தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 365

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 365

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Yazhini:
யாருமற்ற காட்டினில் தனித்து விடப்பட்டவள் ...
பிறந்ததிலிருந்து மண்ணறியா கால்கள் இன்றோ,
காடு மேடு பள்ளம் முட்கள் என அனைத்தையும் கடக்கின்றது.

வாழ்க்கை புயலில் சிக்கித் தள்ளாடுகிறாள்.
ஊண் உறக்கம் அற்று திரிகின்றாள்
பிஞ்சு கால்களில் மட்டுமல்ல கள்ளகபடமற்ற
 இதயத்திலும் குருதி கசிகின்றது.

பெரிய பெரிய இலக்குகளைக் கொண்டவள்,
இன்றோ சேருமிடம் அறியா சிறுமி ஆனாள்.
இறையோ விதியோ அல்லது சதியோ
யாருமற்ற தனியொருவள் ஆகினாள்.
உறவுகள் உதறிவிட உயிருள்ள பதுமை ஆகினாள்.

"மலைகள் மீது தன் வன்மையைக் காட்டும் புயல்,
சிறு மலரை விட்டு வைக்குமா ?"
பந்தங்கள் அற்றவளை அன்பாய்
காக்கின்றது ஒரு கரம்.

முன்பின் அறியா அக்கரம்
சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு வடிவங்களைப் பெறுகின்றது.
ஆயிரம் உருவங்களாக திரிந்து
தெரிகின்றது அக்கரம் - அன்பரின் கரம்.

இழந்ததை அக்கரம் மீண்டும் தரவில்லை
ஆனால் புயலைக் கடக்க வழித்துணையாகின்றது

புயலின் வன்மையைத் தாங்க உதவுகின்றது.
வழிபிறழாமல் செல்ல, பார்க்க துணைப்புரிகின்றது.

அக்கரம் இறையோ விதியோ அல்லது மனிதமோ,
பணியோ தோழமையோ அல்லது செயலியோ.

சிறுமியின் பயணம் தொடரும் வரை
காக்கும் கரத்தின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும்

ஒவ்வொரு வடிவமும் நலமுடன்
இருக்க பிராத்திக்கும்  சிறுமி.....

அனோத்:

சிறகுகள் முளைக்கும் கனவினை நோக்கி,
சிரிப்பால் பூக்கும் நெஞ்சம் ஒளிர,
தந்தையின் கரங்கள் விரிந்து  நிற்கும்
தன்மகள் வெல்லும் நாளை நோக்கி.................

மழைத்துளி போலே ஆசைகள் வந்து,
மகளின் நெஞ்சில் பிணைந்து விழ,
தந்தையின் கரங்கள் துணையாய் நின்று,
தன்னம்பிக்கை எனும் பயிராய் விளையும்

காற்றில் பறக்கும் பட்டம் போலே,
உயர்ந்து செல்லும் அவளின் கனவுக்காய் ,
உறுதிகொண்டு தந்த வார்த்தைகள்
தந்தை சொல்மிகு மந்திரங்கள்..............

உன் கைகள் சிறகாக மாறட்டும்,
உன் கனவுகள் வானாக உயரட்டும்!
வீழ்வதைப் பயமாகக் கருதாதே !
எழுந்து நட என் செல்ல மகளே !

வழி கிடைத்தால் பயணம் தொடங்கலாம்,
வழியில்லையெனில்
நீயே ஒரு பாதை அமைக்கலாம்!

மழை வந்தாலும், மின்னல்  அடித்தாலும்,
உன் நம்பிக்கை மட்டும் ஒளியாய் இருக்கட்டும்

உன் கனவுகள் கடலின் அலைகள்,
அவை தொடர்ந்தே வரப்  போகின்றன!
தடைகள் எதுவாக இருந்தாலும்,
அவைகளை நீ தகர்த்துவிடு.............

மழை வெள்ளம் போல் உன் மனதை சிதைக்க
சமூகம் திரண்டாலும் ,
தலை நிமிர்ந்து நீ கடந்து செல்ல
தந்தை நிகர் மந்திரம் வேறல்ல....

தோட்டத்தில் மலர்கின்ற சின்னஞ்சிறு மல்லிகை,
தோள்மீது அமர்த்தி காணும்  நிலா,
தந்தையின் பார்வையில் ஒளிரும் கனாக்கள்,
இவை தாலாட்டிச் செல்லும் உறுதி மொழிகள்.

