தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 376
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
[
Asthika:
காதல்மலர்ந்த ஒரு காலம், கண்களில் கனாக்கள்,
மரணிக்கும் வரை நினைவில் பதிந்த நிழல்கள்.
சிரிப்பின் சுழலில் துளிக்கும் மழை,
சின்ன சிரிப்பில் வாழ்ந்த என் நாட்கள்.
வாசனை போலவே விடாமல் வந்ததே!
வாசலில் நின்ற அவன் சிலிர்ப்பு புன்னகை
சில வார்த்தைகள் மட்டும் பேசினான் அவன்
ஆனாலும் வாழ்க்கையே பேசிவிட்டான் அவன்.
காலங்கள் கடந்தாலும் காய்ந்திடுமோ என் மனம்
காதலின் நிழல்களில் சுடுகாடும்........ ஒரு... வனம்.
அவன் நினைவு ஒரு மெளன மேகம்
என் காய்ந்த நெஞ்சை தூறல்களால்
நினைத்திடுதே.. தினம்..
. தொலைவில் ஓர் நட்சத்திரமாய்,
தூக்கத்தில் ஒரு கனவாய்,
தொட்டுப் பார்க்க முடியாத
தூய காதல் ஓர் கனிசாய்.
தொலைபேசி ஒலிக்கையில்,
உன் குரல் ஒரு மெழுகாய்,
உன்னைக் காண மறுத்தாலும்,
உன் சிரிப்பு என் வாழ்வாய்.
கண்ணீர் கூட மகிழ்ச்சி தரும்,
உன் நினைவால் புன்னகை வரும்,
இந்நேரமும், இந்நிமிஷமும்,
இருவர் மனம் ஒன்றாய் வரும்.
தொலைதூரம் தவிர்த்தாலும்,
தொடர்கிறேன் உன் பாதையை,
நாளையொன்றில் நிச்சயம்,
நாம் சேரும் அதிசயம்!
மழையில் நடந்து சென்ற நிமிடங்களோடு,
மறக்க முடியாதவன் உருவம் வரிகிறது.
அவன் சொல்லாத சில வார்த்தைகள்,
இன்று என் நெஞ்சத்தில் முழங்குகின்றன.
அவன் கைகளின் தைரியம், பார்வையின் பாசம்,
என் வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும் வாசம்.
அவன் நம்பிக்கையின் நிழலில் நான் நிலைத்தேன்,
அவன் பேசிய நிமிடத்தில் என் உலகம் மலர்ந்தேன்.
வந்தும் போன பயணமாயிருந்த போதும்,
வாழ்வின் முழு அர்த்தமும் தந்தவன் போல.
சில நினைவுகள் தீண்டுவதுதான் அவன் பரிசு,
நாளும் என் கனவுக்குள் வந்துவிடும் அந்த நிசி.
காதலனின் நினைவு சுவாசமாகி,
என் உயிரோடு ஒட்டிக் கொண்டான் இனிமையாக.
இப்படிக்கு
அவன் வருகையை எதிர்பார்த்து கொண்டிருப்பவள்❣️❣️
Thenmozhi:
தொலைதூர காதல்
உன் அருகில் நான் இருக்கும் வரை உன்னை நான் எத்தனை முறை நினைத்தேன் என்று தெரியவில்லை-நீ என் அருகில் இருந்தமையால்!
இப்போது நிதம் நிதம் உன்னை நினைக்கிறேன்-நீ அருகில் இல்லாததனால்!
நீ தூரத்தில் இருந்தாலும் உன்னை ஒரு துளி கூட மறந்ததில்லை என் இதயம்!
உறங்கினால் சொற்பனத்தில் வருகிறாய்,உறங்காவிட்டால் நினைவில் வதைக்கிறாய்!
காத்திருக்கிறேன் உன்னை விரைவில் அருகில் காண!
நீயில்லா ஒவ்வொரு பொழுதும் நம் நினைவுகளை தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என் அருகில்!
உன் குரல் பேச்சின் சாரல் என் மனதில் குற்றாலமாக, உள்ளத்தில் குளிர்கிறது!
நீ என்னோடு தான் இருக்கின்றாய் நானாக!
தூரம் பெரிதாக தெரியவில்லை அவன் அன்பின் முன்பு!
எத்தனை உறவுகள் என்னை சூழ இருந்தாலும்!
என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ தான் என் அன்பே!
தொலை தூரக் காதலுக்கு தொலைபேசியாய் இருக்கிறது நிலவு!
நானும் நீயும் நிலவினை இரசித்தே உரையாடுகிறோம்!
அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன்!
தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்!
நினைக்கும் போது மட்டும் வருவேனென்று சொல்லிவிட்டு!
நினைவு முழுக்க நீயாகிப் போனாய்!
