தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 366

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அனோத்:
மெழுகுவர்த்தி ஒளியில் நீயும் நானும்.....
மெளன சிரிப்பில் காதல் மழையும்......
சுடர் நெருங்க, நம் நிழல்கள் ஒன்றாக...
சுகமான நினைவுகள் துள்ளி நம்முள் ஆட....

கைகளில் உணரும், அன்பின்  தொடுகை...
கண்களில் தேடும், மௌனத்தின் உரை.....
இதழ்களில்  துடிக்கும், உன்னத முத்தம்....
இவ் - இரவினை அலங்கரிக்க எழுந்த யுத்தம்.......

வந்த வழிகள் திரும்பும்  நினைவாய்.......
வாழும்  தருணம் வீணல்ல என்றாய்.....!
மின்னும் கண்கள் சந்திரவிளக்காய்.......!
விண்ணின் நட்சத்திரம் விழுந்ததுவோ நீயாய்?

நேரம் நகர்ந்தாலும் தீபம் இருட்டுமோ ?
நெஞ்சம் நினைத்தாலும் காதல் குறையுமோ ?
இருட்டில் ஒளியாய் நெஞ்சை நெகிழ்த்தாய்,
இரட்டை உயிராய் என்னுள் கலந்தாய்.......

கண்கள் பேசும் இரவுகளில்.....
காற்று கூட காதல் மொழிகளில்....
தீபம் கருகினும் நினைவு கரையாது .......
நேரம் கடந்தாலும் ஆசை  குறையாது...........

நம் காதலை சுவைக்க சுவையான உணவு.....
எம் காதுகளை உரச   ஒலிதரும் கடலின் அலைகள்...
தம் மகரந்த வாசமாய் நின் கூந்தலின் அசைவுகள்......
இவை எனை ஆட்கொள்ளும் காதலதன்  பரிசுகள்.....

ஒளிதரும் மெழுகில் பொலிவுடனுன் முகம்
அதில் ஒளிந்திருக்கும் வெட்கம்....!
நான் காண்பதே  சொற்பம்.....!

பேரழகே ! உன்னிடத்தில் காதல் சொல்ல சம்மதி ......!

வீசும்  காற்றே கொஞ்சம் நில்லடி...!
அவள் பதிலை விரைந்து உதட்டோடு உரசிக் கேளடி.......!

Asthika:
நட்சத்திரங்கள் சாட்சியாக💫💫

இரவின் மௌனத்தில் நீயும் நானும்,
இதயங்கள் பேசும் இனிய கவனம்;
நட்சத்திரம் கூட நம் மீது விழிக்க,
நிழலாய் எனை தழுவி நிலைக்க.

மந்தக் காற்று மெதுவாய் மோத,
உன் ஒலி என் உள்ளம் ஈர்க்க;
சொற்கள் இல்லா உரையாடலில்,
நம் காதல் என்றும் மலர்க.


இரவின் இனிமைப்பொழுதில்...!

சிலிர்க்கும் காற்றில் உன் வாசம்,
சிந்தும் முத்தம் எனை நனைக்கும்;
காதல் சொற்கள் நெஞ்சை பூரிக்க,
உன் அருகே நான் கனவாய் மாற.

இருள் கூட வெளிச்சம் தர,
உன் அணைப்பு கண்ணீர் துடைக்கும்;
உன் விழியில் உலகம் மறந்து,
இந்த இரவு என்றும் மலரட்டும்.




இரவின் காதல் ராகம் நீயும் நானும் தான்...

இரவின் ஆழத்தில் இன்பம் பெருக,
உன் தளிர் தொடு நெஞ்சை தேட,
சிரித்திடும் நிலவு சாட்சி சொல்ல,
உன் அருகே வாழ்வு முழுமை கொள்ள.

மனதுள் பொங்கும் காதல் கனவு,
உன் தீண்டலால் எழும் இளமை கனவு;
உன் வசந்தம் என் உயிரை கொட்ட,
இந்த இரவு நீ எனக்கே சொந்தம்!


நீயும் நானும் – ஒரு கவிதை,
நேசிப்பதில் வண்ண சித்திரம்;
மௌனத்தில் பேசும் கண்கள்,
மழைப்பொழியும் நினைவுகள....

விழியில் உன் வடிவம் வரையும்,
மனதில் காதல் மலர்ந்து பரவும்;
ஒரு சொல்லில்லாமல் புரியும் மயக்கம்,
உன் அருகே நான் வீழ்ந்த தழுக்கம்.

காதல் கனவுகள்......

காற்றில் சிந்தும் உன் வாசம்,
நெஞ்சை நிரப்பும் ஒரு தேனமுதம்;
உன் பார்வையில் விழும் பொழுதே,
என் உலகம் நிறைவு பெறும் புதுவிதம்.

கையில் கை பற்றினால் போதும்,
நிமிஷங்கள் நூற்றாண்டாய் மாறும்;
உன் பெயரை மௌனத்தில் அழைக்க,
என் இதயம் பாடும் மெளன இசை

என்றும் நீ எனக்கே!!

நாள்கள் போக எதுவும் மாறாது,
உன் நினைவில் என் நெஞ்சம் தேக்காது;
சிறகாய் நீ எனை தூக்கிச் செல்ல,
சந்திரன் கூட நம் மீது பொறாமை கொள்ள.

உன் முத்தத்தில் ஒரு புதிய உலகம்,
உன் இதயத்தில் என் வாழ்வின் புகழ்;
என்றும் நீ – என் கனவின் கவிதை,
மறக்க முடியாத ஒரு இனிய நினைவாய்...
 
, வாழ்க்கை முழுவதும் உன் காதலியாக அல்ல..
  உன் மனைவியாக உன்னுடன் வாழ்ந்து
 தாயாக உன்னை என்மடியில்..
அரவணைப்பேன் என்னவனே !!!❤️❤️❤️

   

VenMaThI:

அழகிய மாலையில்
அந்தி சாயும் வேளையில்
ஆழமான சிந்தனையில்
அவனும் நானும்....

உடனிருந்த நாட்கள்
உள்ளத்தில் உறைந்தது..
எதிர்வரும் நாட்களோ
எண்ணத்தில் மலர்ந்தது...

இருள் பெரிதா இல்லை - இந்த
மௌனம் பெரிதா என்ற
வினாவுக்கான விடையாய் - தன்
வாய் திறந்து மௌனம் களைந்தாள்....

குழந்தை பருவம் முதல்
குமரிப்பருவம் வரை- என்
உடனிருந்த உயிரே
தோள் கொடுத்த தோழனே...

கணவனின் கைப்பற்றி
கண்ணாளன் அவனுடன் - என்
வாழ்க்கையை தொடங்க
வீட்டில் நாள் குறித்து விட்டனரே..

குறும்புகள் பல செய்து - என்னை
கோபமடைய செய்தவனே..
சேட்டைகள் பல செய்து - என்னை
சிரிக்க வைத்தவனே..

தேடிய போதெல்லாம் - தேடலின்
விடையாய் ஆனவனே....
அழும்போதெல்லாம் அரவணைத்து - என்
கண்ணீரை துடைத்தவனே..

துவண்ட போதெல்லாம் - எனக்கு
தோள் கொடுத்த தோழனே..
உன் அன்பு மழையால் என்றும்
என்னை நனைத்த நண்பனே....

போகும் இடத்தில் என் வாழ்வில்...

புயலும்  பூகம்பமும் கூட வரலாம் - நிம்மதியின்றி
துன்பமே என்றும் நிலைத்திருக்கலாம்...
உன்னை மிஞ்சும் ஆணாக கூட அவன் இருக்கலாம் -இடைவிடாத
இன்பம் மழையாய் என்னை நனைக்கலாம்...

எது வந்த போதும் என் நண்பா - உன்னை
 நினைக்காத நாளொன்றும் இருக்காது...
நாம் ஒன்றாய் கழித்த  நினைவுகள்
 என்றும் என் மனதைவிட்டு நீங்காது...

