Author Topic: ரயில் ஸ்நேகம்  (Read 423 times)

Offline Clown King

ரயில் ஸ்நேகம்
« on: December 03, 2024, 08:43:50 PM »
ரம்மியமான காலைப்பொழுது நேரத்தில் எழுந்து தயாராகிக் கொண்டிருந்தான் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பிடிக்க இரவே தயாராக வைத்திருந்த தனது பையை எடுத்துக்கொண்டு கோவை ரயில் நிலையத்தை அடைந்தான் எப்பொழுதும்போல் பரபரப்பாக காணப்பட்டது ரயில் நிலையம் ஆவின் பாலகம் சென்று ஒரு காபி கையில் பிடித்துக்கொண்டு தனது பெட்டியை நோக்கி நடக்கத் தொடங்கினேன் ஊருக்கு செல்வதென்றால் எத்தனை பரபரப்பு தனி சந்தோஷம் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தனது ஜன்னலோர இருக்கை அடைந்தான் அந்த ஜன்னலோர இருக்கை கிடைப்பதில் தான் எத்தனை சந்தோஷம் கொண்டு வந்த பையை அதனிடத்தில் வைத்துவிட்டு  ஹெட்போனை மாட்டிக்கொண்டு தான் வைத்திருந்த பாட்டு தொகுப்புக்களை கேட்கத் தொடங்கினான் ஆறு பேர் கொண்ட இருக்கையில் தான் மட்டுமே தனித்து பயணம் செய்தான் வண்டி மெல்ல திருப்பூரை அடைந்தது ஒரு ஆளாய் பயணித்த அவன் இப்போது ஆறு பேர்களுடன் சேர்ந்து பயணித்தான். நான்கு முதியவர்கள் பின் 35 வயதைத் ஒத்த ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார் அவரும் தனது ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க தொடங்கினார் ரயில் வண்டி ஈரோடு வந்தடைந்தது நான் இறங்கிப்போய் உண்பதற்கான காலை சிற்றுண்டியை வாங்கி வந்தேன். எதிரில் அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது வினவினேன் அவரிடம் ஏதாவது வாங்கித் தர வேண்டுமா சங்கோஜம்  பட்டுக் கொண்டு ஆதாரம் ஆமா எப்படி கேட்கறதுன்னு தெரியல அதான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன் என்றார்இதுல என்ன இருக்கு ஜஸ்ட் கேட்க வேண்டியதுதானே என்ன வேணும் சொல்லுங்க வாங்கிட்டு வரேன் என்றேன் இட்லியும் பழம்பொரியும் போதும் என்றார் பழம்பொரி ஈரோடு ஸ்டேஷனில் அருமையாக இருக்கும் அதிலிருந்து தெரிந்து கொண்டேன் அவர் அடிக்கடி இவ்வழியில் பயணம் செய்பவர் என்று இருவரும் சாப்பிட்டு முடித்தோம் பின் பேசத் தொடங்கினோம் பேச்சு இசையின் பக்கம் நகர்ந்தது எஸ்பிபி சுசீலாம்மா ஜானகியம்மா இன்றைய பாடகர்கள் சித் ஸ்ரீராம் ஷ்ரேயா கோஷல் நித்யஸ்ரீ மகாதேவன் பெண் ஏ ஆர் ரகுமான் மியூசிக் இளையராஜா மியூசிக் தேவா மியூசிக் அனைவரையும் ஒப்பிட்டு எங்கள் உரையாடல் சென்றுகொண்டிருந்தது வண்டியோ சேலம் தாண்டி மறப்போர் தாண்டி ஜோலார்பேட்டை வந்தடைந்தது மறுபடியும் இருவரும் ஒரு வடையும் தேநீரும் பருகினர்  இருவருமே எண்ணங்களும் இசையில் ஒன்றாக இருந்தது அறிந்தனர் ரயில் சினேகம் நட்பாக மாறியது இருவரும் தங்களது வாட்ஸ்அப் நம்பரை பரிமாறிக்கொண்டனர் ஒரு பெண் தனது நம்பரை பரிமாறிக் கொள்ளை எத்தனை யோசித்திருப்பார் என்று அறிவீர்கள் இந்த நான்கு மணி யாத்திரையில் அவன் அவளின் நம்பிக்கையைப் பெற்றான் காட்பாடி ஜங்ஷன் வந்தது அவளும் தான் இந்தி இறங்கப்போவது அறிவித்து கைகுலுக்கி சென்றாள் இருவருக்கும் மகிழ்ச்சி. அவரவர் தங்கள் பணியை நோக்கி சென்றனர் இரவு வந்தது வாட்ஸ்அப் அடித்தது சாப்பிட்டீங்களா என்ன பண்றீங்க பின் தங்கள் இருவரும் முழுமையாக அறிமுகப்படுத்திக் கொண்டனர் நாட்கள் நகர்ந்தது தட்பம் கூடிக்கொண்டே போனது ஒரு கட்டத்தில் அவளது மெசேஜ் இல்லை என்றாள் துடித்துப் போனான் நாட்கள் நகர்ந்தது அவளிடம் இருந்து எந்த ஒரு மெசேஜும் வரவில்லை துடித்துப் போனார் அழைத்துப் பார்த்தாள் நம்பர் நாட் ரீச்சபிள் என்ன காரணம் என்னவென்று தெரியாமல் துடித்துப் போனான் அழகாய் கிடைத்த ஒரு நட்பு இப்பொழுது இல்லையே என்றேன்

இப்பொழுதும் அது இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருப்பூரை அடையும்போது படிக்கட்டுகளில் நின்று பார்ப்பான் எங்கேயும் அவள் மறுபடியும், வரமாட்டாளா என்று தேங்கி துடித்தன கண்கள்

இன்றும் காத்துக்கிடக்கின்றன அவள் வரவுக்காக .....