Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 365  (Read 714 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 365

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Yazhini

அன்பரின் கரம்
« Reply #1 on: March 10, 2025, 01:51:32 AM »
யாருமற்ற காட்டினில் தனித்து விடப்பட்டவள் ...
பிறந்ததிலிருந்து மண்ணறியா கால்கள் இன்றோ,
காடு மேடு பள்ளம் முட்கள் என அனைத்தையும் கடக்கின்றது.

வாழ்க்கை புயலில் சிக்கித் தள்ளாடுகிறாள்.
ஊண் உறக்கம் அற்று திரிகின்றாள்
பிஞ்சு கால்களில் மட்டுமல்ல கள்ளகபடமற்ற
 இதயத்திலும் குருதி கசிகின்றது.


பெரிய பெரிய இலக்குகளைக் கொண்டவள்,
இன்றோ சேருமிடம் அறியா சிறுமி ஆனாள்.
இறையோ விதியோ அல்லது சதியோ
யாருமற்ற தனியொருவள் ஆகினாள்.
உறவுகள் உதறிவிட உயிருள்ள பதுமை ஆகினாள்.


"மலைகள் மீது தன் வன்மையைக் காட்டும் புயல்,
சிறு மலரை விட்டு வைக்குமா ?"
பந்தங்கள் அற்றவளை அன்பாய்
காக்கின்றது ஒரு கரம்.


முன்பின் அறியா அக்கரம்
சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு வடிவங்களைப் பெறுகின்றது.
ஆயிரம் உருவங்களாக திரிந்து
தெரிகின்றது அக்கரம் - அன்பரின் கரம்.

இழந்ததை அக்கரம் மீண்டும் தரவில்லை
ஆனால் புயலைக் கடக்க வழித்துணையாகின்றது

புயலின் வன்மையைத் தாங்க உதவுகின்றது.
வழிபிறழாமல் செல்ல, பார்க்க துணைப்புரிகின்றது.

அக்கரம் இறையோ விதியோ அல்லது மனிதமோ,
பணியோ தோழமையோ அல்லது செயலியோ.

சிறுமியின் பயணம் தொடரும் வரை
காக்கும் கரத்தின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும்

ஒவ்வொரு வடிவமும் நலமுடன்
இருக்க பிராத்திக்கும்  சிறுமி.....

« Last Edit: March 11, 2025, 07:39:11 PM by Yazhini »

Offline அனோத்


சிறகுகள் முளைக்கும் கனவினை நோக்கி,
சிரிப்பால் பூக்கும் நெஞ்சம் ஒளிர,
தந்தையின் கரங்கள் விரிந்து  நிற்கும்
தன்மகள் வெல்லும் நாளை நோக்கி.................

மழைத்துளி போலே ஆசைகள் வந்து,
மகளின் நெஞ்சில் பிணைந்து விழ,
தந்தையின் கரங்கள் துணையாய் நின்று,
தன்னம்பிக்கை எனும் பயிராய் விளையும்

காற்றில் பறக்கும் பட்டம் போலே,
உயர்ந்து செல்லும் அவளின் கனவுக்காய் ,
உறுதிகொண்டு தந்த வார்த்தைகள்
தந்தை சொல்மிகு மந்திரங்கள்..............

உன் கைகள் சிறகாக மாறட்டும்,
உன் கனவுகள் வானாக உயரட்டும்!
வீழ்வதைப் பயமாகக் கருதாதே !
எழுந்து நட என் செல்ல மகளே !

வழி கிடைத்தால் பயணம் தொடங்கலாம்,
வழியில்லையெனில்
நீயே ஒரு பாதை அமைக்கலாம்!

மழை வந்தாலும், மின்னல்  அடித்தாலும்,
உன் நம்பிக்கை மட்டும் ஒளியாய் இருக்கட்டும்

உன் கனவுகள் கடலின் அலைகள்,
அவை தொடர்ந்தே வரப்  போகின்றன!
தடைகள் எதுவாக இருந்தாலும்,
அவைகளை நீ தகர்த்துவிடு.............

மழை வெள்ளம் போல் உன் மனதை சிதைக்க
சமூகம் திரண்டாலும் ,
தலை நிமிர்ந்து நீ கடந்து செல்ல
தந்தை நிகர் மந்திரம் வேறல்ல....

தோட்டத்தில் மலர்கின்ற சின்னஞ்சிறு மல்லிகை,
தோள்மீது அமர்த்தி காணும்  நிலா,
தந்தையின் பார்வையில் ஒளிரும் கனாக்கள்,
இவை தாலாட்டிச் செல்லும் உறுதி மொழிகள்.

