தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 371

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 371

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Evil:
கடவுளின் கரம்...  நான் பிடித்தே
நடந்த தருணம் அது

வா மகனே வா என ஆசையாய்
அழைத்து செல்லும் என் அன்பு அப்பா

காயங்கள் மனதோடு ஆயிரம் இருந்தாலும்..
பிள்ளைகளுக்காக மனதுக்குள்ளே

கவலை அனைத்தும் புதைத்துக்கொண்டு
வாழும் மனித தெய்வம் அவர்...

எனக்கு இவுலகில் எது பார்த்தும் பயம் இல்லை ஏன் எனில்,
நான் பற்றிக்கொண்டிருக்கும் கரமே எனை காத்து நிற்கும்.

உலகமே எதிர்த்தாலும் உன் கரம் ஒன்றே
போது என்னை காத்து நிற்கும் அந்த கைகள்..

கடவுள் தந்த வரம் தானோ உன் மகனாய் 
நான் பிறந்து உன் கரம் பற்றி நடக்கின்றேன்

என் அருகில் அலைகள் வரவும் பயம் கொள்கிறது..
என் தந்தை.. என் அருகில் இருப்பதாலே..

அன்பில் அன்னை என்பர் பலர் ஆனால்
அவளே தோற்று போவாள் என் தந்தைமுன்னே 

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள்
அன்னை முதல் பத்து மாதம் மட்டுமே சுமக்கிறாள்.

ஆனால் ஆயுள் வரை நம்மை சுமக்கும் ஓர் உயிரென்றால்..
அது நம் தந்தையே.. அவருக்கு ஈடு அவரே..

வானத்தில் சிரிக்கும் வானவில்லை கேட்டாலும்..
பாய்ந்து சென்று.. வில்லை வளைத்து நம் கையில்
கொடுக்க துடிக்கும் ஓர் இதயம் கொண்டவன் அவனே..

போர்க்களத்தில் மிக பெரிய படையே வந்தாலும்
என்னுடன் என் சிங்கம் ஓங்கிய கர்ஜனையுடன்

என் தந்தை வந்தாலே..  எட்டு திக்கும் ஓடி ஒளியும்.
தொல்லைகள் கொடுக்கும் அசுர படைகளுமே ..

என்றும் என்னுடனே வாழ்ந்திடும் நடமாடும் தெய்வம் அவரே..
என் அன்பு தெய்வத்திற்கு  இந்த கவிதை சமர்ப்பணம்...

சாக்ரடீஸ்:

அப்பா – என் மனப் பயணம்

சிறியவனாக இருந்தபோது
அப்பா எனக்கு ஒரு வானம் போல,
எல்லாமே அவர்தான்
பாதுகாப்பு, சக்தி, ஆதரவு.

அவரது வார்த்தை
என்றால் சட்டம்,
அவரது பார்வை
என்றால் பெருமை.
அந்த நாட்களில்
அவர் என்ன
சொன்னாலும் நம்பினேன்.

ஆனால்…
நான் வளர்ந்தபோது
என் கனவுகள் பிறந்தன,
எனக்கான பாதை உருவானது.

ஆனால்…
அவர் என் பாதையைப்
புரிந்து கொள்ளவில்லை.

ஆனால்...
காலம் தாவியது...
கனவுகள் மாறின,
அவரைப் புரியாமலே
என் மனம் கலங்கின.
“இது செய்யாதே”, “அதை விடு”
என்ற வார்த்தைகள்,
தடைகள் போல் தோன்றின
அன்பு இல்லா கட்டுப்பாடுகள்.

"என்ன செய்வது,
எதை விரும்புகிறேன்"
என்ற என் சொற்கள்
அவருக்கு தேவையில்லை
போல இருந்தது.

"நீ மகன்…உனக்கு
கடமை இருக்கிறது" என்றார்,
ஆனால் என் மனம் சொல்லியது
"நானும் ஒரு மனிதன்,
எனக்கும் ஆசைகள் இருக்கும்".

