Author Topic: ஒருநாள் இறந்துவிட்டான் சேகர்.....  (Read 47 times)

Offline MysteRy



ஒருநாள் இறந்துவிட்டான் சேகர்.....

ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும்
'செத்தான்டா சேகரு செத்தான்டா சேகரு'ன்னு  சொல்வோமே அந்த சேகரு தான்.....

இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.

சித்ரகுப்தன் : மனிதா நில்... சொர்க்கத்திற்குள்  போகணும்னா நீ ஒரு வார்த்தைக்கு  Spelling correctஆ சொல்லணும்.

சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?

சித்ரகுப்தன் : லவ்..

சேகர் : L O V E.

சித்ரகுப்தன்: சரியான விடை.. சொர்க்கத்திற்குள்  உள்ளே வாங்க. சேகரை கூட்டிக்கொண்டு  உள்ளே போகும்போது சித்ரகுப்தனின்
ஃபோன் ரிங் அடித்தது...

சித்ரகுப்தன் : கடவுள் என்னை ஏதோவொரு  காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்.. நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்.

சேகர் : சரிங்க சாமி...

சித்ரகுப்தன் :  நான் திரும்பி வருவதற்குள் யாராவது இங்கே வந்தால், நான் கேட்ட இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங்  சொல்லிட்டாங்கன்னா அவங்கள நீ  சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களை அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாதே... அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட் கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க... இதைக் கேட்டதும் சேகர் கொஞ்சம் நடுங்கிப் போயிட்டான்....

சேகர் : சரிங்க சாமி...

சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான்... சேகர் அதிர்ச்சி அடைந்தான்.. காரணம் அது சேகரின் மனைவி.

சேகர்: நீ எப்படி இங்கே வந்த ?

மனைவி : அதாங்க... உங்க பிணத்தை எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில  என்னை ஒரு பஸ் இடிச்சிருச்சி. அதுக்கு பின்னால் நான் பார்க்கிறது இந்த இடந்தாங்க....

சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த தன் மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான் நில்.. நில்.. இங்குள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும். கரெக்டா SPELLING சொன்னா மட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத் தான் போகணும்.

மனைவி : என்ன வார்த்தைங்க அது ?

சேகர் :
செக்கோஸ்லோவாகியா....

😳😳😳
« Last Edit: February 02, 2025, 09:30:41 PM by MysteRy »

Offline Ishaa

@Mystery Hahaha
Ennada ithu Sekar Manaivikku vantha sothanai 🤣🤣🤣🤣

Czechoslovakia
Ithu thane anthe varthai 🤣🤣🤣

Offline MysteRy

Maybe irkalam Ishaa Sis

« Last Edit: February 03, 2025, 05:27:02 PM by MysteRy »