தொலைதூரத்தில் நாம் இருந்தாலும்,
எம் காதல் நினைவுகள் நம் இதயங்களில் மிக அருகில் இருக்கிறது அன்பே!
Lakshya:
நிழல் நீயா???
நீ என்னை விட்டு சென்ற நாள் முதல் என் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் இருக்கிறது...
நீ என்னோடு இருந்த நாட்கள் வண்ணமாக இருந்த நிலையில், இன்று கருப்பு நிறத்தில் சூழ்ந்திருக்கிறது...
நாம் பேசி சிரித்த நாட்களை மறக்கமுடியாமல் தவிக்கும் போது, உன் சிரிப்பு சத்தம் என் காதில் கேட்க வலியை உணர்ந்தேன் மீண்டும் மீண்டும்!!!
புன்னகையோடு நான் வாழ்ந்தது உனக்கு பிடிக்கவில்லையா? ஏன் விட்டு சென்றாய் அன்பே???
உன் கை பிடித்து நடந்து சென்ற காட்சியை கனவில் கண்டேன், கண் விழித்து பார்த்தேன் அவை கனவாகவே பறந்து சென்றது...
கனவுகள் பலிக்க போவதில்லை...நினைவுகள் மட்டுமே உண்மை...
கைவிடப்பட்ட ஆசைகளோடு பயணிக்க முயற்சித்தேன் முடியவில்லையே...
எப்போதும் உன் அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இதயத்திற்கு வெறும் ஏமாற்றத்தை தந்து சென்றுவிட்டையே இது நியாயமா???
இனி உனக்கென எழுத கவிதை ஒன்றும் இல்லை என் அன்பு காதலனே...கண்ணீருடன் இந்த கவிதையை முடிக்கிறேன்...
Yazhini:
காணா தூரம் நீ சென்றும்
கனவுலகில் சுழல்கிறது என்னுலகம்.
கைக்கோர்த்து நாம் சென்ற
ஒவ்வொரு இடமும் உன்னை நினைவுப்படுத்த
தொட்டசினுங்கியைப் போல் மனம் ஒடுங்கிவிடுகிறது.
பலவிதத்தில் என்னை மீட்க முயன்றும்
என் மொத்த சிந்தனையும் ஏனோ
முழுக்க நீயாய் நிரம்பியிருக்கின்றாய்.
யாசகனுக்கு கிடைத்த பொக்கிஷம் போல்
அன்பிற்கு ஏங்கிய எனக்கு - அன்பைத்
தெவிட்ட தெவிட்ட அள்ளிக் கொடுத்து
இறுதியில் காணாமல் சென்றது ஏனோ???
மரணத்திற்கு தான் ஏன் இவ்வளவு
கொடிய எண்ணம்? என்னையும்
உன்னுடன் அழைத்து சென்றிருக்கலாமே...
நீயின்றியிருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
உயிரற்ற உடலாய் திரிகின்றேன்.
நம் அன்பில் உருவான
உயிர்கள் இல்லாமல் இருந்திருந்தால்
மரணமும் நம்மை பிரித்திருக்காது.
கண்கள் காணும் இடமெங்கும் நீயே.
வாய் வார்த்தைகளிலும் நீயே.
உள்ளம் முழுக்க நீயே.
உன்னுடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்
மீளா சுழற்சியில் சிக்கிக் கொண்டேன்.
கடற்கரையில் முதன்முதலில்
தோள்களைப் பற்ற அனுமதிக் கேட்டதும்
கைகள் கோர்த்து பல
இடங்கள் சுற்றி திரிந்ததும்
இனிமையாக வாழ்க்கையைப் பயணித்ததும்
குழந்தைகளோடு மீண்டும் மழலையானதும்
இறுதிமூச்சும் கைகள் பற்றியே பிரிந்ததும்
மீண்டும் மீண்டும் நிலைகுலைய செய்கின்றதே.
நிழல்கள் நிஜமாகின்றன
நிஜங்கள் நிழல்களாகின்றன
புதிரான வாழ்க்கை ஓட்டத்தில்.
நீ சென்ற உலகில் நானில்லை
நான் இருக்கும் உலகில் நீயில்லை.
ஆனால் நினைவுகள் மட்டும்
நம் இருவரின் உலகினையும்
ஒன்றாக கட்டிப்போட்டு நகர்த்துகிறது.
நாம் கண்ட கனவு
காணல் நீராகி விட
காதல் வாழ்க்கை நினைவுகளாகிவிட
உன் சுவடுகள் அனைத்தும்
அழகிய மனசுமைகளாகி விட
உன்னுடன் மீண்டும் சேரும்வரையில்
ஜீவனற்று ஜீவிக்கின்றேன்.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version