« on: April 15, 2025, 12:05:31 PM »
வீட்டில் உப்பு சீடையை செய்யும் எண்ணெயில் போட்டவுடன் சில சமயம் வெடிக்கத் தொடங்கும். ஆனா இந்த மாதிரி சில டிப்ஸ் ட்ரை பண்ணி சீடை செஞ்சா சீடை வெடிக்காமல் வரும். மொறு மொறு உப்பு சீடை செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 6 பங்கு
உளுந்து மாவு - 1 பங்கு (வறுத்து பொடித்தது; (6 : 1)
எள்ளு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
வெண்ணெய் - 50 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசி மாவை வெறும் வாணலியில் 5 நிமிடம் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தில் அதை போட்டு, அதனுடன் உளுந்து மாவு, உப்பு, எள்ளு, வெண்ணை, பெருங்காயம், சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும். முக்கியமாக தளர பிசைய வேண்டாம்.
சீடை வெடிக்கமால் இருக்க ஒரு துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும். இதனால் உருண்டைகள் உலர்ந்துவிடும். அதன் பிறகு அடுப்பில் ஒரு பெரிய கடாயை வைத்து நிறைய எண்ணெய்யை காய வைத்து கொள்ளவும். எண்ணெய் கொள்ளும் அளவிற்கு சீடையை போட்டு மிடியம் தீயில் பொரித்து எடுக்கவும். சீடை வெந்தவுடன் மிதந்து மேலே வரும்.
சீடை வெடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்:
• வெடிக்காமல் சீடை செய்ய நீங்கள் அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது அவசியம். அரிசி மாவில் கண்ணுக்கே தெரியாத சிறிய கல் இருந்தாலும், சீடை வெடித்து எண்ணெய் மேலே தெரிக்க ஆரம்பிக்கும்.
• அரிசி மாவு உளுந்து மாவு, இரண்டு மாவையும் சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
•உளுந்து ஒரே சீராக வறுத்து, பின் மாவாக அரைத்துக் கொள்வது அவசியம்.
• எண்ணெய் அதிக சூடாக இல்லாமல் இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் அனைத்து சீடைகளும் வெடிக்கும், மேலும் உள்ளே வேகாமல் வெளியே மட்டும் வெந்தது போல நிறம் மாறி இருக்கும்.
• சீடையை உருட்டும்போதே, கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து லேசாக உருட்டவும். இப்படி செய்வதால் சீடையில் விரிசல் விடாது. மேலும் பொரிக்கும்போது வெடிக்கவும் வெடிக்காது.
• இவை எல்லாம் செய்தும் சீடை வெடிக்கத் துவங்கினால், அந்த கடாயின் மேலே லேசாக ஒரு தட்டை மூடியவாறு, பிடித்துக் கொள்ளுங்கள். இதனால் சீடை வெடித்து உங்கள் மேலே சிதறி விழாது.
« Last Edit: April 15, 2025, 12:08:09 PM by MysteRy »

Logged