இல்லற வாழ்வில் நீயும் ஒரு நாள்
அடியெடுத்து வைக்கலாம்
இருவரும் அவரவர் வாழ்வில்
ஓடிக்கொண்டு இருக்கலாம்...

ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்
நம் உறவுகளுக்கு நம் நட்பு புரியாமல் போகலாம்
இங்கிருந்த மௌனம் நம்மிடையே
நிலையாய் நிலைத்தும் போகலாம்....

காலம் என்ன சதி செய்தாலும்
நம் பாசம் பொய்யாய் போகாது
என்றும் உன் தோழியாய்
 இன்றுள்ள இதே அன்புடன் - என்
இறுதி மூச்சு வரை இருப்பேன்....
என்றும் என்றென்றும்
உன் தோள் சாயும் தோழியாய்.... நான்

(Marriage invitation lam waste pana maten olunga vandhu seru)❤️❤️


MaiVizhi:
என்னவனே...
இந்த நாள் இந்த நொடி...
இதுக்காக காத்திருந்த
பல வருடங்கள், பல மாதங்கள்...

உன் குரலை கேட்ட காதுகள்,
உன் விழியை பார்க்க ஏங்கிய கண்கள்...
ஏக்கம் முடியும் நேரம்
என் முன்னே வந்த நிமிடம்...
நீண்ட நேரம் பேசிய உதடுகள், உன் பேச்சை ரசித்த காதுகள்...

 இன்று என் முன்னே, நீ அமர்ந்தாலும்
 என்னால் பேச முடியவில்லை,
உதடுகள் நடுங்குகிறது வார்த்தைகள் திணருகின்றன...
எதோ ஒரு தயக்கம், உன் விழியைப் பார்த்திட உயிரே...
தொலைதூரத்தில் இருந்து
ஆசையாய் பேசிய வார்த்தைகள்,
உன் கைக்களில் என் விரல்கள் படாதா
என்று மனதில் ஒரு ஏக்கம்...

இன்று மிக அருகில் இருந்தும், என்னால் முடியவில்லையே டா...
நிலவொளியில் விண்மீன் வெக்கபடுவது போல,
உன் விழியால் என் பெண்மையின் வெக்கம் நான் அறிந்துகொண்டேன்...

பேச துடிக்கும் உதடுகள் என்னவனே,
உன் அருகில் அமர்ந்து, உன் விழிகளை பார்த்து...
உன்னிடம் சொல்கிறேன்... உயிரே,
உனை பிடிக்க காரணம் தேடி நான் சோர்ந்து விட்டேன்...

உனைப் பார்க்க காத்திருந்து ஓடிய நாட்களை விட
 உன்னை பார்த்த பிறகு...
 என் இமை விட்டு இனிமேல் நீ செல்லும் நேரம் தான்
வலியானது அழகே...
இந்த ஒளியில் தெரியும் உன் முகம்...
ஒரு ஓவியமாய் உருவாக்கும் என் இதயம்...

என்னால் இமைகள் மூட முடியவில்லை...
நிலவே, சற்று நேரம் மறந்து விடு... ஒளியே, 
சற்று நேரம் அமைந்து விடு...
என்னவனின் கைகளை நான் சற்று  உணருகிறேன்.

வெக்கத்தில் மறைந்த நிலா...
புன்னகையில் அணைந்த ஒளி...
தேடினேன் உன் கரங்களே,
ஆனால் திடீரென்று ஒலித்தது ஒலி...

 என்னவளே என்று ஒலிக்கும் உன் குரல்,
ஆனால் அது காதுக்கு மிக அருகில்.
நீயோ, தொலை தூரத்தில்...
அன்பே, கனவில் கூட பார்த்தேன் டா உனை,
ஆனால் ஏங்கிய என் விரல்களை அங்கேயும் நீ எமாற்றி விட்டாய்...
எப்போது வருவாய் என்று கேள்வியுடன்...
தயங்கிய என் உதடுகள் புன்னகைத்து,
தொடங்கும் பயணம்...

🥰😘🥰

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version