என் கனவுகள் கலைந்தது,
நான் ஆசைப்பட்ட வாழ்க்கை
அனைத்தும் கண்ணீரானது.

இப்போது,
என் வாழ்க்கை ஓர் பயணம் தான்,
ஆனால் அது என் பயணம் அல்ல,
அவருடைய கனவுக்கான நடைதான்.

Titus:
.       .   .    நான் எழுதும் எதிலும்,
மிகச் சிறந்த மூன்று எழுத்து – அப்பா..❤️

விலை மதிக்க முடியாத பொம்மை வாங்கி தருபவர் அல்ல
தன் நெஞ்சையே பொம்மையாக மாற்றிக்
குழந்தையின் புன்னகையிலே வாழ்வை காணும் ஒரு மனிதன்!
அப்பா... ❤️

கண்ணில் கோபம் போல தெரிந்தாலும்,
இதயத்தில் பாசம்தான் பொங்குகிறது...
அன்பும், ஆசையும் கலந்து உருவான
உணர்வின் கோயில் – அப்பா.❤️

தன் துயரை சொல்லாது தாங்கி,
நம் கனவுகளை சுமந்துகொண்டு ஓடும்
தோழனும், தாயாகிவரும்
என் வாழ்க்கையின் முதல் ஆசான்!
அப்பா.... ❤️


தன் தோளில் அமர்த்தி
உலகத்தை வானம் போல காட்டியவர்,
அந்த தோள்கள் வலி கொண்டபோதும்
என்னை உயரத்தில் ஏற்றிவைத்தார்…

உயரச் செல்வதற்கான ஏணி,
தந்தையின் மென்மையான முதுகு!

வாழ்க்கையின் நிழலாக,
எந்தப் புகழும் வேண்டாது நின்றவர்,
கண்ணுக்கு தெரியாத கடவுள் எங்கே தேடுறேன்?
கண்ணுக்குத் தெரிந்தும்,
நெஞ்சால் புரிந்து கொள்ளவே முடியாதவர் –
அப்பா...❤️

அன்பை சொல்வதில்லை, ஆனால்  வாழ்ந்து காட்டுபவர்
நமக்காக வாழ்ந்திட, தன்னை மறந்தார்,
தன் கனவுகள் எல்லாம் நம்மில் வீழ்ந்ததே,
தொலையாத தாக்கம் அவர் நிழல்தான்,
ஒரு பாராட்டும் எதிர்பாராத பேருணர்வு
. என் உயிரின் அடையாளம்.
அப்பா...❤️

நடக்கும் வழியில் என் கைவிடாத கைவாள்,
பசுமை கனவுக்குள் நான் பூக்கும் காரணம்,
என் சுவாசத்துக்கு கூட அர்த்தமாய் நிறைந்தவர்,
அவரின் சிரிப்பே எனக்கு சொர்க்க வாசல்,
என் உள்ளத்தின் எல்லா திரைகளிலும் அவர்தான்,
அப்பா என்றொரு வார்த்தை... உயிர் கொடுக்கும் மந்திரம்.
அப்பா.. ❤️

உன் நிழலில் நான் மலர்ந்த நிமிடம்தான் என் பிறப்பு,
உன் ஆசீர்வாதம் எனும் ஒளியில் நான் ஒளிர்கிறேன்,
உன் தோளில் தலை வைக்கும் நினைவே, எனக்கான தேவையாக   உள்ளது.
 
உன் சுவாசம் இல்லாமல் எது என் வாழ்க்கை?
உனைப் போல யாரும் என்னை நேசிக்க முடியாது,
அன்பாகும் என் அப்பா... Love you, Dad!♥️♥️♥️♥️



            

Asthika:
தந்தையின் தோளில் சுமந்தேன் வாழ்வு,
தாயின் புன்னகையில் கண்டேன் நம்பிக்கை.
முழுமனதுடன் வளர்த்தாய்ங்கே நீ,
என் முதல் நண்பன், என் முதல் ஆசானே!

பள்ளி வழி நீ நடக்க வைத்தாய்,
பிழைகள் செய்ததும் மன்னிக்க வைத்தாய்.
உன் பார்வை போல ஒளி இல்லை என் பாதையில்,
உன் வார்த்தை போல ஆதரவு எதுவும் இல்லை!

நான் வளர்ந்தாலும் நீ என் மரம்,
நிழலாய் நீயிருப்பாய் என்றும் நம் பயணம்.
மகனாய் வந்தேன், நண்பனாய் இருந்தேன்,
தந்தையாய் நீ எனை தேடி வந்தாய்

வாழ்க்கை என்னும் பள்ளத்தில்,
தந்தை ஒரு தூணாக இருந்தார்.
மகன் கற்றது ஒவ்வொரு அடியிலும்,
அந்த தூணின் துணை நிறைந்தது.

தந்தையின் கடின பார்வையின் பின்னால்,
ஒரு மென்மையான காதல் மறைந்திருக்கும்.
மகன் விழுந்தால் தோளாக அமைவார்,
வெற்றியில் தூரத்தில் நின்று பாராட்டுவார்.

மௌனமாகும் அந்த அன்பு மொழிகள்,
நித்தம் உரைக்கும் வாழ்வின் பாடங்கள்.
மகன் வளர்ந்தாலும் மறவேனடா,
தந்தையின் கைப்பிடி இன்னும் என் வழிகாட்டி.

தாயின் மடியில் நெஞ்சம் உண்டு,
தந்தையின் தோளில் உலகம் உண்டு.
வாயாற் சொல்லாது வெளிப்படும் அன்பு,
வாழ்க்கையின் நிழலாய் வருவான் தந்தை.

வெட்கத்தில் மறையும் நெகிழ்ச்சியின் பெயர்,
வெறும் பார்வையில் உருகும் ஒரு நெருப்பின் பேர்.
சிரிப்பதற்குள் பதைந்து நிற்கும் மனம்,
தந்தையின் பாசம் ஒரு கடல் எனும் தனம்.

சோர்ந்தேன் என்றால் துணையாக நிற்பார்,
சூறாவளியில் கூட சுவாசமாய் இருப்பார்.
அரசனாய் அல்ல... அடியெடுத்து நடத்தும்,
அழகான புரட்சியாய் வருவார் என் தந்தை!

மகனிடம் தந்தை கூறும் வார்த்தைகள் குறைவு,
ஆனால் செயல்களில் பாசம் பெருகும்.
கோபம் போல தெரியும் கூச்சல் கூட,
ஒரு அன்பின் முகம் – நமக்குத் தெரியாத மொழி.

மௌனமாய் கொடுக்கப்படும் ஒவ்வொரு சீருடை,
சிறு சிரிப்பாய் மறைந்திருக்கும் பெரும் நம்பிக்கை.
மகனின் கண்ணீரைப் பார்த்தாலே போதும்,
தந்தையின் உள்ளம் உருகும் ஓர் ஊற்று போல.

கண்களைத் திறக்கும் முன் வேலைக்குச் செல்லும்,
மறுபடியும் களைப்புடன் வீடு சேரும்.
அவர் பேசாமல் போன நாளிலும்,
மகனுக்காய் வாழ்ந்தார் – அந்த தந்தை.

வெறும் நிழலாய் தோன்றும் ஒருவர்,
வாழ்க்கையின் ஒளியாகி விட்டார் பிறகு.
அவனுக்குள் ஒளிந்திருக்கிறது பாசம்,
பார்த்தால் தெரியும் – நம்மையே போன்றவன்!

தந்தை அன்பு வாழ்நாளும் கிடைக்காத பாக்கியமற்றவளாக ஆகிவிட்டேன்...
எனது இரண்டாவது தந்தையாக இருக்கும் என்னவனுக்கு சமர்ப்பிக்கின்றேன்.. i love u so much 💗💗💗💗💗..

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version