்று குழந்தை அம்மாவின் சேலையை பிடித்து இழுக்க... குட்டி கைகளை பிடித்து சொன்னாள் வேலை இருக்கிறது என்று...அந்த மழலைக்கு என்ன புரியும்???

மீண்டும் அதையே செய்தது, முகம் சுழிக்காமல் புன்னகையோடு விளையாடினாள்...

விளையாடி கொண்டே குழந்தை உறங்க, அன்னை கவிதையாக ஒரு பாட்டை பாடினாள்...

என் கரங்களில் மலர்ந்த பூவே, என் சுவாசம் நீ தானே...
நீ அழுகிற சத்தம் கூட என் வாழ்வின் ஓர் கவிதை தான் பாப்பா...

உன் விழி பார்த்து ரசிக்கிறேன், உன் சிரிப்பை கண்டு வியக்கிறேன்...
உன் கை பிடித்து நடக்க வைக்க ஆசை ஆனால் நீ இன்னும் தாவுழ கூட இல்லையே...
உன் சிரிப்பின் ஓசையை, எனக்கு கேட்டுக்கொண்டே இருக்க ஆசை...

நீ பார்க்கும்பொழுது உலகம் சுத்தமாக இருக்கணும்...அதற்கு நீயும் ஒரு காரணமாக இருக்கணும், இதுவே உன் அம்மாவின் ஆசை...

Agalya:
என்னில் நீ தோன்றிய அந்த கனம் முதல்
அந்த மெடிக்கல் கிட்டில் செக் பண்ணி
அதுக்கு அப்பறம் ஆரம்பித்த அலப்பற இருக்கே
அந்த அலப்பற
நிக்க முடியல உட்கார முடியல
குனிய முடியல நிமிர முடியல
எந்த பக்கம் பாத்தாலும் கண்ண கட்டுது

காலைங்கறதே எனக்கு 11 மணி தான்
காலை உணவு 12 மணிக்கு
மதியம் உணவு 5 மணிக்கு
இந்த இடைவெளிக்கு நடுவுல
வரும் பாரு ஒரு மயக்கம்
அப்பறம் எங்க நைட் டின்னர் சாப்டரது
விடிஞ்சுருமே

இவ்வளவு கஷ்டப்பட்டு  துயரப்பட்டு
செக் அப் போயிட்டு 2 ஊசி போட்டு
உன்ன வளத்து
2 நாள் வலிக்கு அப்பறம்
பெத்து எடுத்து
சொல்லி முடியல
அப்பாடா முடிஞ்சு னு பாத்தா
அதுக்கு அப்பறம் தான் இருக்கு
நமக்கு வேட்டு

தூங்கறதே இல்ல
விடிய விடிய முழிப்பு
விடிஞ்சு தூக்கம்
இத்தனையும் பாத்து பாத்து வளத்து
இப்போ இருக்க trend எல்லாம் பாத்து
மாதாந்திர photo shoot எடுத்து
ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு theme
ரெடி பண்ணி
அதுக்கு நானே camera man ஆ மாறி

இதுக்கு இடைல காஸ்ட்யூம் வேற
பொண்ணு நா சொல்ல முடியாத டிரஸ் கலெக்க்ஷன்ஸ்
அதே ஆண் பிள்ளைக்கு
ஒரே டிராயர் பனியன் தான்
எதெல்லாம் பாத்து பாத்து எடுத்து
எதுக்கு மத்தில ஆறு மாசம் கடந்தா
அதுக்கு ஒரு கேக் வெட்டி

அப்புறம் நின்னு நடந்து
விழுந்து புரண்டு
வீட்ட ரெண்டு பண்ணி
எல்லாத்தையும் இழுத்து போட்டு
உனக்கு பின்னாடியே நான் அலஞ்சு
என்னோட self care அ மறந்து

குளிக்க வச்சு சோறு ஊட்டி
சீர் ஆட்டி வளத்தா
வளந்து சொல்ற முதல் வார்த்தை
அப்பா
அப்போ வரும் பாரு
ஒரு கோவம்

இவ்வளவு
பொலம்பு பொலம்புற
நீ ஜாலியா
பெட்ஷீட் குள்ள
உக்காந்துகிட்டு என்ன
பாத்து சிரிக்கிற 🤣🤣🤣

சாக்ரடீஸ்:

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

எதுக்கு திட்டு
வாங்குறோம்னு தெரியாமலே
அப்பன் மாதிரியே இருக்கனு அலறுவாங்க
தப்பு பண்ணாலும் சரி
சும்மா இருந்தாலும் சரி
திட்டு தாங்க

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

சாப்பிடும்போது
காரம் மூக்க துளைக்கும்
சளி ஒழுகும்
கையால தொட முடியாது
சட்டையில பின் பண்ணின
kerchief தொங்கும்
தொடைக்கலன்னா ஸ்கூல்ல
திட்டு வாங்க வேண்டியது

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?
 
தூங்கும்போது பெட்ல
உச்சா போனாலும்
காலையில அம்மா கண்ண
உருட்டி உருட்டி திட்டுவாங்க
நிம்மதியா தூங்க முடியாது
என்னடா வாழ்க்கை இது ?

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

பக்கத்து வீட்டு
ரிமோட் கார் கண்ண மயக்கும்
அம்மா வாங்கி தாங்கன்னு
கெஞ்சி கேட்டா இருக்கிற பொம்மையை
ஆடி கிழிச்சவனுக்கு
இப்ப கார் வேணுமா ?
திட்டு மேல திட்டு மனசு வலிக்கும்

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

டவுசர் கழண்டு விழாம
ஒரு கையில பிடிக்கணும்
பிச்சைக்காரன் மாதிரி
நடக்க வேண்டியதா இருக்கும்
இப்படி
ஓடுறது ஜாலியா ?
இல்ல வேதனையா?

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

அப்பா அம்மா ஆனதுக்கு
நம்ப தான் காரணம்
அதுக்கு கொஞ்சம் கூட
நன்றியோ விசுவாசமோ  இல்லாம
மொபைல் பார்த்துட்டே இருக்காதே
கண்ணு போயிடும்னு நம்மளையே
குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

வரவன் போறவன் எல்லாம்
கன்னத்தை புஜக் புஜக் னு
அழுத்தி கொஞ்சுறோம்னு சொல்லுவாங்க
அழகா பொறந்தது என் தப்பா ?

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

சாப்பாடு பிடிக்கலன்னு
வாய் திறக்க முடியாது
காரமோ கசப்போ
வாயில திணிச்சு
முழுங்கி முடிக்கணும்
இல்லன்னா திட்டு காத்திருக்கு

ஆனா
ஒரே ஒரு நல்ல விஷயம் சொல்லணும்னா
காசுக்காக எங்கயும் ஓட வேண்டியதில்ல
கையில காசு இல்லனாலும் மனசு லேசா இருக்கும்
அதான் குழந்தைப் பருவத்தோட ஒரே ஜாலி !

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version