தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 373

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 373

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

சாக்ரடீஸ்:

 நீ வந்ததும்...

நீ வந்ததும்
ஒரு பார்வை
பூத்தது,

நீ வந்ததும்
இரு இதயங்கள்
நிமிர்ந்தன,

நீ வந்ததும்
மூன்று மௌனங்கள்
மொழியாகின,

நீ வந்ததும்
நான்கு கனவுகள்
கலந்தன,

நீ வந்ததும்
ஐந்து நொடிகள்
நம் உலகமாகின,

நீ வந்ததும்
ஆறு உணர்வுகள்
உயிரோட்டம் கண்டன,

நீ வந்ததும்
ஏழு வண்ணங்கள்
வானில் பிறந்தன,

நீ வந்ததும்
எட்டு திசைகளும்
உன்னையே பேசின,

நீ வந்ததும்
ஒன்பது தானியங்களும்
விழியில் அறுவடை ஆகின,

நீ வந்ததும்
பத்து மெய்கள்
உன்னையே நுகர்ந்தன,

நீ வந்ததும்
பதினொன்று முத்தங்கள்
நம் பாசத்தைக் கடத்தின,

நீ வந்ததும்
பன்னிரு மாதங்கள்
நிமிடங்களாய் நின்றன,

நீ வந்ததும்
என் வாழ்நாள் முழுவதும்
நான் நீயாக மாறின.

Lakshya:
மழையில் உறைந்த நிமிடம்!!!

மழைத்துளிகள் நம் மேனியில் விழ...
இரு இதயங்கள் இசை பாடிய தருணம் அது...

உலகை மறந்து நின்றேன் உன் முன்...
ஒரே குடையின் கீழ் நீயும் நானும்...

உன் பார்வையில் நொடி சிலிர்த்தேன்... நீ பேசாமல் இருக்க, என் இதயம் பதைக்க, உன் விழிகளை பார்த்து ரசித்தேன்...

இருளின் இடையில் நீ ஒளியாய் வந்தாய்...
மழைத்துளிகள் நம்மை ஆசிர்வதித்த நிமிடம் உறைந்து விடாதே...

வார்த்தைகள் தேவையா நீ என் முன் நிற்கையில்... காலம் முழுதும் காத்திருப்பேன் உன் கரம் பிடிக்க...

என் கண்கள் உன்னை படம் பிடித்தது நீ என்னை பார்த்து ரசித்தபோது...
உன் தோளில் சாய ஆசைப்பட்டது உள்ளம்...முடியவில்லையே!!!

மின்னல் அடிக்கும் முன், உன் சிரிப்பில் விழுந்துவிட்டேன் ...
இடி இடிக்கும் சத்தம் கேட்டதும்,நீ என் கையை பிடித்தது ஓர் அழகிய ஓவியம் போல என் மனதில் பதிந்தது...

VenMaThI:


இருட்டான நம் வாழ்க்கை இன்று
இடியுடன் கூடிய மழையால் மாறும்
இன்று இணைந்த இக்கைகள் இனி
என்றும் பிரியாத நிலையை அடையும்...

காதல் கொள்ளும் நம்மைக் கண்டு
காற்றும்  கூட சற்று நகர்ந்து செல்லும்
மகிழ்வான இந்த ஜோடியைக்கண்டு.. மழைத்துளியும்
மரக்கிளையில் மறைந்திருந்து மயக்கம் கொள்ளும்...

நம்மைச்சுற்றியுள்ள அனைத்தும்
நம் மேல் காதல் கொள்ளும்
நம்மை நாமே மறந்த இந்த நொடி - நம்
வாழ்க்கையின் விருட்ச விதையாய் மாறும்...

ஒவ்வொரு துளியிலும் நம் முகமே தெரியும் - இதை
மழையும் தன் கைபேசியில் படம் பிடிக்கும்..
உலகின் உன்னத ஜோடி என ஊடகத்திலும் பதிவிடும்
அதைக்கண்டு இந்த ஊரே நம்மை கண் வைக்கும்...

அய்யகோ ..
கண்ணிலிட்ட மை அதை இந்த மழை வந்து அழித்ததே
திருஷ்டி கழிய இன்நொடியில் நான் என்ன செய்வேன்...
ஒரு இடி வந்து நம்மை பயமுறுத்தாதா - அந்த பயத்தால்
நம் கண்திருஷ்டி எல்லாம் கழியாதா??

என்னவனே இனி என்ன நடந்தாலும் சரி
நாம் எங்கு சென்றாலும் சரி
இன்று பிடித்த உன் கைகளை இருக்காப்பற்றிக்கொள்ளவேன்
இனி உமை விட்டு ஒரு நொடியும் பிரியேன்..

அழுத காலங்கள் முடியட்டும் - நம்
அழகிய காலங்கள் தொடங்கட்டும்
காலம் முழுதும் உன்நோடே கழிந்திடுவேன்
அடுத்த நொடி மரணம் கூட சிரிப்புடன் தழுவிடுவேன்...

Yazhini:

பொழுதனினும் பேசிய
நேரங்களில்
இதழ்களில் படர வைத்தாய் புன்னகையை...
மெளனித்து பிரியும் தருணம்
எங்கிருந்து வந்ததோ மழை...
ஒற்றை குடைக்குள் நம்மை அடைக்க
வரவைத்தாயோ உன் கூட்டுக்களவாணி மழையை!!!

பூமி எங்கும் குளிர்ந்து கிடக்க
நம்மிடம் ஏனோ வெப்பம் பரவ...
வார்த்தையை மறந்து இதழ்கள் பேச
மூடிய விழிகளுக்குள் மின்னல் வெட்ட
இதயத் துடிப்பு செவிகளில் கேட்க
இறுகப்பற்றிய கைகள் விலக மறுக்க....

கரிக்கும் உமிழ்நீரின் சுவை கூட
மதி ஏனோ மயக்கம் கொள்ள...
சாலையில் ஓடிய தண்ணீரில்
நாணமும் கரைந்து ஓட...
அடை மழை நின்றும்
நம் அன்புமழை தொடர்கிறது....

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version