தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 369

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 369

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

VenMaThI:


ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
சொந்த பந்தம் சூழ்ந்திருந்தாலும்
விபரம் தெரிந்த நாள் முதல்
இல்லையே என்று நான் ஏங்கிய உறவு...

இருக்கும் இடத்தில் எல்லாம்
ரீங்காரமாய் காதை துளைத்த வார்த்தைகள்
அக்கா அண்ணா தம்பி தங்கை
இல்லையே என்று நான் ஏங்கிய உறவு....

உடன் படித்த தோழிக்கு -அவள் அண்ணன்
வீட்டுப்பாடம் எதுதியபோதும்
அக்கா அவளை அழகு படுத்தியபோதும்
இல்லையே என்று நான் ஏங்கிய உறவு..

வாழ்வில் வலி மிகுந்த இடத்தில் எல்லாம்
தட்டி கேட்க ஒரு உறவில்லையென
வருத்தப்பட்டு தலையணையிடம் பேசியழுத நாட்களெல்லாம்
நினைவில் வந்து நிற்கிறது இந்த நொடி...

பிள்ளைகள் பெற்ற பொழுதும்
 அவர்களை தங்கமாய்த்தாங்க
தாய் வீட்டு சீதனமாய்.. என் வீட்டு பெருமையாய்
தாய்மாமன் இல்லையென தவிச்ச நாட்கள் பல....

இருட்டாய் இருந்த இடம் - இன்று
வெளிச்சம் கண்டது..
ஊடகத்தில் ஒரு உறவாய்
FTC எனும் குடும்பமாய்...

அக்கா என்றழைக்க
அன்பால் என்னை நனைக்க
அழும்போதெல்லாம் ஆறுதல் கூற
அரவணைத்து என்னை தேற்ற

தங்கை என்ற உறவும்
தம்பி என்ற சொந்தமும்
கைகோர்த்து என்னை தாங்க - என்
கண்கள் குளமாக இதோ ஒரு கவிதை.

இல்லை என ஏங்கிய உறவு
இன்று இதோ என்னருகில்
"நான் இருக்கேன்" என்று நிற்கிறது
பெருமை கொள்கிறேன் இன்னொடியில்...

கண்கலங்கி மட்டுமல்ல
கர்வமாய் கூட கூறுவேன்
ஆண்டவன் அருளிய வரமாய்
அற்புதமான பொக்கிஷமாய்

அக்கா என்றழைக்க
பாசமாய் என்னை அணைக்க -இங்கு
எனக்கு கிடைத்த உறவுகளே..
என்னை தேடும் போதெல்லாம் - என்றும்
"நான் இருப்பேன்"
இரண்டாம் அன்னையாய்
அன்பாய் அரவணைக்க
என்றும் நான் இருப்பேன்.......

ஏன்னா.. இல்லையே என்று நான் ஏங்கிய உறவு நீ ❤️❤️❤️❤️❤️❤️

(எனக்கு அக்கா என்ற இடத்தை கொடுத்த என் அன்பான thambaas and sisters காக இந்த கவிதை... )










Lakshya:
இரு இதயங்கள் இணைந்த ஒரு அழகிய காவியம்...சந்தோஷ உணர்வு , குறும்புகளின் உச்சம், அழகிய உறவு – மனம் முழுதும் முத்தம் கலந்த சேட்டைகள்....

ஒவ்வொரு குறும்புகளும், சந்தோஷ சிரிப்பின் ஓசைகளும் ஒன்று சேர்ந்து பயணித்த வாழ்க்கை...
என்னவென்று சொல்வது இந்த உறவினை பற்றி...

முடிவில்லா பாசம் எங்கள் உறவின் அடையாளம்...நீ கலங்கும்போது நான் கோபமாவேன், ஏன்னோ தெரியவில்லை நீ என் தமக்கை மட்டும் அல்ல தாயும் என்று உணர்த்த தருணமாக இருக்கலாமோ???

