Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 68694 times)

Offline Jithika

Answer -வாழைப் பூ


NEXT 🌹 அம்பலத்தில் ஆடுகிற அழகுப் பொண்ணுக்கு
      அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி🌹

Offline Thooriga

Answer: Mayil

NEXT: வெள்ளை நிறத்துக் கள்ளச் சாமியார்,
        கரையில் நின்று கடுந்தவம் செய்கிறார்.

Offline Jithika

Answer -கொக்கு

NEXT 🌹பட்டு ரோஜா மலர்ந்தது;
        கிட்டப் போனால் சுட்டது🌹

Offline Vethanisha

நெருப்பு

Offline MysteRy

What are the two major weapons used by Gandhi?


Note :

If the person forgot to place a question , the next person just put another question and continue the game🙏

Online RajKumar

காந்தி  சத்தியம் மற்றும் அகிம்சை ஆகிய இரண்டு ஆயுதங்களால் ஆங்கிலேயர்களின் வலிமையை எதிர்த்துப் போராடினார்


பூ பூக்கும், காய் காய்க்கும், ஆனால் பழம் பழக்காது அது என்ன

« Last Edit: February 01, 2025, 10:22:52 PM by RajKumar »

Offline Vethanisha

Hmmmm... Thengai or murunggai kaai 😅

Next : Poo poopathu kannuku teriyum aanal kaai kaipathu kannuku teriyathu

Online RajKumar

Vethanisha sis தேங்காய் சரியா சொல்லிட்டிங்க
பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?
விடை.    வேர்க்கடலை



அடுத்த விடுகதை
மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால் வலை பின்னுவானாம், இவன் யார்?

Offline Jithika

சிலந்தி

NEXT 🌹கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

Offline Thooriga

Answer : காகம்

Next: வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

Online RajKumar

சோளம்





அடுத்த விடுகதை
விடிய விடிய பூந்தோட்டம். விடிந்து பார்த்தால்
 வெறுந்தோட்டம். அது என்ன?

Offline Jithika

Answer -நட்சத்திரங்கள்

NEXT 🌹அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?🌹

Online RajKumar

தண்ணீர்





அடுத்த விடுகதை.     கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை...

Offline Jithika

ஆமை


NEXT 🌹ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார்? 🌹

Online RajKumar

தீக்குச்சி





 அடுத்த விடுகதை.     வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?