தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 375

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Thenmozhi:
     சமத்துவம் பேணுவோம்

வேண்டும் வேண்டும் சமத்துவம்- நம் சமூகத்தில்
பெண்ணுக்கும் ஆணுக்கும் சம உரிமைகள்!
வேண்டும் சம அங்கிகாரம்!
வேண்டும் சம அளவு சுதந்திரம்!
சமத்துவம் நிலவ வேண்டும் இந்த பார்தனில் !
சங்கடங்கள் ஓய வேண்டும்!
இந்த சமூகத்தை மாற்றியமைக்க விரும்புகின்றேன்!

கொடுக்கும் அன்பிலும்,பெற்றுகொள்ளும் அன்பிலும்
சமத்துவம் பேணுவோம்!
வாழ்க்கையை சிறப்பாக மாற்றிடுவோம்!

சாதி,மத பேதங்கள் எதற்கு?
உயர்ந்தவர்,தாழ்ந்தவர் பாகுபாடு எதற்கு?
நாம் அனைவரும் சாணக்கிய  மானிடர் என்பதில் சமத்துவமே!
சாதி மத பேதத்தால் வரும் ஆணவ படுகொலைகளை
நீக்கிடுவோம் சமத்துவம் பேணி

ஏழைகள்,பணக்காரன் என்ற பிரிவினை எதற்கு?
நாம் இவ்வுலகிற்கு வரும் போதும் எதுவும் எடுத்து வரவில்லை
நாம் இவ்வுலகை விட்டு போகும் போதும் எடுத்து போவதில்லை
எல்லாரிடமும் அன்பை பேணுவோம் !
சமத்துவத்தை கடைப்பிடிப்போம்! -இவ்வுலகில்
சந்தோசமாக வாழ்வோம்!


RajKumar:
மகன் வளரும் போது
மகிழ்ச்சியையும் துன்பத்தையும்
வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை
அவன் கடந்து வளர்வதை உணர்கிறாள் அம்மா
தன் வியர்வை துளிகளை
அவனின் வளர்ச்சிக்கு
பரிசு அளிக்கிறாள் அம்மா
தாயின் அன்பு மகனுக்கு
ஓர் வழி காட்டி
வாழ்வில் சந்திக்கும் தடைகளை தாண்டி
நம்பிக்கை உறுதியுடன் முன்னேற
விரும்புகிறாள் அம்மா


தாயின் பார்வையில் மகனின் வளர்ச்சி
என் மகன் என் வாழ்க்கையின் ஒளி, அவன் என் சந்தோஷம்.
அவன் என் கண்களில் தெரியும் கனவு, என் இதயத்தின் துடிப்பு.
அவன் வளரும்போது, நான் அவனுடன் சேர்ந்து வளர்கிறேன்.
அவன் என் வாழ்க்கையின் அர்த்தம், என் எதிர்கால நம்பிக்கை.
அவன் என் மகன், நான் அவனைப் பற்றிப் பெருமைப்படுகிறேன்.

மகனின் பார்வையில்
என் அம்மா என் முதல் நண்பன், என் வழிகாட்டி.
அவள் என் வாழ்க்கையின் ஒளி, என் பலம்.
அவள் என் மீது வைத்திருக்கும் அன்பை நான் எப்போதும் போற்றுவேன்.
அவள் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்.
நான் ஒருபோதும் அவளை ஏமாற்ற மாட்டேன், அவள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
அம்மாவின் வியர்வை துளி
மகனின் செல்வம் ஆகிறது
மகனின் வளர்ச்சி
தன் வளர்ச்சி என எண்ணி
மகிழ்ச்சி அடைகிறாள் அம்மா

மகனின் வளர்ச்சியை கண்டு
மகிழ்ச்சி அடைய அம்மாவும் இல்லை
தன் வளர்ச்சிக்கு
 அம்மாவின் தியாகம் என
உணர மகனும் இல்லை

Yazhini:
பகட்டான ஆடையும் செல்வசெழிப்பும்
பலரின் கனவு - அதற்கு
ஆகூழினைப் பற்றாமல்
உழைப்பினை விதை...

உழைப்பின்றி வரும் செல்வம்
விட்டில் பூச்சியைப் போன்றது.
அதன் வாழ்வு சொற்பமே.
உழைக்காத செல்வம் நிலைக்காது.

இவ்வூழினைக் கடக்க
பிறர் இன்னலைக் களைய
சமத்துவம் பேண
மகத்துவம் காண
உழைப்பின் கனியைப் புசிக்க
பொருட்செல்வம் தேவைதான்.

ஆனால் தீராசெல்வமும் தீர்ந்துவிடும்
பூமியின் சிறு அசைவில்
ஆண் பெண் பேதமுமில்லை
இதில் செல்வந்தன் ஏழை
என்ற பாகுபாடுமில்லை.

சேர்த்த செல்வம் கைவிடினும்
உழைப்பு அதனை மீட்டுத்தரும்
ஆதலால் ஆகூழினைப் பற்றாமல்
உழைப்பினை விதை...
உலக தராசில் உழைப்பே
செல்வம் ...


(ஆகூழ் - அதிர்ஷ்டம் ).

சாக்ரடீஸ்:
முதலாளி தொழிலாளி உறவு
கணவன் மனைவிக்கு இணையான
நம்பிக்கையும் நேர்மையும் ஊசலாடும்
உணர்வின் பாலம் போல
ஒன்றாயிருத்தல் வேண்டும்.

முதலாளி தொழிலாளி
இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
ஒன்றில் நம்பிக்கை மற்றொன்றில் நியாயம்
இரண்டும் சேர்ந்தால் தான் மதிப்பு பெறும்

முதலாளி தொழிலாளி வேலைக்கு
தகுந்த ஊதியம் தர வேண்டும்
அவனை ஒரு இயந்திரம் போல
இயக்கக் கூடாது.

அதேபோல தொழிலாளி
வாங்குற சம்பளத்துக்கு ஏற்ப
விசுவாசத்தோடும் மனசாட்சியோடும்
வேலை செய்ய வேண்டும்.

இங்கு வேர்வை தான் மூலதனம்
வேர்வை சிந்தாமல் இங்கு எவராலும்
தொழிலாளியாகவோ இல்லை
முதலாளியாகவோ ஆக முடியாது

முதலாளி ஆனவுடன்
"நான் தான் எல்லாம்"ன்னு
ஒரு கர்வம் தலையில் வைக்க கூடாது
தொழிலாளியின்
துன்பம் புரிந்து கொள்ள வேண்டும்
அவர்களுக்கும் குடும்பம் இருக்கும்
என்பதை உணர வேண்டும்

"நான் இல்லாம நீயே இல்ல"ன்னு.
ஒரு தொழிலாளி ஒரு போதும்
இப்படி நினைக்க கூடாது
நியாயமான உரிமைகளையும் கோரிக்கைகளும் கேட்டுப் பெற வேண்டும்.
அதில் அறம் இருக்க வேண்டும் தவிர
திமிர் இருக்கக் கூடாது.

கார்ல் மார்க்ஸ் சொன்னார்
உழைப்பின் மதிப்பை

"உழைப்பாளி தான் உலகம் நகர வைக்கும் சக்தி"ன்னு.
ஆனால்
அந்த சக்தி புத்திசாலித்தனமா
இருக்க வேண்டும்
வெறுப்பாக இல்லாமல் விழிப்புணர்வோடு
இருக்க வேண்டும்

பில்கேட்ஸ் சொன்னார்
பொறுமையின் பாடம்

"மூன்று வருடமாக
ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பொறுமை மக்களிடம் இல்லை.
ஆனால்
நாற்பது வருடமாக வேலைக்கு
செல்லும் பொறுமை அவர்களுக்கு உண்டு"
சிறந்த முதலாளி ஆவதற்கு
பொறுமையாக இருக்க வேண்டும்

பணம் மட்டும் வாழ்க்கை அல்ல
உணர்வும் ஒற்றுமையும் தான் வாழ்க்கை
முதலாளியும் தொழிலாளியும் ஒன்று சேர்ந்தால்,
தொழிலும் வளரும் நாடும் வளரும்

தராசு போன்ற வாழ்க்கை சூழலில்
முதலாளி தொழிலாளி இருவரும் சமமாக
தங்கள் பங்கை தர வேண்டும்.

உழைப்பும் நியாயமும் ஒன்று சேர்ந்தால்
முதலாளி தொழிலாளி உறவு பொன் ஆகும்.


Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version