என்றோ காணும் என் நண்பனின் முகம் ஞாபகப்படுத்தும் என் வாழ்நாளின் வசந்த காலத்தை
புது புத்தக பை உடன் ஆசையாய் சென்றது முதல் நாள் பள்ளிக்கு மட்டும் தான்
அன்று தொடங்கி நான் பள்ளி காலம் முடிக்கும் வரை தினமும் காலை ஒரு சோகத்தோடே சென்ற பள்ளி
அன்னை போலவே அன்பு காட்டி தந்தை போல வாழ்க்கையின் முதல் படியில் கால் வைக்க செய்த எனது ஊர் ஒட்டு கட்டிடம் இன்னும் கம்பிரமாக சொல்லும் என் மடியில் தான் முதன் முதலில் நீ தவழ்ந்துதாய் என்று
பென்சிலுக்கு சண்டை போட்ட என் நண்பன்
அவனை சமாதானம் படுத்த நான் கொடுத்த அழகிய லப்பர்
எவ்வளவோ விளையாட்டு இருந்தாலும் மரத்து அடியில் பாடம் நடத்தும் போது மண்ணில் விளையாடும் சுகம் வேறு எந்த விளையாட்டிலும் கிடைக்காது
இவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலும் பரீட்சை அப்போ கிடைக்கும் அடி இப்பொது நினைத்தாலும் சிரிக்க தோன்றும்
வாசனையை வைத்தே யார் என்ன சாப்பாடு என்று கணித்து திருடி சாப்பிடும் சுகம் 5 ஸ்டார் விடுதியில் கூட கிடைக்காது
அன்பும் கனிவும் கொண்ட தமிழ் ஐயா
என்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க போராடிய ஆங்கில ஆசிரியை
எப்போதும் என்னை பாரட்டும் கணித ஆசிரியர்
அடித்தல் கூட வலிக்காமல் அடிக்கும் எங்கள் அறிவியல் ஆசிரியர்
சிறு தவறு என்றாலும் தூக்கி போட்டு மிதிக்கும் சமூக அறிவியல் ஆசிரியர்
எப்போதாவது நாங்கள் செல்லும் PT வகுப்பு ஆனாலும் அதிலும் விளையாடியாது இல்லை
இவை அனைத்தும் அழகிய நினைவுகளாக மட்டுமே இருக்கிறது ஒரு ஒரு நிகழ்வும் நினைக்க நினைக்க இனிக்கும் நினைவலைகள்
இன்று கடந்து சென்றால் கூட கண்கள் என் வகுப்பை தேடும் முகத்தில் புன்னகை பூக்கும்
அது என் பள்ளி அன்று அல்ல என்றும் அது என் பள்ளி