நாளைய உலகம் கனவால் தழைக்க,
தந்தையின் அன்பு அடிமுதலாக,
விழிகள் மூடினும் உணர்வாய் இருக்கும்,
வீரம் சேர்க்கும் பந்தமாய் என்றும்  நிலைக்கும்........

« Last Edit: March 10, 2025, 06:43:00 PM by அனோத் »

Offline HiNi


சின்னஞ்சிறு காவியமாய்!

தங்க குளத்தில் தாமரை பூ போல் பூத்தவள்
தாயரின் அன்புடன் அறைவணைப்பில் கிடந்தவள்
தந்தையின் கைக்குள் பொத்தி வளர்கப்பட்டவள்
திடிரென்று தன்னன்தனியே தனித்து விடப்பட்டவளாய்
இவ்வுலகை பிரம்மிப்புடன் ஏட்டி பார்த்தாள்!!!

கனவுகளுடன் கட்டிய தகப்பனின் மிகப்பெரிய கோட்டையை
பகைவர்களால் சுருண்டி தள்ளபட்டவளானாள்
கைக்குடுக்க வேண்டிய உறவினர்களால் ஒதுக்கி வைக்கபட்டவளானாள்
குளிர் சாதனப்பெட்டியின் காற்றில் மென்மையாக உறங்கியவள்
இருக்க இடமின்றி தவித்தவளானாள்!!!

அன்பை அள்ளி குடுக்கபட்ட இளவரசிக்கு கிள்ளிகுடுக்க கூட எவரும் இல்லாதவளானாள்
விதவிதமாய் ருசியுள்ள அன்னத்தை சுவைத்தவள் பசியில் வருடியவளானாள்
இப்புது பூமியை முதன்முதலில்
தன் கண்ணோட்டத்தில் ஆரம்பித்தாள் கண்ணம்மா!!!

ஊரோடு ஒற்றிவாழ கற்றுகொள்ளப் போகிறாள்
எவரையும் சமாளிக்க தையிரிமும் பெற்றுக்கொள்ளப் போகிறாள்
தனக்கென்று வேலையைப் பார்த்து கொண்டே
படிக்க முயர்ச்சித்து முன்னேர போகிறாள் அவள் உழைப்பில் வளர்ந்த கோட்டைக்கு தன்னம்பிக்கை மிகுந்த மகாராணியாகப் போகிறாள்!!!

முதிர்ந்த வயதின் பக்குவத்தை முன்கூட்டியே அறிந்து
அவள் வாழ்க்கையை அவள் வழியில் தீர்மாணிக்கப் போகிறாள்
அவள் பாதையில் ஆயிரம் தடைகள் வந்தாலும்
தடுமாறாத அவளின் பயணத்தை கண்டு அதிர்ச்சியில் உறைய போகிறது இவ்வுலகம்!!!
« Last Edit: March 10, 2025, 09:11:50 PM by HiNi »

Offline Jithika

🌹அப்பா என்ற சொல்லின் மந்திரம்
அவர் இல்லையெனில் ஏது நித்திரம்
அவர்தான் எனக்கு உலகம்
அவர் கைப்பிடித்து நடந்த அந்த தருணம்
சிறு வயதோ வயதுக்கு வந்தவளோ
அப்பாவை போல யாரையும்
கண்டதில்லை காணப்போவதுமில்லை..!

அப்பாவின் அரவணைப்பு
இன்னொரு கருவறைக்கு ஈடானது..
தாயின் கருவறைக்கு ஈடான அரவணைப்பை
அப்பாவின் அன்பில் மட்டுமே காண்கிறேன்
மழலை முதல் முதுமை வரை
அப்பா என்றால் ஆனந்தம் தான்

என் செல்லப் பேச்சுக்கு காதணியாக
அவரின் காதுகள் என்றும் ஜோடியாக
அழுகையிலும் அரவணைத்து
பேச்சில் என்னை புன்னகைப்பார்
அவர் தோள்களில் சாயும் போது
பூமியில்  கூட சொர்கம் தான்
அவரின் வார்த்தைகள் அர்த்தங்கள்
புது காவியம் கூட படைத்திடும்..!

