பாடகர்கள் : கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் மற்றும் முர்துசா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : கரி ரிச கரி ரிசா……..
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
நி ச சநி சசச…………………………
ஆண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலிலேயே மிக பெரும்
பூவும் நீயடி
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும்
நீயடி
ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
பெண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய் மரம்
நதி காற்று நீ நான் தாவரம்
பெண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : இயந்திர மனிதனை போல்
உன்னையும் செய்வேனே
இரு விழி பார்வைகளால்
உன்னையும் அசைப்பேனே
ஆண் : அழகிக்கு எல்லாம்
திமிர் அதிகம்
அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று தானே
உன்னிடம் கண்டேன்
பெண் : கவிஞனுக்கெல்லாம்
குரும்பு அதிகம்
கவிஞனின் குரும்பில்
சுவை அதிகம்
அதை இன்று நானே
உன்னிடம் கண்டேன்
ஆண் : நடை நடந்து போகையில்
நீல கடல் நீ
ஞானம் கொண்டு பார்க்கையில்
நீ இலக்கியமே
ஆண் : அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
குழு : ………………………
பெண் : நறுமணம் என்பதர்க்கு
முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதர்க்கு
முகவரி நீதானே
ஆண் : என்னிடம் தோன்றும்
கவிதைக்கெல்லாம்
முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
பெண் : இரவுகள் தோன்றும்
கனவுக்கெல்லாம்
இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீதான்
ஆண் : மழை துளிக்கு மேகமே
முதல் முகவரி
உன் இதழில் மௌனமே
உயிர் முகவரியோ….ஓஒ….
பெண் : அனார்கலி அனார்கலி
ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ
பெண் : சிரிப்பும் அழுகையும்
சேரும் புள்ளியில்
என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்
சுவாசித்தேனடி உன் பார்வையால்
ஆண் : கரி ரிச கரி ரிசா……..
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
கரி ரிச ச நி ச ச நி சசச
கரி ரிச கரி ரிசா……….
நி ச சநி சசச…………………………
Always favorite song 😘