தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 374
Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 374
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
Madhurangi:
திரும்ப முடியாத வழி..
அம்மா ,
என் கண் முன்னே சக்கரவியூகம்.. பாண்டவ குல வழித்தோன்றலாக என் கடமையினை நிறைவேற்றும் பெரும் பாக்கியம் பெற்ற தருணம் இது..
நுழையும் வழி கருவறையிலேயே போதித்தவர் என் தந்தை.. வெளியேறும் வழியோ விதி என்னை அறிய செய்யவில்லை ..
வீரனாய் வாழும் பெருமைக்கு சற்றும் குறைவில்லாதது வீரனாய் சாவது என.. மரணதேவதையினை நோக்கி முன்னேறுகின்றேன்..
16 வயது பாலகனான என் உயிர் குடிக்க காத்திருக்கும் பெரியப்பா துரியனின் கண்ணில் எத்தனை வன்மம் ? என்னை தூக்கி மகிழ வேண்டிய கைகளினால் என் ஆவி பறிக்க காரணம்.. உயிரற்ற இந்த மண்ணும் பொன்னுமா??
தளராத மனதுடனும்.. அயராத வீரத்துடனும் என் வாள் சுழற்றி எதிரிகள் பலர் தலை கொய்து நின்றேன்.. நெருங்கும் வழி அறியாது காலட்படையும் , யானை படையும் கூட நடுங்கி நின்றன..
தர்மசாஸ்திரங்கள் பல அறிந்த தாத்தா துரோணரும், மாமா அஸ்வத்தனுமாக எழுவர் என்னை சூழ்ந்தனர்.. போர் நெறிமுறையினை துறந்தனர்.. உன் மகன் உடல் மண் சேர காரணமாயினர்..
முக்காலம் உணர்ந்த மாமன் மாயவன் கூட என் விதி அறிந்திருப்பாரோ??
ஆனால் நிச்சயம் பெருமையுற்றிருப்பார்.. தன மருமகன் வியூகத்தை கடந்தவன் அல்ல எனிலும் .. தன்னம்பிக்கை இழக்காதவன் என்று..
பெரியப்பா தர்மரும், பீமனும் , சித்தப்பா நகுல சகாதேவனும் என் மரண செய்தி கேட்டு அடையும் கோவத்தின் வெம்மையினையும் அதனால் ஏற்படப்போகும் அழிவுகளின் கோரத்தையும் .. இப்போதே என்னால் உணர முடிகின்றது..
நீ அழாதே அம்மா..
நான் பூவுலகில் வாழ்ந்த காலம் சொற்பமெனினும் .. நீ பெருமை கொள்ளலாம் உன் மகன் வீர மரணத்தின் சான்றென..
மீண்டும் சந்திப்போம்.. யுத்தமும் , ரத்தமும், பிள்ளையினை இழந்த தாயின் அழுகுரல் இல்லாத ஒரு புது உலகத்தில்..
போய் வருகிறேன்
இப்படிக்கு
உயிர் நீத்தாலும் உன் நினைவுகளில் வாழும்
அபிமன்யு..
Thenmozhi:
உலகத்தை வியக்க வைத்த நம் ஈழத்து வீரர்கள்
உலகை வியக்க வைத்த நம் உன்னத வீரர்கள்!
தமிழன் வீரத்தை பறை சாற்றி நின்றவர்கள்!
சரித்திரங்கள் படைத்த சாதனை சிகரங்கள்!
உலகை எதிர்த்து உரிமை கேட்டவர்கள்!
சுயநலம் இன்றி பொது நலத்திற்காக போர் தொடுத்த வீரர்கள்!
தாய்ப்பாசம் விடுத்து தாய் மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர்கள்!
விடுதலைக்காக போராட அணிந்தீர்கள் சீருடை
எதிர் நின்று எதிரியை கொன்று வீழ்த்திய வீர புலிகள்!
அண்ணன் வழி நடந்த தெய்வங்கள்!
உங்கள் மன உறுதி கண்டு வியக்கிறேன்!
உயிரை துச்சமென மதித்து மானம் காக்க போராடிய வேங்கைகள்!
தலைவன் சொல் தாரக மந்திரம் என சிரம் மேல் கொண்டு நீங்கள் செய்த தியாகம் மறவோம் வாழ்நாளில்
தமிழரின் கலங்கரை விளக்கம் நீங்களே
ஈழத்தின் முத்தான சிற்பிகளும் நீங்களே!
எத்தனை வெடி குண்டுகள்,பீரங்கிகள்,கிளைமோர்கள், கண்ணிவெடிகள்,இன படுகொலைகள்
நம் ஈழத்திருநாட்டில்!
இடப்பெயர்வுகள், உயிர் இழப்புகள்,அங்கவீனங்கள்
எல்லாம் போரின் வடுக்களே!
வணங்குகின்றேன் ஈழத்து போர் வீரர்களையும் மாவீரர்களையும்!
Yazhini:
புரவியின் மேல் புறப்பட்டு வருவது
புயலோ, வேங்கையோ, வேந்தோ !!!
செங்குருதியில் தோய்த வாளும்
பகைவரின் நெஞ்சை பிளக்கும் ஈட்டியும்
நன்னிலம் வாழும் குடியின்
செங்கோலுக்கு இணையாக நிற்கும்.
வானளவும் வீரத்தைப் பறைசாற்றும்.
போரின் பெருங்காயங்கள் அனைத்தும்
பெருங்காவியங்கள் பல பேச
வீரத்தழும்புகள் வெற்றியின் முரசு கொட்ட
குதிரையின் நாலுக்கால் பாய்ச்சலுக்கு
பகைவரும் புறமுதுகிட்டு ஓட
வீரப்படையை வழிநடத்தும் தலைவன்
அவனே நம் மறவன்...
வீரத்தை ஊட்டுவது தாய் அமுதோ
தமிழ்மொழியோ தாய் நாடோ
நெஞ்சுரத்தோடு வீர செறுக்கும்
பயத்தைத் தோற்கடிக்கும் போர்குணமும்
பிறரை புறமுதுகி்ல் குத்துவது
கீழ்குணம் என்ற எண்ணமும்
இருக்கும் வரையில் நாமும் வீரர்களே!!!
இன்று புரவியில்லா போர்க்களம் உண்டு
மனிதத்தைக் காக்க வழியுடன் வலியுமுண்டு.
பலர் அடக்குமுறைக்கு எதிராக போராடுகின்றனர்.
இன்னும் அனேகர் தன்னிடம்
தன்னை மீட்க போராடுகின்றனர்.
எதுவாகினும் மனவலிமையாகிய வீரமே
வாகை சூடும்✨✨✨
Titus:
. [வீரனின் வாசகம் – விரிவாக்கம்
மண் அழைக்கிறது...
அதில் உயிர்கள் விழுந்தாலும், கனவு விழவில்லை!
ஓர் ஊரின் பசியை தீர்க்க,
ஓர் வீரன் தான் உயிரை உருக்கிறான
வெறும் வாளோடு நான் போராடவில்லை...
நம்பிக்கையோடு போராடினேன்.
கையில் இருந்தது ஆயுதம் அல்ல...
அழிக்கவே முடியாத உணர்வுகள்!
பின் தொடரும் ஆயிரம் பேர் –
தங்கள் கண்களில் என் நம்பிக்கை!
முன் செல்கிறேன் நான் –
போரில் மட்டும் அல்ல... நிஜத்தில் வாழ!
போரென்றால் என்ன?
பயத்தை வெல்லும் விழி – அதுவே வீரன்!
சாவும் சாய்ந்த பின் கூட,
வெற்றி என்னை வணங்கும் நாள் வரும்.
நானொரு அரசனாக பிறக்கவில்லை,
ஆனால் என் உள்ளத்தில் ஆட்சி செய்கிறேன்.
பூமி என்னைத் தாங்கினாலும்,
தரையில் பணிந்து வாழ மனம் இல்லை!,
இருட்டினை வெல்ல ஒளியாகக் காத்து நிற்கின்றன,
போருக்கு நான் கீழே இல்லை — மேலே காத்திருக்கின்றேன்
குதிரையின் குளம்படி ஓசை - என் சங்கீதம்!
மண்ணில் விழும் குருதியும் - என் வரலாறு பேசும்.
வழியற்ற போர்க்களம் கூட
வெற்றியின் பாதைக்கு தீபமேற்றும்
என் வீரம் ஒரு கதையாக மாறும் நாளில்,
உன் குழந்தைகள் அதை கனவாகக் கேட்பார்கள்.
நீ என்னை நினைக்க வேண்டாம்,
விரல் நுனியில் உருகும் மண்ணும் நான் தான்!
color]
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version