300 வாரங்களை வெற்றிகரமாக தொட்டிருக்கும் இசைத் தென்றல் நிகழ்ச்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக இத்தனை வாரங்களாக தொடர்ந்த நடத்த உறுதுணையாக இருந்த Admin, FTC Team, இசைத் தென்றல் RJ'S DJ's, பாடல்களை பதிவேற்றிய நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். தொடர்ந்து 500, 1000 என பல வாரங்களை கடந்து வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சி நடைபெற எனது பிரார்த்தனை.
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் அண்ணாமலை திரைப்படத்தில் இருந்து வெற்றி நிச்சயம்
திரைப்படம்: அண்ணாமலை
பாடல்: வெற்றி நிச்சயம்
பாடகர்: எஸ்.பி.பி
இசையமைப்பாளர்: தேவா
பாடலாசிரியர்: வைரமுத்து
இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்
இன்று கண்ட
அவமானம் வென்று
தரும் வெகுமானம்
வானமே தாழலாம்
தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம்
இல்லாமல் வாழ்வில்
என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால்
ஓடைக்கில்லை சங்கீதம்
இந்த பாடலை FTC நண்பர்கள் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன்