பயணம்...
வேல்விழியாள் என விளித்தவனே!
உன் அக்னிபார்வையும் அன்பைப் பொழியும்
கடும் கோபமும் கதகதப்பைத் தரும்
கார்மேக மழையென காட்டாறு வெள்ளமென
கட்டுக்கடங்கா உனது அன்பில்
காணாமல் போகிறேன்..
என் பெண்மையின் கூடாரமே!
உன்னருகில் மலர்கிறது என்னுள்ளம்
உன்னுள் அடங்குகிறது என்னுள்ளம்
உன்னுள் புதையுண்ட என்னைத்தேட
உன்னோடு பயணிக்கிறேன் மீண்டும்
மீண்டும் புதைந்து போகின்றேன்
உன்னுள் என்பயணம்
முடிவுறா பயணம்