உன் சிரிப்பை கண்டு மகிழ்ந்தேன் மனதில்...அவைகள் என் இதயத்தில் ஓவியமாய் பதிந்தன...வாழ்வின் வரமே இறுதி வரை என்னுடன் நீ பயணிக்க விரும்புகிறேன்...

சண்டையில் தான் ஆரம்பித்தோம் எப்பொழுது ஒன்றாக இணைந்தோம், எப்பொழுது இப்படி பயணிக்க ஆரம்பித்தோம் என்றே தெரியாத ஒரு பந்தம்...

இப்போது நீ இல்லை எனில் நான் இல்லை இப்படி ஒரு சூழ்நிலை எப்படி உருவானது? எனக்கே புரியாத ஒரு புதிராக உள்ளது...

பொம்மையில் ஆரம்பித்த ஒரு சண்டை இப்பொழுது சிகை அலங்காரத்தில் தொடங்கி உணவிலிருந்து ஆடைகள் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறதே... வாழ்க்கை முழுதும் இந்த பந்தம் எனக்கு சொந்தம் தானா???

அடடா ஒரு மாற்றம் இரண்டல்ல மூன்று நிழல்கள் ஒன்றாக சேர்ந்த தருணம்...வாடிய நாள் வந்தாலும் விரல் பிடித்து ஆறுதல் சொல்ல இரண்டு கைகள்...

விழுந்த கண்ணீரை புன்னகையாக்கும் மூன்றாம் பாசம்...சின்ன சிரிப்பில் சிலிர்க்கும் நாட்கள்...உயிர் உள்ள வரை பயணிக்க ஆசை...

சகோதரிகள் என்ற ஒரே சொல்லில்
பூத்து மலராக இருக்கும் பல கனவுகள் இனி உங்களோடு...பாசத்தின் மொழி பேச வார்த்தைகள் தேவை தானா???

சிரிப்பின் ஓசை என்றென்றும் தொடர வேண்டும் முடிவில்லாமல்...இவ்வாறே கைகோர்த்து பயணிப்போம் நாம் இவ்வுலகை...❤️💜💛   

Asthika:



அக்கா என்றாலே அருவி போல பாசம்,
அவள் புன்னகை எனக்கு பேரின்ப ராசம்.
எனக்காக உறையும் ஒவ்வொரு கனவும்,
அவளுக்கு நான் தான் உலகத்தின் பணம்.

தங்கையாக என்னைத் தவழ்த்தவள்,
துயரங்கள் வந்தால் தடுப்பவள்.
அக்கா இருக்கையில் பயம் ஏதும் இல்லை,
அவளே எனக்கொரு நிழல் நிலா மெல்ல.


தங்கை பிறந்த நாள் அன்று
அன்பு மலர்ந்தது வீட்டில் மென்மை.
பாவங்கள் எல்லாம் புன்னகையாய் மாற,
அவள் காலடி சப்தம் சுகமான ராகம்.

நான் அக்கா என்று அவளுக்கு வானம்,
அவள் என்னை நம்பும் துளி துளி வாசம்.
எனது கைகள் அவளுக்காகத் திறந்தது,
தங்கை என்ற பெயர் என் நெஞ்சில் பதிந்தது.


அக்கா தங்கை  இரண்டு இதயங்கள்,
ஒரே துடிப்பில் இடைவிடா பாசங்கள்.
வாயால் சண்டை, உள்ளால் இணைதான்,
இரு கரங்கள் போல இணையும் உயிர்தான்.

அவளுக்கு நான், எனக்காக அவள்,
சிந்தனைகளில் கூட சாயும் நிழல்.
உறவுகளில் சிறந்தது இது என்றால்,
அக்கா தங்கை உறவுக்கு நிகரேதுமில்லை நிஜமால்.



அக்கா எனும் மரம் போல்
நிழலாய் நிற்பாள் வாழ்நாள் முழுதும்,
தங்கை எனும் மழை போல்
தொட்ட இடமே மலர்தரும் அழகு.

