பசுமை புரட்சி!
சூரியன் சிரிக்கிறது ஒளி தந்து,
காற்றும் பறந்து வந்து வருடுகிறது தென்றலாய் !
நம் முன்னோர்களின் பூமி சொர்க்க பூமி, ஆனால்
நாம் அதை சோகத்தால் புதைத்து விட்டோம் இன்று!
மண்ணுக்குள் கிடக்கும் எண்ணெய் அழுது கொண்டிருக்க,
அதன் தீயில் மரங்கள் கருகிக்கிடக்க.
பருவமழை தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்க,
பூமி தன்னம்பிக்கை இழந்து துடித்துக்கொண்டிருக்கிறது!
வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்தில்,
வீணாகும் மனிதர் சுயநல இச்சையில்.
வானமும் காற்றும் மாசடைகிறது,
வாழும் நீரின் ஓட்டமும் மந்தமாகிறது!
ஆனால் எங்கே துவக்கம்… எங்கே முடிவு?
வளர்ந்துவரும் தொழில்நுட்பம் வாழ்க்கையை மாற்றலாம்,
ஆனால் மனிதன் தான் மனதை மாற்றி உலகை காப்பாற்ற வேண்டும்.
காற்றாடிகள் நம்பிக்கையுடன் சுழல்கின்றன,
சூரிய மின் தகடுகள் கனவுகளாய் மின்னுகின்றன.
மகிழ்வான நாளை நோக்கி நாம் செல்ல,
மனதை மாற்றி வாழ்வில் மாற்றம் உருவாக்குவோம்!
மண்ணின் அழுகையை நிறுத்தி பசுமையை வரவேற்க,
மரங்களை வளர்த்து பூமியின் இதயத்தை மகிழ்விப்போம் !
சூரிய ஒளியில் மின்னும் பசுமை நிலம், அழகிய கனவுகளின் விளிம்பாக மலரட்டும்!
பசுமை சக்தி உலகை புதுமை வெள்ளமாய் ஆட்கொள்ளட்டும்!
பூமிக்கான நம் பயணத்தில் வாழ்வை மீட்டெடுக்கட்டும்!
நாம் கேட்கும் இசை, மரத்தின் இலைகளின் சலசலப்பாக இருக்கட்டும்,
நாம் ரசிக்கும் அழகு மின்னும் கதிர்களின் நிழலாக இருக்கட்டும்.
சூரியன் புன்னகையுடன் தரும் ஒளி போல நாமும் இயற்கையைஅழிக்காமல்,
நம்மை வாழ வைக்கும் பூமிக்கு நாம் பொறுப்புடன் தருவோம் வாழ்க்கை!
இயற்கையை பாதுகாப்போம், பூமி மாதாவை வாழ வைப்போம்!