Author Topic: நண்பர்களின் மேலான கவனத்திற்கு  (Read 21969 times)

Offline Global Angel

நண்பர்களின் மேலான கவனத்திற்கு ....

இப்பகுதியில் இடம் பெரும் பதிவுகள் அழகுற அமையும் பொருட்டு,பதிவினை மேற்கொள்பவர்களுக்கும்,பாடல் வரிகளை தேடுபவர்களுக்கும் இலகுவாக்கும் பொருட்டு பின்வரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுகிறோம்..


1.பதிவுகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களிலேயே அமையவேண்டும்
 
2.திரைப்பட பெயர்களின் தலைப்புகள் மட்டும்
ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களில் இருக்க வேண்டும். தொடக்கத்தில் ஆங்கில எழுத்துக்களிலும்  அதை தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் தமிழ் எழுத்துக்களில் இடம் பெற வேண்டும்.

உதாரணம் .
                 Anbe Vaa (அன்பே வா )
                 Billa (பில்லா )
                 Ottran (ஒற்றன் )

3.ஒரே திரைப்பட தலைப்புக்குள் அந்த திரைபடத்தில் இடம்பெற்று இருக்கும் அனைத்து பாடல்களும் இடம் பெரும் வகையில் பதிவு செய்யவேண்டும்

4.நீங்கள் பதிவிட  விரும்பும்  திரைப்பட பாடல்கள் ஏற்கனவே பதிவு பெற்று இருக்கிறதா என சரிபார்த்து பின் பதிவை மேற்கொள்ளவும்.

5.ஏற்கனவே பதிவிடபட்ட திரைப்பட பாடல்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில்
மறுபதிவு செய்தவர்களின் அப்பதிவு நீக்கம் செய்யப்படும்.
« Last Edit: October 28, 2012, 02:47:03 PM by Forum »