தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 368
Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 368
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
Asthika:
இரு மனங்கள் சேர
ஒரு மணம் திருமணம்
திரு என்பவள் திருமதி ஆகிறாள்
பெண் என்னும் ஒளி இன்று
இன்னொரு வீட்டில் ஒளியேற்ற போகிறது .
போகிற இடம் எல்லாம் வளம் செய்யும்
நதிக்கு ஒப்பாக
நீ போகும் இடம் எல்லாம்
சந்தோசம் மட்டும் பரவும் நல்ல ஒரு தருணம்
பெண்ணுக்கு இணையாய் இன்னொரு படைப்பு
இனி இல்லை உலகத்தில்
இறைவன் தனக்கு பதிலாய்
இந்த உலகத்திற்கு பெண்ணை அனுப்பினான்
அதை கொண்டாடத்தான் இந்த திருமணம்
மணம் வீசும் மலர்களுக்கு நடுவில்
நீயும் ஒரு மலராய்
மலர் அழகா ?நீ அழகா ?
இதற்கு ஒரு பட்டிமன்றம் வைத்தாலும்
விடை கிடைக்காது
அத்தனை அழகு கொண்ட உன்னை
கைபிடிப்பான் உன் மணாளன்
மலர்ந்த கனவோ ஒரு புதிய பாதை,
மனம் மலர்கின்றது இனிய உறவாய்,
கைகோர்த்து பயணிக்கும் வாழ்வின் வழி,
காற்றும் கூடி பாடும் நித்திய ராகம்.
விருப்பங்கள் வெவ்வேறு, இதயங்கள் ஒன்று,
சிரிப்பும் சோர்வும் பகிர்ந்து கொண்டே,
உறவின் ஓரம் அமைதி கட்டும்,
உற்சாகக் கனியில் நம்பிக்கை பூத்திடும்.
தடைகள் வந்தாலும் தளராது நடக்கும்,
துணை என்பதே பெரும் துணைவாய்,
கண்ணீரும் சிரிப்பும் கலந்து எழும்
காதல் கவிதை —பெண்ணின் திருமண வாழ்க்கை
அம்பல் போல மலர்கிறாள், இல்லின் ஒளியாக,
அழகு மட்டும் அல்ல — அர்த்தம் தந்தவள்,
தாயாய் மதிக்க, துணையாய் வாழ,
துயர் தாங்கி, சந்தோசம் கொடுப்பவள்.
கதிரவன் போல் எழுந்து பனி போல உருகி,
அரிசி மண் மணமும், அன்பின் வாசமும்,
சிறு சிரிப்பில் குடும்பம் பூக்கும்,
சிறகு முளைத்த கனவுகள் உரைக்கும்.
தன் ஆசைகளை மழையாக நனைத்து,
அவள் ஆசைகளைத் தூவிச் செழிக்க,
நீளும் துயருக்கும் நீர்த்துளி நாயகி,
இல்லறத்தில் அவள் ஒரர் சிற்பி.
முகம் மலர்த்தி வந்திருந்தாள், கனவின் குயிலாக,
காதல் கிளை சேர்த்தது, வாழ்வின் வனமாக,
இரு இதயங்கள் ஒன்று சேர்ந்த புனித உறவாய்,
இருட்டில் ஒளி வீசியது திருமண நாளாய்.
காதல் சினையில் தொடங்கிய பயணம்,
காலைச் சூரியன் போல மெதுவாக வளர்ந்தது,
சண்டை சிரிப்பில் கலந்து இனிய ராகம் பாட,
சேர்க்கை ஒரு சுகமான பரிசாகியது.
நட்சத்திரம் போல நம்பிக்கையை விரித்து,
கடலோடும் நீரோடும் ஆசைகளை பகிர்ந்து,
இன்பம் துயரும் ஒன்றாகக் கட்டி,
காதல் திருமணம் வாழ்வின் அர்த்தம் நனைய.
Lakshya:
இன்னும் சில மணி நேரத்தில்...
