Author Topic: இன்றைய ராசிபலன் 03.02.2018  (Read 4176 times)

Offline Evil

இன்றைய ராசிபலன் 03.02.2018
« on: February 03, 2019, 07:49:17 AM »
இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள்.


ரிஷபம்

ரிஷபம்: காலை 8 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நிம்மதியான நாள்.


மிதுனம்

மிதுனம்: காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.  உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்துநீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


கடகம்

கடகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப் புகள் வரும். சகோதர வகை யில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் ஆதரவுப்பெருகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


சிம்மம்

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அமோகமான நாள்.


கன்னி

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


துலாம்

துலாம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கடின முயற்சியால் முன்னேறும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.


தனுசு

தனுசு: காலை 8 மணி முதல் உங்களுக்குள் இருந்த சோர்வு, களைப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகு, இளமைக் கூடும்.  விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


மகரம்

மகரம்: காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம்பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


கும்பம்

கும்பம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


மீனம்

மீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால