Author Topic: கிராமத்து பெண்ணின் கனவு  (Read 637 times)

Offline mandakasayam

     லட்சுமிக்கு திருமணமாகி ஒரு வாரம் ஆகியிருந்தது.

ஆனால், அவள் முகத்தில் கல்யாணமான பெண்ணுக்கு உரிய லட்சணம் தெரியவில்லை, எதையோ பரி கொடுத்தவளைப் போல் காணப்பட்டாள். ஆம் அவள் இழந்தது தன் எதிர்கால வாழ்க்கையை, தன் கனவை. அந்த சோகத்தை தாங்கமுடியாமல் அவள் கட்டிலில் உள்ள தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.   


    ஒரு வாரத்திற்கு முன்: 





    அந்த வகுப்பு மாணவர்களின் கூச்சலில் மூழ்கியிருக்க, வகுப்பு ஆசிரியை தனக்கே உரிய பாணியில் அந்த வகுப்பிற்கு நுழைய, மாணவர்களின் கூச்சல் ஓய்கிறது. தன் கண்ணாடியை சரிசெய்துகொண்டு கரும்பலகையை பார்க்கிறார், கொட்டை எழுத்தில் 10 A என்று எழுதப்பட்டிருக்க, தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஆசிரியை, ஒவ்வொரு மாணவர்களின் பெயரையும், அவர்களின் லட்சியத்தையும் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார். ஒரு சிலர் மாணவர்கள் விவசாயம் செய்யவேண்டும் என்றும், இன்னும் சிலர் பக்கத்தில் உள்ள சக்கரை ஆலைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். பெரும்பாலான மாணவிகளுக்கு எதிர்காலம் என்பது உள்ளதே அன்று தான் தெரிந்துகொள்கிறார்கள். அவர்களின் ஏகோபித்த பதிலாக, பத்தாவது, பண்ணிரண்டாவது முடிந்தவுடன் கல்யாணம் செய்துகொண்டு, கணவன் வீட்டிற்கு தொண்டு செய்வதே தங்களின் தலையாய கடமை என்று நினைத்திருந்தார்கள் போலும். அது அவர்களின் குற்றமல்ல, இந்த சமூகத்தில் பெண்களுக்கு உள்ள நிலைமை என்று ஆசிரியை நினைத்துக்கொண்டார்.

வெகு சில மாணவிகள், சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியையாக விரும்புவதாக கூறினார்கள், அந்த கூட்டத்தில் லட்சுமி மட்டும், நான் டாக்டராக விரும்புவதாக கூறினாள், இதைக்கேட்ட ஆசிரியைக்கு சற்று இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும், அதை நிரூபிக்கும் பொருட்டு அவர் எதற்கு என்று அவர் லட்சுமியிடம் கேட்க,

இந்த ஊரில் உள்ளவர்களுக்கு யாருக்காவது, உடம்பு முடியாமல் போனால் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு இங்கிருந்து 25 கிலோ மீட்டர் போக வேண்டும். அப்படி செல்வதற்குள்ளேயே சிலர் இறந்துவிடுவதும் உண்டு, நான் டாக்டரானால், இந்த ஊரிலேயே ஒரு ஆஸ்பத்திரி கட்டி இங்குள்ள மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்வேன் என்று அவள் சொல்வதைக்கேட்டு,
அங்குள்ள மாணவர்கள், கைதட்டலில் அவளை நனைக்க, தன் கனவு நிறைவேறி விட்டதை போல் அவள் உணர்கிறாள்.



  தெரியாது மாமா பவ்யமான குரலில் லட்சுமி.

”அப்போ, எதுக்கு என்னை பாத்ததும் வீட்டுக்கு வேகமா ஓடின” மீண்டும் சுந்தரம்.

”தேவையில்லாம பிரச்சனை ஆயிடும்னு பயந்துதான், வேகமா வீட்டுக்கு வந்தேன்”.

”அக்கா இவ எதையோ மறைக்க நெனைக்கிறா”, என்றான் சுந்தரம்.

”லட்சுமியின் அம்மா, அய்யோ குடும்ப மானத்தயே கப்பல் ஏத்திட்டையேடி”?

லட்சுமி, ஐயோ நான் ஒன்னும் பண்ணலமா உடனே சுந்தரம், “ நான் பாத்தனால சரி , வேற யாராவது பாத்திருந்தா என்ன ஆயிருக்கும், அக்கா இது சரி பட்டு வராது, ஒடனே கல்யாணம் பண்ணி வச்சிற வேண்டியதுதான்”

லட்சுமி, ”வேண்டாம்மா நான் படிக்கணும்மா, எனக்கு டாக்டர் ஆகணும்”.

”அடி கழுதெ, நீ படிச்சு பட்டம் வாங்கினதெல்லாம் போதும், டேய் நீ மாப்பிள்ளைய பாருடா ”என்று அவள் தாய் சொல்ல

”பக்கத்து ஊருல பனியன் கம்பெனியில வேலை செய்யற, ஒரு பயன் இருக்கான், ஒரே பயந்தான் கை நெறய சம்பளம், அவனை பேசி முடிச்சிடவா”

ஒடனே அவங்கள பாத்து, பேசு என்று அவள் தாய் சொல்ல,

லட்சுமி, ஐய்யோ இப்ப கல்யாணம் வேண்டாம்மா, நான் படிக்கணும்மா, என்று அவள் கதற, அதோடு FLASHBACK முடிகிறது.

தன் தாலி கையிற்றை அவள் பார்க்கிறாள், அது அவளுக்கு போட்ட விலங்காகவே அவள் கண்ணில் தெரிய, ஆண்கள் எல்லோரும் அவளுக்கு எமன்களாக மாறிவிட்டதைப்போல் உணர்ந்து, பிளேடை எடுத்து தன் நாடியில் அறுத்து தன் உயிரை மாய்த்துகொல்கிறாள்.

தன் கணவன் இந்த நிலைமையில் பார்த்து, அவளை ஆஸ்பித்திரிக்கு கொண்டு சென்றாலும் நான் பிழைக்க மாட்டேன் என்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது,ஏனென்றால் பக்கத்தில்தான் ஆஸ்பத்திரியே இல்லையே.   


கதையாசிரியர். M. முகேஷ். கதைதொகுப்பு : குடும்பம்


Offline Yazhini

Re: கிராமத்து பெண்ணின் கனவு
« Reply #1 on: February 27, 2025, 08:00:10 AM »
அருமையான பதிவு... இன்றளவும் நடைபெறும் உண்மை...