கல்யாண புடவை கட்டும் முன், சில நினைவுகள்...
அம்மாவின் குரல் கேட்டு எழுந்தேன்
"மணி அச்சு எந்திரி மா ஐயர் வந்துட்டாரு"...
நாளை மறுவீட்டின் வெளிச்சத்தை சந்திக்க போகிறேன்...
தங்கை சத்தம் போட்டுப் எழுப்பும் காலை
இனிமேல் என் கணவனுடன்...
"பத்திரமா போயிட்டு வா மா "என்று
அப்பா சொன்ன வார்த்தைகள் ஒரு நொடியும்
இனி என் காதில் கேட்கப்போவதில்லை....
சமையலறையில் மனம் எழுப்பும் சமையல்,
அங்கிருந்து நாளை முதல் என் பயணம்...
என் அறை என்று உரிமையுடன் சொல்கிறேன் இன்று...
நாளை முதல் "நான் இருந்த அறை" என்று சொல்லி
நினைத்து பார்த்து கொள்வார்களா?
கண்ணீருடன் கலந்த என் சிரிப்புக்கு பின்னால்
என் கையெழுத்துடன் என்னுடைய வாழ்க்கை மாற்றப்பட உள்ளது...
பழைய நினைவுகளை நெஞ்சில் புதைத்து வைத்துவிட்டு
புதிய உறவுகளுக்கு வருகை தர தயாராகிறேன்...
அப்பாவின் சொல்லாத காதல்,
என் தலையில் கை வைத்த போது நடுக்கத்தை கண்டேன்,
கண்களில் கண்ணீருடன் பார்த்தபோது
மனம் பேசாமல் போனதே....
துணைவருடன் புதிய வாழ்க்கை காத்திருக்கிறது...
இருந்தும் மறக்கமுடியவில்லை என் பிறந்த வீட்டை...
அம்மா சமையலில் செய்த
உப்பு தவறு கூட ருசியாக மாறிய தருணம் இதுவா???
நாளை பிறந்த வீட்டிலிருந்து மறுவீடு செல்ல போவதை நினைத்து
மனதில் ஆயிரம் எண்ணங்கள்...
நக்கல் இல்லாத சிரிப்புடன்
என் அம்மா என்னை பார்த்து சொன்னாள்
"நாளை முதல் நீ ஒருத்தனின் பொண்டாட்டி" என்று...
அப்பாவின் தோள்களில் சாய்ந்த அந்த நிமிடம்
கண்களில் அடங்காத பெருமை, அதை சொல்லவும் முடியவில்லை...
என் குழந்தை பருவங்களை பூட்டி வைக்கிறேன்
என் துணி பெட்டிக்குள்...
எப்போதும் தீட்டிக் கொண்டிருக்கும் தாய் கிழவியே,
நாளை நீ என்னை தேட மாட்டியா?
என்னை மனைவி என்று அழைக்க
ஒரு உயிர் இருந்தாலும்...
என் உயிர் இந்த வீட்டிலேயே தான் இருக்கிறது
நான் என் புகுந்த வீட்டில் இருந்தாலும்...
இந்த இரவோடு,என் குழந்தை பருவத்தை
இங்கேயே விட்டுவிட்டு விடைபெறுகிறேன்
என் அம்மா,அப்பா வின் ஆசை மகளாக...
Yazhini:
ஆயிரம் எண்ண ஓட்டங்களோடு
உன் கரம்கோர்க்க ஒற்றை
சிந்தனையில் குறுகி போனேன்.
உன்னோடு என்னுலகம் இணைய
அன்யொன்றே நம்மை ஆள
இப்பிறவியின் பலனை அடைகின்றேன்.
மூன்று ஆண்டுக் கணா
நிறைவேறும் பூரிப்புடன் உனதருகில்
திருமணக் கோலத்தில் நான்
உனது பத்தாண்டு காத்திருப்பும்
எனது மூன்றாண்டு காத்திருப்பதும்
கைசேரும் தருணம் இது...