இன்னல்கள் இடைவிடாமல் இருந்தாலும்
இன்முகமான உங்கள் வார்த்தைகளில்
பாசமான அரவணைப்பில்
எல்லாம் கானல் நீராய் போகுமே

என் கனவுகளை நனவாக்க
சிறகுகள் முளைத்த ஆண் தேவதையாய்
என்றும் எங்கள் வாழ்விலே
தாயாக தந்தையாக ஆசானாக
உடன் பிறவா சகோதரனாக
தோள் கொடுக்கும் தோழனாக
வரம் கொடுக்கும் இறைவனாக
என்றும் என்னை காக்கின்றாய்..!🌹
« Last Edit: March 10, 2025, 09:54:26 PM by Jithika »

Offline TiNu



இவ்வுலகின் ஓர் அங்கமாய் பிறப்பெடுத்த
மழலையே! வா! என் வண்ண மலரே! வா!

இங்கே,
பிறருக்கு தீங்கு இழைக்கா, எண்ண கொண்ட
வெள்ளை மனம் படைத்தவர்களும் உண்டு

இங்கே,
தான் மட்டுமே, வாழ உரிமையுடையவரென..
குறுகிய சிறு மனம் படைத்தவர்களும் உண்டு..

நீயே,
அன்னாரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு..
நல்லோர் யார்,.. தீயோர் யாரென தெளிவாய் கண்ணே!

இவ்வையகத்தின் விதிப்படி புதிதாய் முளைத்த..
குழவியே! வா! என் மிருதுவான தளிரே! வா!

இங்கே,
பாசத்தை பாரபட்சமின்றி அள்ளி அள்ளி வழங்கும்
அட்சய பாத்திர மனம் படைத்தவர்களும் உண்டு..

இங்கே,
பார்வையாலே நம்மை பிணவறைக்கு வழியனுப்பும்
அடங்க அசுர மனம் படைத்தவர்களும் உண்டு..

நீயே,
அன்னாரின், பேச்சின் மொழிநடை புரிந்து கொண்டு..
பாசம் எது... வெளிவேசம் எதுவென அறிவாய் அமுதே!

இப்பூலோகத்தின் அழகை, மேலும் அழகூட்ட  உதித்த..
சேயே! வா! என் குளிர் முழு வெண் நிலவே! வா!

இங்கே,
உடன் வாழ் உயிரினங்களுக்கு, நன்மைகள் பல செய்யும்..
விரிந்து பரந்த மனம் கொண்டோர், சிலர் உண்டு..

இங்கே,
உனக்காக நான் இருக்கிறேன், என போலி நம்பிக்கை கொடுக்கும்,
சுயநலம் பிடித்த மனம் கொண்டோரும் உண்டு. 

நீயே,
அன்னாரின், உடல் மொழிநடை, நன்கு புரிந்து கொண்டு..
தெய்வகுணம் எது... பேய்க்குணம் எதுவென அறிவாய் சொர்ணமே!

குழந்தாய்!
நன்மைகளும் தீமைகளும் நிறைந்ததே.. இப்பூமி 
அதில் நீ செவ்வனே வாழ, நீயே கற்றுக்கொள்..

தேவதையே!
யாரோ ஒருவர்.. கைகொடுத்து காப்பர் என நம்பாதே..
உன் அறிவெனும் புத்தி கூர்மையால், நீயே உலகறிவாய்!

பொன்னே!
உன்னை காக்கும் கை, உன் அறிவாக இருக்கட்டும்
உன்னை காக்கும் கை, உன் அனுபவமாக இருக்கட்டும்

தங்கமே!
உன்னை நம்பி உன் இரு கரம் வீசி வீர நடை போடு..
உலகமே!! அழகாகும் உன் விசால .பார்வையிலே.. 


Online Reacher

Re: காக்கும் கரம்
« Reply #6 on: March 11, 2025, 02:46:23 PM »



மழையில் ஒரு மழலை...!
                                                      நினைகிறாள்


அன்பு காட்ட தாய் இல்லை
          வழிநடத்த தந்தையும் இல்லை..


மலர்கள் மீது நடக்க வேண்டிய பாதங்கள்
          மண்தரையில் காலனி இல்லாமல்..


வானம் இருள் சூழ இடிகள் இடிக்க
மேகம் கூட கண்ணீர் சிந்துகிறது..
 
இவள் கண்களில் வழியும் கண்ணீரை

                                                              மறைக்க..!


முதல் மாதம் கண் சிமிட்டி

                  இரண்டாம் மாத‌ம் புன்னகைத்து

ஆறாவது மாதம் தரையில் தவழ்ந்து

                  பத்தாவது மாதம் நடை பழகி..... !

தேவதை போல பார்த்து மகிழும்
                        பெற்றவர்களுக்கு மத்தியில்


உன்னை வரம் என்று அறியாத..! 
           இரு உயிர்கள் செய்த பிழையாள்
     
                                            விளைந்த நன்மை..!        

உன்னை அரவணைக்க நானே
                                                          வருகிறேன்...!!!


                                              இப்படிக்கு
                                                                 கடவுள்  
                     
« Last Edit: March 16, 2025, 02:08:16 PM by Reacher »

Offline mandakasayam

இருண்ட அறையில் அலறல் சத்தம் விழித்து பார்த்தால் அன்பு முத்தம் .  பாதி நிலா வண்ண நிறம்
பார்த்திராத பால் முகம் ..

பெண் குழந்தையா ஐயோ வேணாம்னு   சொன்னாங்க பல பேரு ,,  இப்ப உன்னைபோல வேணும்னு  ஊரே போகுது குழந்தை வரம்  கேட்டு நின்னு  ...

   எண்ணற்ற கனவுகள் ஏட்டிலே தொடங்கட்டும் நம்பிக்கையான உறவுகள் உன் பாதத்திலே தழவட்டும்,!!!!

உனது முன்னேற்றத்தை தடுக்க சிலர் மூடர் கூட்டங்கள் இருந்தாலும்  பகுத்தறிவால் அதைஉடைத்து விடு!

அநீதிக்கு எதிராக வீறுநடை போட்டு வென்ற மங்கையர்களின் வரலாறு உன்னை செதுக்கட்டும்!!!

தனித்து விட்டால் என்ன?   தன்னம்பிக்கை இழக்காமல் அடியெடுத்து வை இயற்கை சீற்றமே  வந்தாலும் உன்னை பாதுகாக்க
உனக்கான. உறவுகளின் பொற்கரங்கள் நிழலாக தொடரும்!!!!
 

  புதிய உலகின் இளவரசியே உனது பொற்பாதங்களால் புதுமைபெறட்டும் இப்பூமி !!!!!!   

« Last Edit: March 11, 2025, 03:51:17 PM by mandakasayam »

Offline Vethanisha

சாதனைகள் உண்டு பல படைத்திட
சோதனைகள்  உண்டு பல கடந்திட
இப்பிறவியில் பெண் மகளாய்
பிறந்திட்ட   உன் விதி !
கனவிலும் வேண்டும்  துணிச்சல்
இனி சீர்கொண்டு நடந்திட நீ !


பயணம் ஒன்றும் எளிதல்ல -உடன்
பயணிப்பவர்களோ  நிரந்தரம்  அல்ல
பயமோ !துயரமோ ! உன்னை நனைக்காமல்
உன் சிரம் காக்க போவது
தன்னம்பிக்கை  என்னும் பெரும் கரமே!

உன்னுள் உருவாகும் நம்பிக்கையே
உன் பயணத்தின் அஸ்திவாரம் ஆகும்
கற்க போகும் கல்வியே சமூகத்தில் நீ
வெற்றிநடை போட ஊன்றுகோல் ஆகும் 


அச்சம் தவிர் !
நிமிர்ந்து நில்!
 உன்னை நீ  நேசி! 
தொடர்ந்து செல் !
 
சான்றோர்களின் வாக்கும்
பெரியோர்களின் ஆசியும்
நேர்மறை எண்ணங்களும் 
 மேலோங்கி நிற்கும் போது 

அந்த பிரபஞ்சமும் உன்னை
பாதுகாக்கும்  தன் கரம் கொண்டு!   
 
வணங்கும் போது இறைவனாய் !
பகுத்தாலனுக்கு கொள்கையாய் !
 
« Last Edit: March 12, 2025, 09:37:56 AM by Vethanisha »

Offline Asthika

கள்ளமில்லா அன்பை
வெள்ளமாய் தரும்
ஜீவன்கள்!


கோபம் கூட
மறைந்து போகிறது
மழலையின் சிரிப்பில்

 பெண்

நளினம் நிறைந்த நீர்ப்படர்போல்,
நாணம் சுமக்கும் மலர்த்தோளாய்,
உலகம் சுமக்கும் உறுதியாய்,
உறவுகள் அரும்பும் உயிராக!

அமிழ்தம் சொரியும் அம்மாவாய்,
ஆதரவாகும் அக்காவாய்,
மௌனத்தில் கூட மொழியாய்,
மெல்லிய சின்னச் சிரிப்பாய்!

வெற்றி காக்கும் வீரமாய்,
விண்ணை தொடும் கனவாக,
காற்றாய் பறக்கும் சக்தியாய்,
காலம் கடந்த ஓர் வரமாய்!

பெண்மையைக் கொண்டாடும் இதயம்,
பாசத்தால் பூத்த புறாவாய்,
நிலவாய் மிளிரும் நிலைமையாய்,
நிலைக்கண்மணி நீயல்லவோ?

— பெண், நீ சக்தி!

  பெண் பாதுகாப்பு

அழகு மட்டும் அல்ல, உறுதி நீ!
அச்சம் இல்லா அசைக்க முடியா அரண்மனை நீ!
நடக்கும்போது நிமிர்ந்து நட!
நசுக்க வருபவரை நசுக்கி விட!

உன் குரல் ஒலிக்கட்டும், எதிர்த்து நிற்க!
நீதியைக் கேட்டிட, நீ பயப்படற்க!
உன் வருங்காலம் உன் கையில் தான்,
உன் விழிகள் எரியட்டும், தீயாய் வாளட்டும்!

இருட்டின் மீது ஒளியாய் நிற்க,
இச்சையின் மீது உள்ளம் உறுதியாக!
உன் பாதுகாப்பு உன் சக்தியில்,
உலகை வெல்வாய், நீ துணிவில்!

— பெண், நீ உனக்கே ஒரு காவல்!

  பெண்ணாய் பிறந்திடவே நீ
  மாதவம் செயதாய் ❤️ 

Offline Sugy

மழைத்துளி வந்தாலும், வாழ்க்கை நீந்தினாலும்,
கைவிரலால் அரவணைத்திடும் அன்னை வெள்ளி நிலா!
தூக்கி எடுத்து அடிமேல் நிறுத்தும் தந்தையின் தோள்,
தூய பாதுகாவளன் அவன், கனவிற்கே பாலம்!

தோழமையால் நனைந்து விட, நட்பின் நீராற்றில்,
சேர்த்து விடும் தோழன், சாய்விடாது கரம் கொடுக்கும்!
அண்ணன் தங்கை உறவோடு, சுடர் விளக்காய் நின்று,
தடங்கள் அகற்றி, நிழல் போலே துணை நிற்பார்!

ஆயுள் முழுதும் ஓரங்க வீசும் தேவர் கருணை,
அடர்த்தி வந்தே ஆடி வைக்கும் பக்தியின் மழை!
இவ்வையகப் போர்க்களத்தில், யாரும் இல்லை என்றாலும்,
இறைவன் கரம் பாதுகாப்பாக இருக்கட்டும் என்றென்றும்!

Offline SuBa

அப்பாவின் ஒரு சிறிய கை
அவள் உலகை வெளிச்சத்தோடு உலகை சுற்றி வருகிறாள்
அவள் அப்பாவின் நிழல் ஒரு கவசம் போன்றது
அவள் அப்பாவின் நிழல் ஒரு வழிகாட்டி போன்றது
அவள் அப்பாவின் நிழல் அன்பு என்றென்றும் வாழும் இடம்

அவள் அப்பா அவளின் உலகம்
அவள் அப்பாவின் அன்பு நங்கூரம் போல் வலிமையானது மற்றும் உண்மையானது
அவள் உள்ளத்தில் படபடக்கும் கனவுகளை அப்பா காண்கிறார்
அவள் எதிர்கலத்தின் இலக்கை அடைய அப்பா வழிகாட்டியாய் இருப்பார்

அவள் அப்பாவிடம் இருந்து கற்றுகொள்கிறாள் மென்மையாக இருப்பது எப்படி என்று
அவள் அப்பாவிடம் இருந்து கற்றுகொள்கிறாள் அணைவரிடமும் உயர்ந்து நிற்பது எப்படி என்று
அவள் அப்பாவிடம் இருந்து கற்றுகொள்கிறாள் உலகத்தை வெல்வது எப்படி என்று
அவள் அப்பாவிடம் இருந்து கற்றுகொள்கிறாள் வலிமையாக இருப்பது எப்படி என்று
அவள் அப்பாவிடம் இருந்து கற்றுகொள்கிறாள் திறமையாக பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி என்று
அவள் அப்பாவிடம் இருந்து கற்றுகொள்கிறாள் பிரகாசமாக இருப்பது எப்படி என்று


காலம் கடந்தாலும் வருடங்கள் பறந்தாலும்
அவளின் அப்பாவின் நிழல் எப்பொழுதும் இருக்கும்
அது ஒரு நிலையான காதல் மற்றும் ஆழமான பிணைப்பு
அப்பாவின் அன்பு எப்பொழுதும் ரகசியமானது
அப்பாவின் அன்பு எப்பொழுதும் ஆழமானது
அப்பாவின் அன்பிற்கு இணையே இல்லை