தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 374

<< < (2/2)

Vethanisha:

சரித்திரம்
சொல்ல மறந்த கதை
வாள் ஏந்தி நின்று
தலைவனுக்காய்
தன்னுயிர் மாய்த்த
போராளியின் கதை!

கைகளிலே கூர் ஈட்டி
கண்களிலே கோபத் தீ
வலி மறந்த மேனி
தன் தலைவன் பின்னே
மன்னனின் கவசமாய்
உயிர் துறக்க சித்தமாய்
விசுவாசமாய் போராளி !

இருதிவரை போராடி
குருதியில் நனைந்து
மண்ணில் சாய்ந்து
அவன் செய்த அர்பணிப்பே
தலைவனின் வெற்றி!

பரியேறி முன்னிற்கும் மன்னனே
பின்னிற்கும் ஒவ்வொரு உயிரும்
உன்னதமானது!
 சுயநலமற்றது !

பசி மறந்து ,
மனைவி மக்கள் துறந்து
மனிதம் அறுத்து 
அவன் உயிரை மாய்த்து
அடைத்த வெற்றிகள் எதற்காக!
 
பொன்னிற்கா!
மண்ணிற்கா!
பதவிக்காக!
ஆதிக்கத்திற்கா!

ஆசையின் விளைவாய்
ஆரம்பித்தப்
போர்
தனிமனித ஆசையின்
பிரதிபலிப்பே போர் !!

உன் ஆசையில்
மாய்ததென்னவோ
அப்பாவி உயிர்களே
கொன்று குவிப்பவன் வீரனா !
வாழ வைப்பவன் வீரனா !

கௌரவர்கள் தொடங்கி
 இன்று வரை தொடரும்
 இந்த அவலத்திற்கு
 முற்றுப்புள்ளி
 என்று அமையுமோ !!





 

சாக்ரடீஸ்:

கர்ணனின் காலம்

நதியில் மிதந்து வந்தவன்,
சூரியனின் அருளால் பிறந்தவன்,
குந்தியின் புதல்வன்,
தேரோட்டி வீட்டில் வளர்ந்தவன்,
துரியோதனன் தோள் பற்றியவன்,
நட்பின் உயிராய் வாழ்ந்தவன்,
சாபங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலும்
வீரம் தளராமல் நின்றவன்.

அந்தக் கர்ணனை,
கிருஷ்ணனின் சூழ்ச்சியால்,
போர்க்களத்தில் அவன்
மார்பில் அம்புகள் பாய,
அர்ஜுனன் கையால் வீழ்ந்தவன்.
ஆனாலும், அவன் புகழ்
என்றும் அழிந்ததில்லை.


இன்று, 

அவன் சாயலில், 
சமூகநீதி பேசிக்கொண்டும், 
சுயமரியாதை காத்துக்கொண்டும், 
வாழ்வு உரிமையை, 
கொண்டாடிக்கொண்டும், 
பல்லாயிரம் கர்ணன்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இன்றைய அரசியல் சூழலில், 
எத்தனை கிருஷ்ணர்கள், 
சூழ்ச்சி செய்தாலும், 
அவர்கள் வீழ்வதில்லை. 

ஏனென்றால், 
அவர்கள் தீட்டுவது வாள் மட்டும் அல்ல, 
அவர்கள் புத்தியையும் தான். 

நமது தேவைகளை நாமே தேடவேண்டும், 
நமது அரசியலை நாமே பேசவேண்டும், 
நமது கடமைகளை நாமே காக்க வேண்டும், 
நமது உரிமைகளை நாமே பெற வேண்டும். 

கர்ணனே, 

இன்றைய காலம் நம்முடையது. 
ரௌத்ரம் பழகு, கற்றுக்கொள். 
கருத்து போரில் உண்டாகும் வெற்றி, 
அறிவின் மலர் பொங்கும் நேரம், 
சிந்தனைத் தீபம் ஒளிரும் போது, 
உலகம் புதியதாய் தோன்றும். 
வாளையும் புத்தியையும் நம்பு, 
அதை மூலதனமாக்கு, 
நமது சமூகத்தை முன்னேற போராடு. 

ஏனெனில், 
இன்றைய கர்ணனை, 
எந்த கிருஷ்ணர்களின்
சூழ்ச்சியும் வீழ்த்தாது. 

Evil:

போர் என்று வந்து விட்டாலே
குழந்தைக்கும் வீரம் பிறக்குமே
இவனின் பெயர் கேட்டாலே..
 
எதிரி படைகள் ஆயிரம் வந்தாலும்
தகர்த்திடும் மாபெரும் வீரன் இவன்

பக்தியிலும் தலை  சிறந்தவன் இவன்
போர் யுக்தியை கற்றவன் இவன்

உலகையே வளம் வந்த முன்னோடி இவனே
எதிரி படைகளை கொலைநடுங்க வைத்த
மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் இவன்

உலகமெங்கும் கொடிகட்டி புகழ்
பறக்கவிட்ட மன்னர்களில், மாமன்னன் இவன்

போர்க்களம் என்று வந்தாலே பேய் பிடித்தது போல
பேயாகவே மாறி எதிரிகளை வென்றிடுவான்

தோல்வி என்றே வார்த்தை கேட்டிடாத மன்னன் இவன்
இவனின் ஆட்சி காலம் மக்களின் பொற்காலம் என்பர்.

மக்கள் சிறு கண்ணீர் கூட சிந்தியது  இல்லை.. இவரின் ஆட்சியிலே.
அரசியலில் நுட்பம் அறிந்த மாபெரும் வல்லுநர் இவரே.
.
மக்களின் நலனையும்.. நாட்டின் பாதுகாப்பையும்
அறிந்தே போர் புரியும் வேங்கை இவன்

போர் என்று வந்தால் இவனின் பசிக்கு
எதிரிகளின் தலைகள் ஆயிரம் ஆயிரமாய்
வீழ்ந்து கிடக்கும்  நம் மண்ணில்

ஆறுகள் எங்கும் ரத்த வெள்ளம் பெருகிட
மிதக்கும் எதிரிகளின் வெட்டுண்ட சடலங்கள் பல

இவன் பொற்காலத்தில்,  கட்டிட கலையிலும் சிறந்தவன் இவன்
இவனின் கால் தடம் பதியாத உலகத்தில் ஒரு பகுதியும் இல்லை
இவனின் வணிக யுக்தியை வென்றிட யாரும் இல்லை..

இவனின் புகழ்.. இன்றும் கொடி கட்டி பறந்தது கொண்டுதான்  இருக்கிறது
இவன் கட்டிய கோவில்கள்  இன்றும்  ஜொலிக்கிறது
இவன் கட்டிட கலையின் ரசனைக்கு
தஞ்சை பெரிய கோவில் ஒன்றே போதும் சாட்சியாய் 

இவனின்  வரலாற்றை எட்டு திக்கும் எடுத்து சொல்லும்
இவன் தான்  மன்னர்களுக்கு எல்லாம்
மாமன்னன்
எமது
ராஜா ராஜா சோழன்

Baaski:
காதல் வீரம் இருக்கண்களாய்
கொண்டான் சங்கத் தமிழன்
அகத்தில் காதலையும்
புறத்தில் வீரத்தையும்
கலந்திற வாழ்ந்தான் வீரத் தமிழன்
வீரத்தை தன் அடையாளமாக
வாழ்ந்து போரில் புறமுதுகு காட்டாமல்
இறப்பது தன்மானம் எண்ணினான்
குருதியுனுள் வீரம் கலந்து இருந்தது
தாய் பாலுடன் வீரத்தையும்
ஊட்டினாள் வீரத்தமிழச்சி
போர்க்களத்தில் முன் வைத்த காலை
பின் வைத்தலறிய
தன் நோக்கி வரும் அம்பை துச்சமாக கருத்தினான் வீரத்தமிழன்
போரினால் பெற்ற வீர வடுக்களை
பொன்னினும் மணியிலும் மேலாக
புகழின் சின்னமாய்
எண்ணினான் வீரத்தமிழன்
தரணியெங்கும் தன் கொடியை நாட்டினான் வீர மன்னன்
கடல் கடந்தும் தன் வெற்றி
எல்லையற்றாத கொண்டான் வீரத்தமிழன்




TiNu:
கண்களில் கோபம் கொப்பளித்து தெறிக்க..
வீறு கொண்டு எழும், பரியின் மீது அமர்ந்து...
சீறி பாய்ந்து பகைவனை அளித்திடும்.. இவன் யாரோ..

என் புற கண்களுக்கு தெரியும்.. இவன் முகம்
என் அக கண்களுக்கு மட்டும் ஏனோ யார்..
யாராகவோ.. புலப்பட்டு மறைகிறார்களே.

எதிரிகளின் வியூகத்தை அடித்து உடைத்து...
சுற்றி வளைக்கும்.. வீரர்களை.. தந்திரத்தால் .ஏமாற்றி..
எதிரியின் தலை கொய்யா துடிப்பவன் இவனோ..

செந்நிற உடையணிந்த.. தன்  தலைவியை
அவளின் பிறந்த அரண்மனையில் இருந்து..
கடத்தி செல்லும் நளமகாராஜா.. இவனோ..

தான் தன் திறமைகளை கொட்டி பயிற்சி கொடுத்த
வீரர்களை.. போர்க்களம் காண.. வீர முழக்கத்துடன்
அழைத்து செல்லும் சேனை தலைவன்.. இவனோ..

தன் ராஜ்ஜியம் மீது வீண் படையெடுத்து வரும்
எதிரிகளை அடக்க.., தன் காலர் படை மட்டும்..
போதுமென.. கம்பீர நடைபோடும் தலைவன். இவனோ..

தன் சாம்ராஜ்யத்தை வணிகத்தையும் விரிவாக..
தன் உருவேற்றிய சேனைகளோடு.. தலைநிமிர்ந்து..
செருக்குடனே வீர நடை போடும் ராஜ ராஜன்.. இவனோ..

இவையாவும் நம் கற்பனையே... எல்லாமே.. கற்பனையே...
நிஜம் எதுவென யாரும் அறியார்....என்
மன கண்களுக்கு புலப்படுவது.. எதுவெனில்... 

நம் மனதை ஆட்டிப்படைக்க நினைக்கும்...
கோபம், தற்பெருமை, ஆணவம்,பொறாமை...
அறியாமை,நேர்மையற்ற மனநிலை.. நீக்கி..

மேலும் கட்டுப்பாடற்ற மனச்சோர்வு,
சுயநலம், வன்முறை.. காமம்.. அணைத்து..
தீய எண்ணங்களுக்கு..  கடிவாளம் பூட்டி 

நன்மை தீமை கலந்த இந்த சமூகத்தை..
புரவியின் மீது கம்பீரமாக.. செருக்குடனே... வருபவன் எவனோ..
அவனே,.  இவன்.... புவியாளும்.. நில(புவி)... சூரியன்   

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version