இன்றைய ராசிபலன்
மேஷம்
மேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழையசிக்கலில் ஒன்று தீரும். விருந்தி னர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபா ரத்தில்பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும் புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.சகிப்புத் தன்மை தேவைப் படும் நாள்.
கடகம்
கடகம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள்வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைமதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
துலாம்
துலாம்: முக்கிய பிரமுகர்களைசந்திப்பீர்கள். வர வேண்டியபணத்தை போராடி வசூலிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியா செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.
தனுசு
தனுசு: கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.தள்ளிப் போன விஷயங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்பேசுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மன நிறைவுகிட்டும் நாள்.
மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் மனதில் இனம்புரியாத பயம்வந்துப் போகும். குடும்பத் தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில்
ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
கும்பம்
கும்பம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும்.உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மீனம்
மீனம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.