நாளைய உலகம் கனவால் தழைக்க,
தந்தையின் அன்பு அடிமுதலாக,
விழிகள் மூடினும் உணர்வாய் இருக்கும்,
வீரம் சேர்க்கும் பந்தமாய் என்றும்  நிலைக்கும்........

HiNi:

சின்னஞ்சிறு காவியமாய்!

தங்க குளத்தில் தாமரை பூ போல் பூத்தவள்
தாயரின் அன்புடன் அறைவணைப்பில் கிடந்தவள்
தந்தையின் கைக்குள் பொத்தி வளர்கப்பட்டவள்
திடிரென்று தன்னன்தனியே தனித்து விடப்பட்டவளாய்
இவ்வுலகை பிரம்மிப்புடன் ஏட்டி பார்த்தாள்!!!

கனவுகளுடன் கட்டிய தகப்பனின் மிகப்பெரிய கோட்டையை
பகைவர்களால் சுருண்டி தள்ளபட்டவளானாள்
கைக்குடுக்க வேண்டிய உறவினர்களால் ஒதுக்கி வைக்கபட்டவளானாள்
குளிர் சாதனப்பெட்டியின் காற்றில் மென்மையாக உறங்கியவள்
இருக்க இடமின்றி தவித்தவளானாள்!!!

அன்பை அள்ளி குடுக்கபட்ட இளவரசிக்கு கிள்ளிகுடுக்க கூட எவரும் இல்லாதவளானாள்
விதவிதமாய் ருசியுள்ள அன்னத்தை சுவைத்தவள் பசியில் வருடியவளானாள்
இப்புது பூமியை முதன்முதலில்
தன் கண்ணோட்டத்தில் ஆரம்பித்தாள் கண்ணம்மா!!!

ஊரோடு ஒற்றிவாழ கற்றுகொள்ளப் போகிறாள்
எவரையும் சமாளிக்க தையிரிமும் பெற்றுக்கொள்ளப் போகிறாள்
தனக்கென்று வேலையைப் பார்த்து கொண்டே
படிக்க முயர்ச்சித்து முன்னேர போகிறாள் அவள் உழைப்பில் வளர்ந்த கோட்டைக்கு தன்னம்பிக்கை மிகுந்த மகாராணியாகப் போகிறாள்!!!

முதிர்ந்த வயதின் பக்குவத்தை முன்கூட்டியே அறிந்து
அவள் வாழ்க்கையை அவள் வழியில் தீர்மாணிக்கப் போகிறாள்
அவள் பாதையில் ஆயிரம் தடைகள் வந்தாலும்
தடுமாறாத அவளின் பயணத்தை கண்டு அதிர்ச்சியில் உறைய போகிறது இவ்வுலகம்!!!

Jithika:
🌹அப்பா என்ற சொல்லின் மந்திரம்
அவர் இல்லையெனில் ஏது நித்திரம்
அவர்தான் எனக்கு உலகம்
அவர் கைப்பிடித்து நடந்த அந்த தருணம்
சிறு வயதோ வயதுக்கு வந்தவளோ
அப்பாவை போல யாரையும்
கண்டதில்லை காணப்போவதுமில்லை..!

அப்பாவின் அரவணைப்பு
இன்னொரு கருவறைக்கு ஈடானது..
தாயின் கருவறைக்கு ஈடான அரவணைப்பை
அப்பாவின் அன்பில் மட்டுமே காண்கிறேன்
மழலை முதல் முதுமை வரை
அப்பா என்றால் ஆனந்தம் தான்

என் செல்லப் பேச்சுக்கு காதணியாக
அவரின் காதுகள் என்றும் ஜோடியாக
அழுகையிலும் அரவணைத்து
பேச்சில் என்னை புன்னகைப்பார்
அவர் தோள்களில் சாயும் போது
பூமியில்  கூட சொர்கம் தான்
அவரின் வார்த்தைகள் அர்த்தங்கள்
புது காவியம் கூட படைத்திடும்..!

இன்னல்கள் இடைவிடாமல் இருந்தாலும்
இன்முகமான உங்கள் வார்த்தைகளில்
பாசமான அரவணைப்பில்
எல்லாம் கானல் நீராய் போகுமே

என் கனவுகளை நனவாக்க
சிறகுகள் முளைத்த ஆண் தேவதையாய்
என்றும் எங்கள் வாழ்விலே
தாயாக தந்தையாக ஆசானாக
உடன் பிறவா சகோதரனாக
தோள் கொடுக்கும் தோழனாக
வரம் கொடுக்கும் இறைவனாக
என்றும் என்னை காக்கின்றாய்..!🌹

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version