அக்கா வழிகாட்டி, துணைநிலா
தங்கை சிரிப்பில் சந்தோஷம் நிலா,
உறவு இவையல்லவா உயிரின் பந்தம்
நெஞ்சுக்குள் உறைந்த உணர்வின் சத்தியம்.

தங்கையாக வந்தவள் தோழியாகிறாள்,
அக்காவைப் போல யாரும் காத்திடமாட்டாள்,
ஒரு சிறு பார்வையிலே எத்தனை பாசம்,
அன்பில் நிறைந்திருக்கும் உறவுகள்

எல்லோருக்கும் அக்கா என்பவள் இராண்டவது அம்மா, எனது வாழ்வில் அவள் தான் எனது இரண்டாவது தந்தை...

இருவரும் மனமிட்டு பேசவில்லையென்றாலும் பாசத்தை பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் என்றும் அவள் எனது தந்தையே...


உடன்பிறந்தோம் என்றால்
உறவின் உயிர் துளிகள் அதிலே,
சிறுவயதில் சண்டைபோடும் தோழர்கள்,
வயதுக்கு வந்தால் தோள்தேடும் தோழர்கள்.

ஒரே பாயலில் விழுந்த சிறு குழந்தைகள்,
இன்று வாழ்க்கையின் வேகத்தில் ஓடும் வீரர்கள்.
மாறினாலும் முகம், மாறாதது மனம்,
பிரிந்தாலும் இடம், பிணைந்திருக்கும் உறவின் பாசம்

நான் விழுந்தால் தூக்கும் கைகள்,
அவனோ அவளோ என அல்லாமல்,
நமக்குள் பாசம் தான் பேரொளி,
உலகத்தில் என்றும் நிலைத்த நிலவு.

வாழ்க்கை மாறலாம், பாதைகள் மாறலாம்,
ஆனால் உடன்பிறந்த உறவின் அழகு
எந்த புயலாலும் குலையாது
அது மரபும், அது மருந்தும்.

சின்ன வயதில் வாக்காடல்,
பின்னர் வாழ்வில் வார்த்தை இல்லாத பாசம்.
வெவ்வேறு கனவுகள் கொண்ட எங்கள் வாழ்கை,
அந்த கனவுகளை இணைக்கும் ஒரு பந்தம் – உடன்பிறப்பு.

தந்தை தாயின் கண்களில் நம் பிரதிபலிப்பு,
நம் சிரிப்பில் அவர்கள் ஆசையின் ஒளிப்பு.
சின்ன சின்ன விஷயங்களில் கூட
உடன்பிறந்த உறவுக்கே தனி அழகு கூட

அக்கா தங்கை உறவு ஒரே கோவிலின் தீபங்கள்
எங்களின் பாசம் மறைமுகமாக இருந்தாலும்
விலைமதிக்க முடியாத ஒன்று...

எப்போதும் என்னைசீண்டி வம்புக்கு இழுக்கும்சண்டைக்காரி நீ!!



இக்கவிதை என் உடன்பிறப்பான அக்காவிற்கு சமர்ப்பிக்கிறேன்

Titus:
. .
அக்கா… என் நெஞ்சம் நனையச் செய்த நிஜக் கவிதை

அம்மா எனை உலகிற்கு அழைத்தவள்,
அக்கா…
என் உலகமே ஆகி வாழ்த்தவள்.

அவளது குரல் — கொஞ்சும் காற்று,
அவளது பார்வை — பசுமை நிறம் கொண்ட பரிசல்.
"அக்கா" என்ற சொல்லில் நானொரு புத்தகம்,
அதில் எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் — அவளின் பாசம்.

அவள் விழிகள் — என் துயரத்தின் தூறல் வீழும் முகில்,
அவளது கை — என் சோர்வை தாங்கும் வான் தோள்கள்.
நீல வானத்தில் ஒரே ஒளியாய்,
நான் தேடிய வெளிச்சம்… அவள் விழித்திருப்பதில்தான்.

