இன்றைய ராசிபலன்
மேஷம்
மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உற வினர்கள் ஒத்துழைப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப் படும்படி பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.
கடகம்
கடகம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் விமர்
சனங்களை தவிர்ப்பது நல்லது. வியா பாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
சிம்மம்
சிம்மம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கன்னி
கன்னி: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். பொதுஅறிவை வளர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதித்துக் காட்டும் நாள்.
துலாம்
துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள வர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக் கடிகள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
தனுசு
தனுசு: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மகரம்
மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. நண்பர்கள், உற வினர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கும்பம்
கும்பம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.
மீனம்
மீனம்: நட்பு வட்டம் விரியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன்கருத்து மோதல்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர் கள். உழைப்பால் உயரும் நாள்.