Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 368238 times)

Online Vethanisha

இவனோ அழையா விருந்தாளி..
வந்ததும் அட்டை போல் ஒட்டி கொள்ளும் கொலையாளி ..
என் கண்ணீரை ருசி பார்க்கும் பகையாளி ..
இருந்தும் பல உண்மைகளை உணர வைக்கும் உளவாளி ..

அடுத்து : உண்மை

 

Offline IniYa

நீங்கள் மற்றவர்களை சில
மணிநேரம் முட்டாளாக்கலாம்..
ஆனால் அவர்களை எல்லா
நேரத்திலும் முட்டாளாக்க
முடியாது.

உங்கள் கண்கள்
காணாதவற்றிற்காக உங்கள்
காதுகளை நம்ப வேண்டாம்.


அடுத்தது : திமிர்

Online Vethanisha

பொதுவில் கருத்து தெரிவித்தேன்
படித்த திமிர் என்றர்
தேவையை தானே பூர்த்தி செய்தேன்
சம்பாதிக்கும் திமிர் என்றர்
எதிர்த்து கேள்வி கேட்டேன்
கேட்க ஆள் இல்லா  திமிர் என்றர்


என் சாதனையும் தன்னம்பிக்கையும்
திமிர் என்றால்
ஆம்
என்றும் நான் அதிக திமிர் பிடித்தவள் தான் 😎

அடுத்தது : சுயநலம்

Offline BlueSea

பொது சிந்தையை அறவே அறுத்து மற்றவர் துயர் மற்றும் அவர்தம் ஷேம லாபங்களில் கூட பங்கு கொள்ள விரும்பா தன்னலம் மட்டுமே பெரிது என்று மனம் கொண்டுள்ள ஓர் சிந்தயே சுயநலம்....
தான், வாழும் காலங்களில் ஓர் சுவடின்றி துடைக்க செய்யும் சாதனமே சுயநலம்....!
இவ்வுலகை, விட்டு பிரியும் காலங்களின் கடைசி நிமிடங்களில் நம்மை சுற்றி நான்கு வஸ்துக்கள் கூட இருக்க விடா செய்யும் எண்ணமே சுயநலம்...!
நலமின்றி தான் இயன்று பெற்ற சுயத்தை வெறும் நிலையில்லா பொருட்களுக்காக விற்றுக்கொடுக்கும் அபத்தமே சுயத்தை இழந்து பெறுகின்ற நலம் ஆகும்....!


அடுத்த, வாக்கிய தொடர் : நிதானம்

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
எங்கும் வியாபித்திருக்கும்
காற்று தான்
நிதானமாய்
நம் நாசிக்குள் நுழைந்து
உயிரை தக்க வைக்கிறது

அதே காற்று தான்
நிதானத்தை இழந்து
சூறாவளியாய்
பல உயிர்களை
தாக்குகிறது

நிதானமாய் இருக்க
கற்றுக்கொள்ளுங்கள்
அது உங்களை நம்பி இருக்கும்
பல உயிர்களை
காக்கும்



அடுத்த தலைப்பு :
ஒவ்வொரு முறையும் நான்
எழுதி முடித்த பின்
எனக்குள் தோன்றும்
கவிதையா இது ?

அடுத்த தலைப்பு :! கவிதையா இது ?!?!?!

« Last Edit: July 15, 2024, 06:58:15 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Madhurangi

கவிதையா இது ???
இல்லை.. உன் கருவிழி கண்டு..
நீங்கா மையல் கொண்டு..
கவியறியா பித்தன் எழுதிய உளறல்..

கணநேர பார்வை வீசி  ..
என் கர்வமதை அழிக்கிறாய்..
ரெண்டு முழ மல்லிகை வாசம்..
நாசி ஏற்றி வதைக்கிறாய் ..

உன் சிணுங்கல் சிரிப்பில் அழகினிலே
மீளமுடியா போதை கொள்கிறேன் ..
உன் கரம்பிடிக்கும் நாள்
எண்ணி ராத்தூக்கம் கொல்கிறேன்..

