சில
உணர்வுகளும்
உறவுகளும்
"பூ" போல
உதிர்ந்தாலும்
வாசனைகளும் ,
வண்ணங்களும்
நினைவில்
வாழ்நாள் முழுவதும்
கூட வரும்
வலித்து, பிய்த்து எரிந்தும் கூட
வாசத்தை வீசி செல்லும்
பூக்கள் போல
சில உறவுகளின்
நினைவுகள்
வெற்றுக்காகிதமாய்
இருந்த என் வாழ்க்கை
வண்ணம் தீட்டினாய்
இன்று
கசக்கி வீசி
சாலையில்
வண்டிகளின் இடையில்
அலைந்தோடும்
காகிதம் போல
என் வாழ்க்கை
அல்லாடிக்கொண்டிருக்கிறது
சூழ்நிலைகள்
சில சமயங்களில்
எதையுமே
பகிர விடுவதில்லை.
நீயாவது நிம்மதியாக
வாழ்ந்துவிடு என்று
விலகி செல்ல
கற்றுக்கொடுத்து
விடுகிறது
எங்கோ ஒருத்தி
எனக்காய்
சுவாசித்து கொண்டு இருக்கிறாள்.
நான் இங்கு
உயிரோடு
வாழ்கிறேன்
அவ்வளவே
விலகாமல்
உடன்வரும்
உறவொன்று
யாருக்கும் இங்கு
எளிதாய்
வாய்த்திடுவதில்லை.
****JOKER****