Author Topic: இன்றைய ராசிபலன் 06.01.2019  (Read 3292 times)

Offline Evil

இன்றைய ராசிபலன் 06.01.2019
« on: January 06, 2019, 04:43:54 PM »
இன்றைய ராசிபலன்


மேஷம்

மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும் புத்துணர்ச்சி பெருகும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


மிதுனம்

மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள் வார்கள். நன்மை கிட்டும் நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.


சிம்மம்

சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


கன்னி

கன்னி: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். தாயாருடன் வழி உறவினர்களுடன் கருத்து மோதல் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


துலாம்

துலாம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள்
பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித்தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும்.  உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப்போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள். 


மீனம்

மீனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும்

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால