ஓர் ஆணுக்கும்
பெண்ணுக்கும்
இடையேயான நட்பு
சற்று விசித்திரமானது தான்
பரஸ்பரம் அக்கறை
சற்று கூடுதலாய் இருக்கும்
கூடுமானவரை
நட்பு அவரவர்
திருமண வாழ்வு வரையே
தொடர்ந்திருக்கும்
எப்போதும்
பரஸ்பரம் ரகசியம்
பகிரப்பட்டாலும்
கடைசி வரை அது
காக்கப்படும்
அன்பான மகளாகவும்
செல்லமான சகோதரியாகவும்
உயிரான மனைவியாகவும்
யார் வந்த போதும்
ஆணுக்கு
அந்த பெண் நட்பு
சற்று அலாதியான சுகம் தான்
பொறுக்கி, லூசு
என்று செல்லமாய்
திட்டுகையில் புன்னகையே
நம் உதட்டில் தங்கும்
வலியோடு
வாழ்பவர்க்கு
நட்பு தான் சுகம்
பிறப்பால் தொடரும்
சில உறவுகள் போல்
அல்லாமல்
சில உறவுகள்
பழகி பார்த்தால் தெரியும்
அதன் அழகு
அப்படி ஒன்று தான்
ஆண் பெண் நட்பு
கண்கள்
பார்த்து பேசினால்
கவலை மறக்க செய்கிறாள்
உன் கைகள் கோர்த்து பேசினால்
நம்பிக்கை விதைத்து செல்கிறாள்
எத்தனை பிறவி எடுத்தாலும்
வேண்டும் நீயே என்
தோழியாய்
****JOKER***