Author Topic: வாக்கு  (Read 4036 times)

Offline Nivrutha

வாக்கு
« on: August 09, 2023, 03:47:46 PM »
தொழிலதிபரும் அவர் மகனும்:

முன்னொரு காலத்தில் பிரசித்தி பெற்ற தொழிலதிபர் ஒருவர் இருந்தார்.அவர் நோய் வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் தன் வாழ் நாளின் கடைசி தருவாயில் தத்தளித்து கொண்டிருந்த போது,இதுவரை தான் காப்பாற்றி வைத்த வணிக சாம்ராஜ்யத்தை,தன் மகனின் பொறுப்பில் ஒப்படைத்தார்.





மகனோ திணறிப்போனான்,நான் எப்படி அப்பா நீங்களின்றி எல்லாவற்றையும் சமாளிப்பேன் என்று கேட்க,தன் வாழ்நாளில் கடைபிடித்த இரண்டே விடயங்களை பின்பற்றும்படி மகனிடம் கூறினார்.

மகன் விழி விரித்து தந்தையை கவனித்தான்,அவர் கூறினார்....

 ஒன்று,ஒருவரிடத்தில் நீ முடித்து தருவதாக எதேனும் ஒரு வாக்குறுதியை வழங்குவாயனால்,குறித்த நேரத்திற்குள் உன் தலையை அடமானம் வைத்தாவது அதை எப்பேற்பட்ட சூழலிலும் முடித்துகொடு.

மற்றொன்று,அத்தகைய வாக்குறுதியை முடிந்த மட்டிலும் யாருக்கும் கொடுக்காதே என்றார்.


வாழ்வில் வென்ற,ஒவ்வொருவரின் வாழ்கை பக்கங்களின் பின்னும்., நம்பிக்கையை காப்பாற்றும் கடமை வெளுத்து போகாமல் ஜொலித்து கொண்டே இருக்கும்.

முதியவரும் செல்வந்தரும்:

கடும்குளிர் பிரதேசம் ஒன்றில், போர்வையின்றி பிச்சை எடுத்து கொண்டிருக்கும் ஒரு முதியவரை தினசரி அவ்வழியே செல்லும் செல்வந்தர் சந்தித்தார்.

பிச்சை எடுத்து கொண்டிருந்த அவரிடம் நடுங்கும் குளிரில் போர்வைன்றி எவ்வாறு உங்களால் தாக்கு பிடிக்க முடிகிறது என்று கேட்க, நான் நீண்ட காலமாக இதே இடத்தில் இப்படித்தான் இருக்கிறேன்,குளிர் எனக்கு பெரிய விஷயமல்ல என்று சொன்னார் முதியவர்.





இதை கேட்டு இரக்கப்பட்ட அந்த பணக்காரரோ ,என் வீடு இதோ அருகில் தான் இருக்கிறது நான் சென்று கம்பளி கொண்டு வருகிறேன் என்றார். முதியவருக்கோ மனம் நிறைந்த மகிழ்ச்சி.

வீட்டுக்கு சென்ற செல்வந்தரோ,அன்றைய அலுவல் நடுவே முதியவரை பற்றி மறந்து போனார்,மறுநாள் காலை மீண்டும் அவ்வழியே சென்ற போது குளிரில் நடுங்கி இறந்து போன அந்த முதியவரை நான்கு பேர் தூக்கிசென்றனர்.

அப்போது தான் புரிந்தது செல்வந்தருக்கு,தான் கம்பளி தருவதாக அவருக்கு வழங்கிய நம்பிக்கை,நீண்ட காலமாக குளிரை பெரிது படுத்தாத முதியவரின் உடலை, கம்பளி்க்கு ஏங்க வைத்து குளிரால் நடுங்க செய்தது என்று.


நாம் மற்றவரிடம் கொடுக்கும் நம்பிக்கையின், சொல் வடிவமே வாக்கு.செய்ய வாய்ப்பில்லாதபோது அதை சொல்லாமல் இருப்பதே நல்லது.
« Last Edit: August 09, 2023, 03:50:15 PM by Nivrutha »

Offline Madhurangi

Re: வாக்கு
« Reply #1 on: August 09, 2023, 09:06:22 PM »
Nice one Darlii💓

Offline Nivrutha

Re: வாக்கு
« Reply #2 on: August 10, 2023, 08:23:12 AM »

😍😍Darliii thank u

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 218
  • Total likes: 520
  • Total likes: 520
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: வாக்கு
« Reply #3 on: September 08, 2023, 05:16:12 AM »
வாழ்த்துக்கள் கம்பி 🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