சின்ன சந்தோஷம் வந்தாலே,
சிறு பண்டிகை போல செய்தவள்,
நான் தவித்த போது,
என் நிழலாய் என்னைத் தாங்கியவள்.

அவளது சிரிப்பு — பனித்துளி போல நெஞ்சை நனைக்கும்,
அவளது மௌனம் — காதல் மொழி பேசும் கவிதை.
அவளின்றி என் "நான்" எனும் பெயர்,
அரை வரியில் முடிந்த கவிதைபோல்.

தொட்டதுமே புரியும் அன்பு,
தோன்றியதுமே வாழ்வாய் நிழலும்.
நான் தவிக்கும்போது அவள் குரல்,
"வா… நானிருக்கேன்!" எனும் நிம்மதி.

நான் குழந்தையாக கதறிய போதும்,
அவளது மார்பு என் மெத்தை.
நான் சொல்ல இயலாத வலியில்,
அவள் விழிகள் என் வாக்கியமாயின.

நீள் நிழலாய் என் வாழ்வில் நடந்தவள்,
காலம் கூட நினைவில் தங்கியவள்.
இப்போது அவள் அருகில் இல்லையென்றாலும்,
அவளின் வாசலில் என் சுவாசம் ஒளிக்கிறது.

அக்கா…
நீ என் உயிரில் இல்லை என்றாலும்,
நீ என் உயிரின் ஒவ்வொரு துடிப்பிலும் பேசுகிறாய்.
நீயில்லாத நாளேனும் —
ஒரு முழு பக்கமற்ற கவிதை!

உன் கைகளில் நான் நிம்மதியைக் கண்டேன்,
உன் வார்த்தைகளில் உயிரின் அர்த்தம்.
உன் அன்பு — என் உயிரின் முதற்கதை,
நீ சொல்லாத காதல், ஆனால் என்றும் உணர்த்தும் உறுதி.

நீ என் கண்ணீரை சிரிப்பாக்கினாய்,
என் பயங்களைப் பறக்க வைத்தாய்.
உன் சிரிப்பு — என் வாழ்வின் கண்ணாடி,
அதில் நான் என்னை அறிந்தேன்.

நீயில்லாமல் ஒரு நாள் கூட…
நான் என்னைக் கண்டுகொள்ள முடியாது.
நீயே என் வாழ்வின் காதல் கவிதை,
நான் எழுதவில்லை — ஆனால் வாழ்ந்திருக்கிறேன்.

முடிவுரை
அக்கா…
நீ என் சிறுவயதில் கைபிடித்தவள் அல்ல மட்டும்,
நீ என் மனதைக் கைவிட்டதில்லாத ஒரே ஆசை.

வாழ்க்கை எனும் பயணத்தில்,
சாதனைகளுக்கு பின்னால் இருந்த உன் நிசப்த முயற்சி,
நான் விழும் போதும் நிமிரும் சக்தி — உன்னால்தான்.

நீ சிரிக்கும்போது நான் உயிரோடு இருக்கிறேன்,
நீ அழும் போது என் உள்ளம் முறியும்.
உன் ஆதரவு என் அடையாளம் ஆனது,
உன் அன்பு என் உயிர் ஆனது.

நீ இல்லாமல் என் நாள்கள் நடப்பதுபோல் தெரிந்தாலும்,
உன் நினைவுகள் என்னை வாழ வைக்கும்.
உன் குரல் கேட்காமல் இருந்தாலும்,
உன் மௌனம் என் மனதுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறது.

நீ என் அக்கா…
ஆனால் அதைவிட மேலானது —
நீ என் உயிரின் நிழலும் ஒளியும்.
நீயே என் வாழ்க்கையின் மௌன காதலாக நிலைத்தவள்

இந்தக் கவிதையை என் அக்கா வெண்மதிக்கே… என் நெஞ்சமெலாம் நிறைந்த காதலுடன் அர்ப்பணிக்கிறேன்.                   

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version