உன் பார்வை மட்டுமல்ல
வெட்கமும் எனை திண்ண
தோழிகளுடைய கேளிக்கைகளும்
சுற்றங்களின் வாழ்த்துகளும்
பெற்றோரின் ஆசீர்வாதமும்
ஒருசேர என்கழுத்தில் திருமாங்கல்யம்.
மனதில் மகிழ்ச்சி ததும்ப
இதழ்கள் புன்முறுவல் பூக்க
விழியெங்கும் உன்னுருவம் தெரிய
இன்பம் துன்பம் நோய்நொடி
அனைத்தையும் ஒன்றாக கடப்பேன்
என உறுதி ஏற்கிறேன்
அன்பனாக தோழனாக வழித்துணையாக
என யாதுமாக இருப்பவனே
எனக்காக பிறந்தவனே - இன்று
உன்னால் மீண்டும் பிறப்பெடுத்தேனடா!
உன்னை மணையாளாக மட்டுமல்ல
உன்னை சேய்யாகவும் சேர்கிறேன்...
அணிந்திருந்த அணிகலன்களும் மதிப்பிழந்தது
உன்கையால் ஏறிய திருமாங்கல்யதால்
உனை சேரவே இப்பிறவியேற்றேன்
இதை உயிருள்ளளவும் காப்பேன்.
யாவும் நீயாக மாறிநிற்க
ஒரு மனமாகின்றோம் திருமணத்தில்.
சாக்ரடீஸ்:
என்னவளே
நீ பார்த்த அந்த ஒரு நிமிடம்
என் எண்ணங்கள் எல்லாம் கவிதையாகிறதடி.
நீ பேசாமல் இருக்கும்போது கூட,
உன் கண்கள் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது.
எனக்குத் துணை வார்த்தைகள் தேவையில்லை,
உன் பார்வை ஒன்று போதும்.
நீ என் இதயத்தைத் திருடிப் போனவள்தான்.
அதைத் திரும்பத் தராமல்,
அதையே மீண்டும் மீண்டும் களவாடுகிறாய்
என் மனம் கேட்கின்றது உன்னை
எங்கு கற்றாய் இந்தக் களவழகை?
இப்பொழுது கூட நினைத்துப் பார்,
இன்னும் சில நிமிடங்களில்
நீயும் நானும் கணவன் மனைவியாகப்போகிறோம்.
அது நினைவிலிருக்கும்போதும்,
உன்னைப் பார்த்து வியக்கிறேன்.
உன் சிரிப்பும், அழகும்
வார்த்தைகளால் சொல்ல முடியாதது.
உன்னைக் காதலிக்க
இந்த ஒரு வாழ்க்கை போதுமா என்று எனக்கே சந்தேகம்.
நூறு பிறவிகளுக்கு கூட
உன்னையே காதலிக்க ஆசை.
அது சாத்தியமா தெரியாது,
ஆனால் இந்த ஒரே பிறவிலேயே
அனைத்துப் பிறவிகளின் காதலையும்
உனக்குக் கொடுக்க ஆசை.
உன் கண்கள் எனது பார்வையாக,
உன் வார்த்தைகள் என் குரலாக,
உன் நிழல் எனது பாதையாக,
உன் எண்ணங்கள் என் சுவாசமாக
மாற வேண்டும் என ஆசை.
உன் விரலை என் விரல்கள் பிடித்து,
உன் நெற்றியில் குங்குமம் வைத்து,
உன் கழுத்தில் தாலி கட்டி,
உன் கண்களில் என் பெயரை காணவேண்டும்
என்றென்றும்
நீ எனக்கான ஒரு வரம்தான்,
விதி எழுதிய நிமிடங்களில்
நீ என் உயிரின் நிரந்தர இசைதான்
இன்று முதல் என்றும்
நான் உனக்கே உரியவனாக இருப்பதில்
மிகுந்த நன்றி… நெகிழ்ச்சி… மகிழ்ச்சி.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version