அடுத்த வார்த்தை : பித்தன்

Offline Kavii

நிஜங்கள் தரும் சந்தோஷத்தை
விட நினைவுகள் தரும்
சந்தோஷம் அதிகம்..
அதனால் தான் நிஜங்கள்
நிலைப்பதில்லை நினைவுகள்
என்றும் அழிவதில்லை/color]


நிஜம்

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மிக அழகான நாட்கள் என்று
தனியாக ஏதுமில்லை
நாம் வாழும் ஒவ்வொரு நொடியும்
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு
கெடுதல் நேராமல்
முடிந்தால்
சிறு புன்னகையை
கொடுக்க முடிந்தால்
வாழும் நாள் எல்லாம்
அழகாகும் என்பது
நிஜம்

கனவில்
அவளுடன் வாழ்கிறேன்
நிஜத்தில்
அதை  கவிதை என
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்


பொய்
சொல்ல தெரியாத எனக்கு
கவிதை வராதென்பது
நிஜம்  :) :D :D





குழந்தை

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Yazhini

        நினைவு - நிகழ்காலத்தின் குழந்தை
     
நினைவே! இரக்கமற்ற தேவதையே!
உயிர்ப்பித்து கொண்டே மரணம் தரும்
இனிய அரக்கனே!
நிகழ்காலத்தின் குழந்தையே!

மகிழ்வை அள்ளிஅள்ளி தருபவனே!
காயம் ஏற்படுத்திய வலியை
பல்லாயிரம் மடங்காய் அளிப்பவனே!
சிந்தையை அழிப்பவனே!

கொடிய நண்பனே! இனிய எதிரியே!
வாழ்விற்கு உந்துசக்தியே!
பின்நோக்கி இழுக்கும் விசையே!

என் அமுதவிஷமே!
நித்திரைக் கொள்ளவிடாமல் உன்னுள்
எனை அழ்த்தும் கொடிய கலாபக்காதலனே!

எனது நிறைவே! வாழ்வின் எச்சமே!
நீயின்றி நானில்லை
நினைவின்றி வேறில்லை...



தொடர் தலைப்பு: அம்மா
« Last Edit: February 22, 2025, 11:32:20 AM by Yazhini »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
எழுதி எழுதி
களைப்படையா
கவிதை
அவள்

எந்த பாற்கடலை
கடைந்தாலும்
கிடைக்காத
அமுதம்
அவள்

ஓயாத
கடல் அலை போல
அவள் பணி
இருந்தும்
திகட்டாத
தேன் இன்பம் போல
அவள் அன்பு

இவளுக்கு நிகர்
இவ்வுலகில் இல்லை
அவள் தான்
அம்மா



அடுத்த தலைப்பு - உறவுகள்


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Online Vethanisha

சிலருக்கு
இது வரம்
சிலருக்கோ
வரமாய் அமைந்த சாபம்

நாளை
எனக்காகக்  கண்ணீர் சிந்த
இன்று
நான் சேர்த்து வைக்கும் பந்தம்


அடுத்து : மயில்

Offline Thooriga

எத்தனை எத்தனை வண்ணங்கள் உன்னிடம் ..?

மொத்த அழகும் சேர்த்து வைத்த முழுமையான அழகு நீ ..

உன்னை கண்டு வியக்காதோர் எவரேனும் இருக்கமுடியுமா என்ன ..?

மயிலினமே ..

நான் தினம் வணங்கும் என் கந்தனின் கையில் உன்னை பார்க்கையில் எனக்கும் ஆசையாக உள்ளது அடுத்த ஜென்மத்தில் நான் நீயாக பிறக்க வேண்டும் என்று..

அகில உலகத்தை தாங்கும் என் அப்பனை உன்னை போல் நான் தாங்கி கொண்டு அவனின் திருவடியில்  இருந்து.. இறந்து விட ஆசை...

வேல் உண்டு வினை இல்லை
மயில் உண்டு பயம் இல்லை


அடுத்து : நிலா

« Last Edit: March 14, 2025, 12:59:06 PM by Thooriga »

Offline Asthika

நிலா ....

நெருக்கம் இல்லாத நேசமாய்,
நிழலாய் நம்மை அணைப்பாய்,
நட்சத்திரங்கள் கூட பொறாமைப்பட,
நீயே எனக்கு துணையாய்..

தூரத்தில் இருந்தும் தளராதாய்,
துயரங்களில் துணையாக…
தீய நினைவுகள் நீக்கிவிட்டு,
தீண்டுகிறாய் ஒளியினால்…

பொன் நிறத்தில் புன்னகைத்து,
பூமிக்கு நீ தரும் பிரியா காதல்,
பழைய காதலர்கள் சொல்லும் கதைகள்,
பளபளப்பாய் நிற்கும் உன் தேடலில்…

நிலா, நம் கனவின் தோழி,
நினைவுகளை நீக்கும் ஒரு மாயம்,
நீலாக்கடலில் படிந்திருக்க,
நீ என்னுள் நிழலாகும் வரை…

— ✨ நிலா தோழி ✨



  அடுத்து...மழை
« Last Edit: March 14, 2025, 05:46:25 PM by Asthika »