சிலைபோல் உருவம் , சில்லறை புன்னகை , மெல்லிய குரல் ,
கருவிழி கொண்ட தேவதையே இக்கவிதை உன்னை போற்றியே...
ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தை சொற்க்களால் அடக்கி வைக்க முடியாது...அவளது கடைசி கனம் வரை அவளை சார்ந்தவர்களை நினைத்து கொண்டே வாழ்கிறாள் பெண்...அழகு எண்ணும் வார்த்தைக்கு அர்த்தமாக இருக்கும் நிலவே, உன் வாழ்வில் இவ்வளவு துன்பங்கள் உண்டா???
காலங்கள் மாறினாலும்,தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நீயே கருவை சுமக்கும் பாக்கியம் கொண்டவள்...கடவுளுக்கு அடுத்தபடியாக தோன்றும் காவியமே... தியாகத்தின் மறு உருவமே...தேவதையின் வம்சமே...
திருமணம் வரை பெற்றோர்கள் அரவணைப்பில் வாழ்கிறாய்...திருமணம் செய்துக்கொண்டு கணவன் மற்றும் பிள்ளைகளுக்காக வாழ்கிறாய் நாட்கள் கடந்து சென்ற பின் பேரன் , பேத்தி என்று வாழ்கிறாய்...உனக்காக வாழப்போவது எப்போது..??
அழகின் ஓவியமே!!! நிலவின் ஈர்ப்பு விசையே!!!
கவலைகள் பல இருந்தாலும் தன் முகத்தில் சிரிப்பை வெளிப்படுத்த மறப்பதில்லையே நீ...
சுதந்திரம் நீ சிறு வயதில் இருப்பதுபோல் வயது வந்த பின் இருப்பதில்லை அது ஏன்??கட்டுப்பாடுகள் உள்ளன என்று நினைத்து உன்னை நீயே பூட்டிக்கொள்ளாதே ... எதற்காக தலை குனிய வேண்டும்??? தலை நிமிர்ந்து நடந்து செல் கண்மணியே...
ஒருபொழுதும் பெண்ணின் மனம் வெறுமையாக தோன்றுவதில்லை... தியாகம், கனவு, குடும்பம் மற்றும் சிறிது நம்பிக்கை என்று நிறைந்திருக்கும்...
கனவுகளை சுமந்து எங்கு செல்வாய் நீ??? சமையலறை கா?? பெண்கள் இருக்கும் இடம் அவர்களே தேர்வு செய்ய வேண்டும் இது தான் பெண் சுதந்திரம்...